வெற்றியின் பின்னால் நிச்சயம் விடாமுயற்சி இருக்கும்!

Perseverance is definitely behind success.
keep trying
Published on

நாம் ஒரு காரியம் செய்யும்போது சில சமயங்களில் கொஞ்சம் அலட்சியம் இருக்கும். ஆனால் நமக்கு மேலே உள்ளவர்கள் நமக்கு அழுத்தம் கொடுக்கும்போதுதான் உத்வேகம் பிறக்கும். அப்படி உத்வேகம் பிறந்து நாம் அந்த காரியத்தை செய்து விடாமுயற்சியாக இருந்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

புதிய முயற்சிகள் எல்லாவற்றிற்கும் உறுதுணையாக நிற்பது விடாமுயற்சிதான் விடாமுயற்சி ஒன்று மட்டுமே எந்த வெற்றியாளரின் பின்னணியிலும் ஹிரோவாக நிற்கும். வெற்றி பெற்ற மனிதரிடம் கேளுங்களேன் உங்கள் வெற்றிக்கு என்ன காரணம் என்று அவர்கள் கூறும் முதல் வார்த்தை விடாமுயற்சி என்பதுதான். இதை உணர்த்தும் ஒரு சின்ன கதை இது.

ஒரு பத்திரிகை அலுவலகத்தில் வேலை பார்த்த இளைஞனுக்கு விளம்பரங்கள் பிடித்துத் தரும் வேலை தரப்பட்டது. முதல் மாதம் அவனால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. பத்திரிகை முதலாளி “அடுத்த மாதம் இதே நிலை என்றால் வேலையிலிருந்து உன்னை விலக்க வேண்டியிருக்கும்" என்று சொல்லிவிட்டார்.

வேலையில்லாமல் பல மாதங்கள் கஷ்டப்பட்ட அவனுக்கு இந்த வேலையை விட்டுச்செல்ல மனமில்லை. எனவே, எப்படியும் இம்மாதம் அதிக விளம்பரங்களைப் பிடிக்கவேண்டும் என்று யாரிடமெல்லாம் விளம்பரம் கேட்கலாம் என்று ஒரு பட்டியல் தயார் செய்தான். அந்தப் பட்டியல்படி தொடர்ந்து முயற்சி செய்தான்.

இதையும் படியுங்கள்:
எல்லோருக்குமே ஒரே அளவு ஆனந்தம்தான்!
Perseverance is definitely behind success.

ஒரு வழியாகத் தொடர்ந்து ஒருவரிடம் சென்று கேட்டான். கடைசி நாளும் அவரிடம் சென்றான். அவனைக் கண்ட அவர் “நான்தான் தரமுடியாது என்று கூறிவிட்டேனே. ஏன் நீ முப்பது நாட்களை வீணடித்தாய்?" என்று கேட்டார். அவனோ "ஐயா, நான் முப்பது நாட்களை வீணடிக்கவில்லை.

உங்களிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டேன். முப்பது நாட்களும் நீங்கள் விளம்பரம் தர மறுத்துச் சமாளித்த விதத்தை நான் தெரிந்து கொண்டேன்" என்றான். உடனே அந்த நிறுவன அதிபர் "நானும் உன்னிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டேன், முப்பது நாளும் புதிது புதிதாக ஏதாவது சொல்லி என்னிடம் நீ விளம்பரம் கேட்கிறாய்" என்று கூறிவிட்டுப் பெரியதொரு விளம்பரத்தை அவனது முயற்சிக்காகக் கொடுத்தார்.

புதிய, புதிய முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதைத்தான் விடாமுயற்சி என்கிறார்கள். இளைஞனின் தொடர்ந்த இந்த விடாமுயற்சி அவனுக்கு நல்ல ஒரு விளம்பரத்தைப் பெற்றுத்தந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com