ஆட்டுப்பால் அருந்துவதால் ஒவ்வாமை ஏற்படுமா?

ஆட்டுப்பால்...
ஆட்டுப்பால்...

யற்கை மருத்துவ முறைகளில் பெரும் ஈடுபாடு கொண்ட தேசத் தந்தை மகாத்மா காந்தி விரும்பி அருந்தியது ஆட்டுப்பால் என்பதையும், நோயின்றி ஆரோக்கியத்துடன் அவர் வாழ்ந்ததற்கு ஆட்டுப்பாலும் முக்கிய காரணம் என்பதையும் கேள்விபட்டிருப்போம். ஆட்டுப்பாலின் தாய்ப்பாலின் சத்துக்கள் நிறைந்து இருப்பதால், மாட்டு பாலை அருந்துவதால் சிலருக்கு ஏற்படும் ஒவ்வாமை ஆட்டுப் பால் அருந்துவதால் ஏற்படுவதில்லை. மேலும், குழந்தைகளுக்கு சிறந்த ஊட்டச்சத்து இதில் உள்ளது.

ஆட்டுப் பாலில் 327 மி.கி அளவு கால்சியம் உள்ளது. இது எலும்பு மற்றும் பற்களுக்கு மிகுந்த வலிமையைக் கொடுக்கிறது. எலும்பு தேய்வு என்னும் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படாமல் தடுக்கிறது. ஒரு கப் ஆட்டுப் பாலில் 35% - 40% கால்சியம் கிடைக்கிறது.

ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுத்து இதயத்துக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. அது மூலமாக மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வராமல் தடுக்கப்படுகிறது. பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், ரத்த நாளங்கள் தளர்வடைய செய்து கார்டியோவாஸ்குலர் அமைப்பைச் சீராக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியைத் தரக்கூடிய செலினியம் என்னும் சத்து ஆட்டுப் பாலில் இருப்பதால் நோய் இன்றி வாழ துணை செய்கிறது. உயிர் சத்துகளாகிய புரதம், பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் பி,பொட்டாசியம், செலினியம், போன்ற சத்துகளும் இதில் அடங்கியுள்ளன.

ஆட்டுப் பால் முடி வளர்ச்சிக்கு ஒரு சிறந்த மூலப் பொருள் ஆகும். இதிலிருக்கும் வைட்டமின் பி, முடியின் வறட்சித் தன்மையைக் கட்டுப்படுத்துகிறது. மயிர்கால் மற்றும் உச்சந்தலையில் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச் சத்துகளை எடுத்து செல்வதற்குத் தேவையான சிவப்பு ரத்த அணுக்களின் வளர்ச்சிக்கு இது வழி வகுக்கிறது.

மூளை வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் மிக முக்கியமான, 'லினோலெயிக்' அமிலம் ஆட்டுப் பாலில் அதிகம் உள்ளது. இதில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆட்டுப் பாலில் முகம் கழுவினால் முகம் பொலிவாக இருக்கும்.

வெள்ளாட்டு பாலானது சித்த மருத்துவத்தில் ஏராளமான மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

கல்லீரல், மண்ணீரல் நோய்களினால் வருந்துபவர்களுக்கு வெள்ளாட்டு பாலை உணவாகக் கொடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
வெற்றியைத் தடுக்கும் பயத்தை உதறித் தள்ளுங்கள்!
ஆட்டுப்பால்...

வெள்ளாட்டு பாலுடன் நீர் சேர்த்து காய்ச்சி கற்கண்டு தூள் சேர்த்து காலை, மாலை, குடித்து வந்தால் கப நோய்கள் குணமாகும்.

ஆடுகள் பசுமையாக உள்ள இலைத் தழைகளையும் புற்களையும் அதிகமாக உண்பதால் நச்சுத்தன்மை அற்ற பால் கிடைக்கிறது.

கண்பார்வை ஆரோக்கியத்திற்கு ஆட்டுப் பாலில் உள்ள ஊட்டச்சத்தான வைட்டமின் ஏ உதவுகிறது. வறண்ட கண்களுக்கு மென்மையான ஈரப்பதத்தைக் கொடுக்கிறது. கண் தொற்றுகளுக்கு இரவு படுக்கைக்கு முன் ஒரு சுத்தமான துணியைப் பயன்படுத்தி ஆட்டுப் பாலில் முக்கி கண்களில் ஒற்றடம் கொடுக்கலாம்.

இத்தனை சத்து மிகுந்த ஆட்டுப்பாலை நாமும் அருந்தி சுகம் பெறலாமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com