சுருக்கமாகப் பேச நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

Motivational articles
Motivational articles
Published on

ப்பொழுது எல்லாம் போனில் பேசுபவர்கள் சட்டென்று பேசி முடித்து வைப்பது இல்லை. நீண்ட நேரம் தேவையில்லாதவையெல்லாம் பேசிவிட்டு தேவையானதை விட்டு விடுவதும் நடக்கிறது. ரத்தின சுருக்கமாக பேச என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம். 

முக்கியமாக போனில் யாரிடம் தொடர்பு கொண்டாலும் எதை பேசப்போகிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அதற்கு நாம் பேசுவதற்கு என்ன காரணமோ, அந்த விஷயத்தை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தால் சட்டென்றுன்று பேசி முடித்துவிடலாம். எதிராளியும் அதைத்தான் விரும்புவார்.

அவர்கள் போதும் போதும் என்று சொன்னாலும் நாம் திரும்பத் திரும்ப பேசியதையே பேசிக்கொண்டிருந்தால் இரண்டு பேருக்கும் காலவிரையம் ஏற்படும். ஆதலால் அதை தடுப்பதற்கு குறிப்பு எடுத்துக் கொண்டு பேசுவதை ஆரம்பிக்கலாம். இதனால் அடுத்த முறை நீங்கள் ஃபோன் செய்யும் பொழுது ரத்தின சுருக்கமாக பேசிவிட்டு வைப்பீர்கள் என்பதால், உங்கள் பேச்சிற்கும் மதிப்பு கொடுத்து நீங்கள் ஃபோனை அடித்தவுடன் எடுத்துப் பேசத்தொடங்கி விடுவார்.

அதேபோல் இப்பொழுது whatsapp-லயே பத்திரிக்கை கொடுப்பது அதிகரித்து வருகிறது. அதை அநேகர் விரும்புகிறார்கள் என்றாலும் நெருங்கிய சொந்த பந்தங்களும், நட்பு வட்டங்களும் விரும்புவதில்லை. இதனால் தூரத்தில் இருக்கும் உறவினர்களுக்கும், நட்பினர்களுக்கும் ஃபோனில், சொல்லிவிட்டு பிறகு பத்திரிக்கையை நேரில் கொடுத்து அழைத்தால் டிக்கெட் புக் செய்து வருவதற்கு ஏதுவாக இருக்கும், அப்படி அழைக்கும்பொழுது மாமா மாமி, அத்தை மாமா, சித்தி சித்தப்பா என்று இருவரையும் சேர்த்து அழைத்து விவரத்தை கூறினால், குறையில்லாமல் நிறைவாக வந்து சேருவார்கள். இல்லையேல் என்னை அழைக்கவில்லை என்று குறைபட்டுக்கொள்வார்கள். 

அதிக நேரம் பேச அவசியப்பட்டால் ஹெட் செட் பயன்படுத்தலாம். தொடர்ந்து இருபது நிமிடம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை இரண்டு நிமிடங்களில் பேச்சை முடித்துக் கொள்ளுமாறு முக்கிய செய்திகளை மட்டும் பரிமாறிக்கொண்டால் மூளையின் சுறுசுறுப்பு குறையாமல் இருக்கும். எந்த வேலையையும் சரியாகவும் செய்ய முடியும். கழுத்து வலி, கழுத்து எலும்புகள் தேய்ந்துவிடும் அபாயம் குறையும். கையைத் தொடர்ந்து ஒரே நிலையில் வைத்திருப்பதால் ரத்த ஓட்டம் தடைபடுவதும், கையில் இயக்கம் பாதிக்கப்படுவதும் இல்லாமல் போகும். 

பேசும்பொழுது குறுக்காக பேசுவதை நிறுத்தினால், எதிராளி பேசுவதை நன்றாகப் புரிந்துகொண்டு, சீக்கிரமாக விடையளித்து விடைபெறலாம்.

வீட்டு வேலைகளை எல்லாம் அப்படியே விட்டு விட்டு போனை கையில் எடுத்தால், வேலைகள் அப்படியே நின்றுவிடும். இதனால் எல்லா வேலையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். ஆதலால் பேசுவதற்கு என்று சில நேரத்தை ஒதுக்கி வைத்து பொறுமையாக பேசினால் சொல்ல வரும் விஷயத்தை சட்டென்று என்று கூறி முடித்துவிடலாம். 

எக்காரணத்தை முன்னிட்டும் உறங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு செல்போனை பயன்படுத்துவதை நிறுத்துவது மனம் அமைதி அடைந்து ஆழ்ந்த உறக்கத்தைப் பெற வழி வகுக்கும். அப்பொழுது தூங்க வேண்டும் என்ற உந்துதல் இருப்பதால் சீக்கிரமாக பேசி முடித்து விடலாம். இரவு நேரம் என்பதால் அதிகமாக பேசவும் விரும்ப மாட்டோம். 

எல்லாவற்றுக்கும் மேலாக சில முக்கியமான விஷயங்களை தபால் மூலம் தெரிவிப்பது உறவில் நல் இணக்கத்தையும், ரத்தின சுருக்கமான பேச்சையும் எடுத்து கூறும் வழிமுறையாகவும், அதைத் திரும்பத் திரும்ப படிக்கும்பொழுது மனதிற்கு ஒரு இன்பத்தை தரும் நிகழ்வாகவும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கட்டாயப்படுத்தும் எந்த செயலும் நன்மை தராது!
Motivational articles

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com