நமது உள்ளுணர்வும் தொழில் வெற்றியும்!

Motivation image
Motivation imageImage credit - pixabay.com

னிதன் தயார் நிலையில் இருக்கும்போது திடீரென்று தோன்றும். இதுதான் உள்ளுணர்வு. விஞ்ஞானிகளுக்கும் இப்படித்தான் ஏற்பட்டதாம். சில சமயம் நமது உள்ளுணர்வு நமக்கு ஏற்றதை சொல்கிறதா அல்லது அது நம் மனதின் ஆசையா என்று வித்தியாசம் புரிவதில்லை.

உதாரணமாக திருப்பூரில் ஒரு நிறுவனம் மாதம் 3000 ரூபாய் கட்டினால் பாதி விலையில் கார் கிடைக்கும், பைக் மற்றும் குளிர்சாதனப் பெட்டி கிடைக்கும் என்று விளம்பரம் செய்தார்கள். முதலில் இரண்டு மூன்று பெரிய மனிதர்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் பரிசினை வழங்கினார்கள். சாதாரண மனிதன் இதை கடவுள் ஏற்பாடு என்று நம்புகிறான். இது அப்படி இல்லை இரண்டு கொள்ளையர்கள் திட்டம் போட்டு நான்கு மாதத்தில் கோடிக்கணக்கில் பணம் கிடைத்து பிறகு ஆட்கள் காணாமல் போய்விட்டார்கள். உள்ளுணர்வு என்று நம்பி சிலர் இப்படி மோசம் போகிறார்கள்.

இந்த உலகில் திடீர் இட்லி புளியோதரை செய்பவர்கள் திடீர் பணக்காரன் ஆக முடியாது. ஸ்டாக் மார்க்கெட்டிங்கில்  லிவர்மூல் என்பவர் தொட்டதெல்லாம் பொன்னாயிற்று. ஒரு நிறுவனத்தின் பங்கை குறைந்த விலைக்கு வரும்போது வாங்குவார். அவர் வாங்கிய பின் அந்த நிறுவனத்திற்கு பெரிய வெளிநாட்டு ஆர்டர் கிடைக்கும். உடனே வாங்கிய பங்குகளின் விலை எக்கச்சக்கமாக உயரும். இதனால் இவர் பெரும் பணக்காரர் ஆனார். பங்கு வியாபாரம் செய்து பணக்காரர் ஆனார். துல்லியமாக எதையும் கணிக்கும்  அசாதாரண தன்மை அவரிடம் இருப்பதாக எல்லோரும் புகழ்ந்தார்கள். நாளாக ஆக அவரும் இதை நம்பினார்.  முடிவில் ஒருநாள் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு செத்தார். அவர் இறந்தபோது அவருக்கு ஏகப்பட்ட கடன் பிரச்னைகள் இருந்தன.

அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடிக்கும்.  இதுதான் நடந்தது. அமெரிக்க ஜனாதிபதியாக  ஒரு கத்தோலிக்கர் அதுவரை அங்கு யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஜான் கென்னடியை எல்லோரும் அதிர்ஷ்டசாலி  என்று எழுதின. அழகான மனைவி புத்திசாலி குழந்தைகள். என் குடும்பம் எல்லா பதவியிலும் வெற்றி பெற்றவர். அவர் எதைத் தொட்டாலும் பொன்னாகும்  என பத்திரிகைகள் எழுதின. அவரும் அதை உண்மை என நம்பினார்.

இதையும் படியுங்கள்:
ஆட்டுப்பால் அருந்துவதால் ஒவ்வாமை ஏற்படுமா?
Motivation image

அண்டை நாடான க்யூபாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியைப் பிடித்த போது க்யூபா மக்கள் அந்த ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அமெரிக்க அரசாங்கம் க்யூபாவிற்கு அமெரிக்க படையை அனுப்பியது. அந்த படை பாரசூட்டிலிருந்து ஒரு சதுப்பு நிலத்தில் இறங்கி மாட்டிக் கொண்டது. இது கென்னடிக்கு பெரிய தோல்வி. உள்ளுணர்வு என்பது உண்மை. ஆசையும் இறுமாப்புடன் நம் கண்களை மறைக்கும்போது உள்ளுணர்வு வெளிப்படுவதில்லை. ஆசையும் இறுமாப்பும் மட்டுமல்ல. தொழிலில் ஒரு மனிதனை நியாயமற்ற முறையில் குழி பறிப்பது, நியாயமற்ற முறையில் திடீர் பணக்காரர்களாக வேண்டும் என்ற எண்ணமும்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com