முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை இந்த உலகில்!

Motivation aricle
Motivation aricle
Published on

னிதர்களால் முடித்துக் காட்டப்பட்ட பல சாதனைகள் அதற்கு முன் அந்த முயற்சியில் ஈடுபட்டவர்களால் முடியாது என்று கைவிடப்பட்ட காரியங்கள்தான். எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏற பல நாடுகளில் இருந்தும் மலையேறும் குழுவினர் வந்தார்கள். அவர்களுக்கு சுமை தூக்கும் கூலியாக அவர்களுடன் மலையேறிச் சென்றவர்தான் டென்சிங்.  நேபாள நாட்டுக்காரன். திண்ணை பள்ளிக்கூடம் கூட சென்று படிக்காதவன்.

மலையேற வந்தவர்களுடன் அவனும் அவர்களின் மூட்டை முடிச்சுகளை முதுகில் சுமந்து கொண்டு மலையேறிச் செல்வான். கடுங்குளிர், பனிப்புயல் என்று பல்வேறு இயற்கை சீற்றங்களை எதிர்த்து அந்த குழுவினர் எல்லா துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு மலை ஏறுவார்கள். அவர்கள் கொடுக்கிற கூலிக்காகத்தான் டென்சிங்கும் அந்த துன்பங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு அவர்களோடு மலையேறினான். ஆனால் எந்த மலையேறும் குழுவினராலும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை எட்டிப் பிடிக்க முடியவில்லை. டென்சிங்கின் கண் முன்னாலேயே அவர்கள் ஆயிரம் அடி பள்ளத்தில் சறுக்கி விழுந்து செத்தார்கள்.

பிறகு அடுத்து ஒரு குழு வரும். இம்முறை நாங்கள் ஏறிக் காட்டுவோம் என்று சவால் விட்டு மலையேற தொடங்குவார்கள். வழக்கம்போல டென்சிங்கும் அவர்களுடன் கூலித் தொழிலாளியாக மலை ஏறுவார். அதே இடர்பாடுகள்தான்.

ஆனால் இறுதியிலே ஒரு மனிதர் வந்தார்.  அவர் பெயர் ஹில்லாரி. அவர் நான் எவரெஸ்ட் உச்சியை எட்டிப் பிடித்து அதன் தலையில் கால் பதித்து வெற்றி கொடி நாட்டுகிறேன் என்றார்.  டென்சிங்குக்கு நம்பிக்கை இல்லை ஆனால் என்ன செய்ய? குடும்ப கஷ்டம் காரணமாக அவருடன் சேர்ந்து மலையேற ஆயத்தமானான் டென்சிங்.

இம்முறை ஹில்லாரி எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் ஏறி வெற்றி கண்டார். தன்னோடு வந்த டென் சிங்கையும் கை கொடுத்து தூக்கிவிட்டு அவனையும் எவரெஸ்டின் உச்சி மீது ஏறி நிற்கச் செய்தார்.

உலக சாதனையை தான் மட்டும் செய்ததோடு அல்லாமல் தன்னோடு பை தூக்கிக் கொண்டு வந்த கூலிக்காரன் என்று தாழ்வாக எண்ணாமல், டென்சிங்கையும் எவரெஸ்ட் உச்சியில் ஏற்றி உலக சாதனை புரிந்த பெருமையை,  முதன்முதலாக உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் உச்சியை அடைந்து ஏறி நின்ற பெருமையை டென்சிங்கிற்கும் வழங்கினார் ஹில்லாரி.

இதையும் படியுங்கள்:
லட்சியத்தை நோக்கிய பயணத்தில் அலட்சியங்கள் ஒரு பொருட்டல்ல!
Motivation aricle

தனக்கு முன்பும், தன்னோடும் எவரெஸ்ட் ஏற முயன்று இயலாமல் ஏமாற்றத்துடன் திரும்பியதை எண்ணி டென்சிங் மனம் சோர்ந்து விடவில்லை. அடுத்தடுத்து முயற்சி செய்தவர்களுக்கெல்லாம் தானும் ஈடு கொடுத்து, எவரெஸ்ட்டை அடையும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டான் ஒருநாள் வெற்றிக்கனியை எட்டிப் பிடித்தான்.

டென்சிங்கிற்கு 'முயன்றால் முடியும்' என்கிற வெற்றி மனப்பான்மை இருந்ததோ இல்லையோ,'வெற்றி பெற முடியாது' என்கிற தோல்வி மனப்பான்மை மட்டும் அவனுக்கு ஏற்படவே இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com