சமைத்து உண்பதால் உடலுக்கு அதிக ஆரோக்கியம் தரும் 10 காய்கறிகள்!

சமையலில் தக்காளி
சமையலில் தக்காளிhttps://saratharecipe.blogspot.com

சில காய்கறிகளை சமைக்காமல் பச்சையாக உண்பதால் அவற்றிலிருந்து அதிகளவு ஊட்டச்சத்துக்கள் பெறலாம் என்று கூறுவதுண்டு. இங்கு நாம் 10 வகை காய்கறிகளை சமைத்து உண்பதால் அவற்றிலிருந்து கிடைக்கும் அதிகளவு ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

தக்காளியை சமைக்கும்போது அதிலிருந்து கிடைக்கும் லைக்கோபீன் என்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டின் அளவு அதிகரிக்கிறது. இது சில வகை கேன்சர் மற்றும் இதய நோய் உண்டாகும் அபாயத்தைத் தடுக்க உதவுகிறது.

கேரட்டை சமைப்பதினால் அதன் கடினமான செல்லுலார் சுவர்கள் உடைக்கப்படுகின்றன. இதனால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் முழுமையாக உடலுக்குள் உறிஞ்சப்பட ஏதுவாகிறது.

பசலைக் கீரையில் உள்ள ஆக்ஸாலிக் (Oxalic) அமிலத்தின் தலையீட்டால் உடல் கால்சியம் மற்றும் இரும்புச் சத்தை உறிஞ்சுவதில் குறை ஏற்படுகிறது. இந்தக் கீரையை சமைப்பதின் மூலம் ஆக்ஸாலிக் அமிலத்தின் அளவு குறைகிறது. அதன் மூலம் உடலுக்கு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் அதிகளவில் கிடைக்கிறது.

ஆஸ்பராகஸை சமைப்பதன் மூலம் அதிலுள்ள ஃபொலேட் போன்ற உயிர்ச் சத்துக்கள் அதிகளவில் கிடைக்கின்றன. காளான்களை சமைக்கும்போது அவற்றின் கடினமான செல்லுலார் சுவர்கள் உடைக்கப்பட்டு அதிலுள்ள எர்கோதியோனைன் (Ergothioneine) மற்றும் செலீனியம் போன்ற சத்துக்கள் அதிகளவில் உடலுக்குள் உறிஞ்சப்படுகிறது.

பெல் பெப்பரை சமைப்பதால் அதிலுள்ள பீட்டா கரோடீன் மற்றும் லைக்கோபீன் போன்ற ஊட்டச்சத்துக்களின் அளவு அதிகரிக்கிறது. மேலும் அவற்றின் செரிமானமும் சுலபமாக நடைபெறுகிறது.

புரோக்கோலியை சமைப்பதன் மூலம் அதிலுள்ள சல்ஃபொரோபேன் (Sulforophane) போன்ற ஊட்டச்சத்துக்களின் அளவு அதிகரிக்கிறது. இதனால் கேன்சர் நோய் வரும் அபாயம் தடுக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பணத்தை வைத்து நாம் விளையாடுகிறோமா? இல்லை பணம் நம்மை வைத்து விளையாடுகிறதா?
சமையலில் தக்காளி

காலே இலைகளை சமைப்பதால் அவற்றின் கடினமான நார்ச்சத்துக்களை உடைப்பதற்கு உதவுகிறது. அதனால் அவற்றின் செரிமானம் சுலபமாகிறது. மேலும், காலே இலைகளிலுள்ள கொய்ட்ரோஜென் (Goitrogen) என்ற கூட்டுப்பொருளின் அளவு குறைகிறது.

பூசணிக்காயை சமைப்பதால் அதன் கடினமான நார்ச்சத்துக்கள் நன்கு உடைக்கப்பட்டு சுலபமான செரிமானத்திற்கு வழி வகுக்கும். மேலும் இக்காயிலிருந்து கிடைக்கும் பீட்டா கரோட்டின் உள்ளிட்ட உயிர்ச் சத்துக்களின் அளவும் அதிகரிக்கும்.

சுக்கினி (Zucchini) என்னும் சீமை சுரைக்காயை சமைப்பதால் அதன் கடினமான நார்ச்சத்துக்கள் நன்கு உடைக்கப்பட்டு சுலபமான செரிமானத்திற்கு வழியாகிறது. மேலும் இதிலுள்ள ஆக்ஸலேட் என்னும் கூட்டுப்பொருள், நம் உடல் கால்சியம் சத்தை உள்ளுறிஞ்சும்போது தலையிட்டு குறைபாடு உண்டுபண்ணும் குணம் கொண்டது. இக்காயை சமைக்கும்போது ஆக்ஸலேட் அளவு கணிசமாகக் குறைகிறது.

எனவே, மேற்கூறிய காய்கறிகளை சுவையாக சமைத்து உண்போம்; சூப்பரான ஆரோக்கியம் பெறுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com