Motivation Image
Motivation ImageImage credit - pixabay.com

நன்றி சொல்ல நேரமில்லையா? அடடா!

-மரிய சாரா

ன்றி எனும் உணர்வு பொதுவாகவே எல்லோருக்கும் இருக்கவேண்டிய மிக உயரிய பண்பாகும். அதிலும்,  மற்றவர் நமக்கு செய்த உதவியை மறக்காமல் என்றென்றைக்கும் நன்றி உள்ளவர்களாக இருப்பது என்பதே மிகப் பெரிய பண்பாகும். பரபரப்பான இன்றைய நிலையில் மனிதனுக்கு எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்வது மிக கடினமான ஒன்றாகவே உள்ளது.

நின்று மனதார நினைத்து நன்றி என்று சொல்வதற்குகூட நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கிறோம். நம் பெற்றோர், நம் தாத்தா, பாட்டி நமக்கு கற்றுக்கொடுத்த பலவற்றை இன்று நாம் நம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறோமா என ஒரு நிமிடம் ஆலோசனை செய்துபார்த்தால் பதிலாக கிடைப்பது இல்லை எனும் ஒரு சொல்தான்.


பெற்றோர்கள்தான் பிள்ளைகளின் முதல் ஆசிரியர்கள். பெற்றோர்களைப் பார்த்துத்தான் பிள்ளைகள் அனைத்தையும் கற்றுக்கொள்கின்றனர். அது நன்மையானாலும் சரி தீமையானாலும் சரி, பிள்ளைகளுக்கு அனைத்தும் பெற்றோரிடமிருந்தே முதலில் கிடைக்கின்றன என்பதால் பெற்றோர் களுக்குத்தான் முதலில் அனைத்து நல்ல குணங்களும் அமைந்திருக்க வேண்டும்.

பெற்றோர் சரியாக நடந்துகொண்டால் பிள்ளைகள் தானாக சரியாக நடப்பார்கள். ‘இதை செய்’, ‘அதை செய்’ என வார்த்தையில் சொல்வதைவிட செயலில் வாழ்ந்துக்காட்டினால் அது குழந்தைகளின் மனதில் ஆழமாய், அழியாமல் பதிந்திடும். பெரியவரோ சிறியவரோ அவர்கள் செய்த நன்றியை நாம் என்றைக்கும் உயிர் உள்ளவரை மறக்கக்கூடாது.

யாரும் இல்லை, எல்லாம் முடிந்தது, இனி ஏதும் இல்லை என விளிம்பில் நிற்கும் அந்தச் சமயம் நமக்கு ஒருவர் உதவிக்கரம் நீட்டினார் என்றால் அந்த உதவியை ஆயுள் உள்ளவரை இதயத்தில் பத்திரமாய் கொண்டிருத்தல் வேண்டும். அப்படி அல்லாமல் மறந்து நன்றிகெட்ட தனத்தை பரிசாய் தருபவர்களுக்கு என்றுமே சிறந்த வாழ்வு என்பது கிடைக்காது.

சரியான நேரத்தில் நமக்கு கைக்கொடுக்கும் அந்த இன்னொரு நபரின் உதவி சிறியதோ பெரியதோ, ஆனால் அதன் பலன் மட்டும் நமக்கு அந்த நேரத்தில் மிகப்பெரிய ஈடில்லா வரமாய் அமைந்திருக்கும். அந்த உதவிக்கு ஈடாக கொடுக்க இந்த உலகத்தில் எதுவுமே இன்னும் அந்த இறைவனால்கூடப் படைக்கப்படவில்லை. இனி படைக்கப்படவும் போவதில்லை.

இதையும் படியுங்கள்:
சமைத்து உண்பதால் உடலுக்கு அதிக ஆரோக்கியம் தரும் 10 காய்கறிகள்!
Motivation Image

எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் ஒருவர் நமக்கு உதவி செய்யும்போது, அவரிடம் ஒரே ஒரு எதிர்பார்ப்பு மட்டும் நிச்சயம் இருக்கும். அவர் உதவியதால் நாம் நன்றாக இருக்கிறோம் என்பதைதான் பார்க்கவேண்டும் என்கிற உணர்வுதான் அது. அப்படி நமக்கு ஏற்ற காலத்தில் உதவும் உள்ளங்களுக்கு நாம் தரக்கூடியது நன்றி உணர்வுடன் கூடிய வார்த்தை மட்டுமே.

நமது பிள்ளைகளுக்குச் சிறு வயது முதலே நாம் கொடுக்கும் நல்ல பண்புதான் நன்றி மறவாமை. நாம் இதைப் பின்பற்றுவதன் மூலம் நமது பிள்ளைகளுக்கு இந்தக் குணத்தை எந்தச் சிரமமும் இல்லாமல் நாம் கடத்திவிட முடியும்.

logo
Kalki Online
kalkionline.com