
எளிமையே மகிழ்ச்சி தரும். ஆடம்பரங்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். எளிமையான வாழ்க்கை வாழ்வது என்பது மகிழ்ச்சியையும் மன நிம்மதியும் தரும். அதிக ஆசைகள், தேவைகள் இருந்தால் அதை அடைவதற்காக நிறைய மெனக்கிட வேண்டும். இதனால் நம் மனநிம்மதி பறிபோகும் வாய்ப்புகள் அதிகம். ஆடம்பரமற்ற வாழ்க்கையில் பணம் மற்றும் விலை மதிக்க முடியாத நேரத்தையும் வேறு பயனுள்ள விஷயங்களுக்கு செலவிட முடியும்.
எளிமையாக வாழ்வது சமுதாயத்தில் நமக்கான மரியாதையையும், மதிப்பையும் நல்லுறவையும் பெற்றுத்தரும். எளிமையான வாழ்வில் பொருட்களைவிட மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் பெற முடியும். எளிமை நேர்மை இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. எளிமையான வாழ்க்கை நம்மை நேர்மையாக நடந்துகொள்ள தூண்டும்.
எளிமையே மகிழ்ச்சி. எளிமையாக வாழ்வது என்பது குறைவான விஷயங்களுடன், வசதிகளுடன் வாழ்க்கையை வாழ தேர்ந்தெடுப்பதும், அத்தியாவசிய மானவற்றை அதாவது மிகவும் தேவையானவற்றில் மட்டும் கவனம் செலுத்துவதுமாகும். வாழ்க்கையின் பல விஷயங்களில் அதிகப்படியான தேவைகள் இல்லாமல், எளிமையாக வாழ்வதில்தான் மகிழ்ச்சி நிறைந்திருக்கிறது. ஆடம்பரங்கள் மற்றும் தேவையற்ற பொருட்கள் இல்லாமல் எளிய வாழ்க்கை முறையை கடைபிடிப்பது உண்மையான மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
எளிமையே இனிமை. எளிமையின் மூலம் மற்றவர்களுடன் நல்ல உறவுகளை வளர்த்துக்கொள்ள முடியும். எளிமையான வாழ்க்கையில் தேவைகள் குறைந்து வாழ்க்கையில் ஒரு திருப்தியும் சந்தோஷமும் நிலைக்கும்.
இதுவே சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும். எளிமையே மகிழ்ச்சி என்பது வெறும் தத்துவம் அல்ல; அது ஒரு வாழ்வியல் முறை. எளிமையாக இருப்பதன் மூலம் சந்தோஷம், அமைதி, திருப்தி போன்ற உணர்வுகள் அதிகரித்து நம் மன நலனை பேணி பாதுகாக்கும்.
மகிழ்ச்சி என்பது வெளிப்புற சூழல்களை சார்ந்தது அல்ல. எளிமையான வாழ்க்கையின் மூலம் ஒரு ஆனந்தமான, அமைதியான சூழல் வெளிப்புறத்திலும், மனதிலும் ஏற்படும். இதை அழகாக கண்டு உணரலாம். மிதமிஞ்சிய ஆசைகளும், தேவைகளும் அதிகரிக்க அதிகரிக்க நம் மனதில் அமைதி என்பது குறைந்து விடும். வாழ்க்கையை எளிமையாக ஆக்குவதன் மூலம் அல்லது வாழ்வதன் மூலம் மன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியுடன் வாழலாம்.