
மனிதனை அலைக்கழிக்கும் ஒன்று கவலை. ஒரு காரியம் செய்யும் முன் பயமும் கவலையும் ஏற்படுகிறது. சுறுசுறுப்பாக இருப்பதன் மூலமாக கவலையிலிருந்து விடுதலை பெறலாம். பலருக்குக் கவலைபடுவது ஒரு பொழுது போக்காக இருக்கிறது. வெளியூருக்கு போவதற்கு முன் கதவை பூட்டினேனா? கோவில் சென்றால் செருப்பு பத்திரமாக இருக்குமா என்ற கவலைகள் உண்டு. கவலைப் படுபவர்கள் பிறரது கவனத்திற்காக அரவணைப்புக்காக ஏங்குகிறார்கள் என மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். நெருக்கடியான பரீட்சைக்குத் தயாரான மாணவன் ஒருவன் மருத்துவரிடம் சென்று என் இதயமே நின்றுவிட்டதுபோல் இருக்கிறது என்று கூற மருத்துவரோ" என் இதயம் ஒரு வாரமாக ஓடவில்லை. அத்தனை பிரச்னைகள்" என்றார்.
பலர் கிடைக்காததை எண்ணி கவலைப்படுவார்கள். கவலைக்கு மாற்று நமக்கிருக்கும் வசதிகளையும் வாய்ப்புக்களையும், உடல் நலம் மற்றும் நம் குடும்பத்தைச் பற்றிய நல்ல விஷயங்களை எண்ணுவதாகும். அதற்கு நாம் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும். பலர் தங்கள் வாழ்க்கையை என்றும் அனுபவிப்பதில் லை. மகிழத்தெரிந்தால்தான் மகிழ்ச்சி கூடும்.
அமைதியான இரவில் ஒரு தவளை கொடுக்கும் குரல் ஏதோ பெரிதாக உலகமே கத்துவதாக தோன்றும். அதே போல்தான் சிறு கவலையும். ஒரு சிறு கவலை மனிதனின் மனநிம்மதியை அழிக்கப் போதுமானது. இதேபோல் கோபம் பொறாமை, பேராசை போன்ற எண்ணங்களும் நம் சக்தியை வடித்து விடுகின்றன. அதற்கு மாறாக அன்பு , கருணை, நட்பு போன்ற உணர்ச்சிகளை உள்ளே விட்டுப் பாருங்கள். பொங்கும் நீரூற்று போல் இனிமையாவதை உணர்வீர்கள்.
சூழ்நிலைதான் முந்துறும் என்கிறது சிலப்பதிகாரம். ஒரு நாள் முந்திக் கொண்டு தீய பலனைக் கொடுக்கும் என்பதுதான் உண்மை. நல்வினை நல்ல பயனையும் தீவினை தீய பலனையும் தருகின்றன. நம்மில் பலர் தீய எண்ணங்களின் சுமைதாங்கியாக நம் மனதை வைத்திருக்கிறோம். தீய எண்ணங்களை அகற்றுங்கள். தீமை செய்வோரை மன்னியுங்கள்.
உங்கள் மனம் சுமை குறைந்து லேசாவதையும் நாளடைவில் சூழ்நிலையில் மாற்றங்கள் ஏற்படுவதை உணர்வீர்கள். இரவில் படுக்கப் செல்லுமுன் வெறுப்பவர்களை, பிடிக்காதவர்களை மன்னித்துவிட்டுப் படுக்கப் செல்லுங்கள். மனம் அமைதியாக உறங்கும். மனதின் ஆக்கபூர்வ சக்திகளுக்கு இது வழி செய்யும்.