மாமேதைகளின் 10 சாதனை பற்றிய தத்துவங்கள்!

 Seneca
Seneca
Updated on

சாதனைப் பற்றி எவ்வளவோ பேர் தத்துவங்கள் கூறியிருப்பார்கள். உண்மையில் அவரவர்களுக்கு ஏற்றவாரு தத்துவங்களை மாற்றிக்கொள்வார்கள். ஏனெனில் ஒவ்வொருவரின் பார்வைக் கோணமும் வெவ்வேறு விதமாக இருக்கும். அதேபோல் உங்களுக்கும் சில பார்வைக் கோணம் மாறும்போது நீங்கள் அதனை எடுத்துக்கொள்ளும் விதமும் மாறும். அந்தநேரத்தில் உங்களுக்கு ஏற்றவாரு அந்தத் தத்துவத்தை மாற்றிக்கொள்வீர்கள். அந்தவகையில் 10 மாமேதைகளின் 10 சாதனை பற்றிய தத்துவங்களைப் பார்ப்போம்.

1. உங்களால் முடியாது என்று சொல்லாதீர்கள். இன்னும் அதனைச் செய்து முடிக்கவில்லை என்று கூறுங்கள். – Rick Rubin

2. நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் நீங்கள். செய்வேன் என்று சொல்வது இல்லை. – Carl Jung

3. தவிர்க்க முடியாத ஒரு விஷயத்தைத் தவிர்க்க நினைப்பதில்தான் மன அமைதி கெடுகிறது. – Jeff Bezos

4. ஆரம்பிப்பதற்கான ஒரே வழி பேசுவதை நிறுத்திவிட்டு செய்யத் தொடங்குவதுதான். – Walt Disney

5. சாதனை மேல் காதல் கொள்ளாதீர்கள். சாதனையை அடைய உதவும் பழக்கங்கள் மேல் காதல் கொள்ளுங்கள். – பெயர் அறியப்படவில்லை.

6. உலகில் ஒரே ஒரு சாதனை மட்டும்தான் உள்ளது. அது உங்கள் வாழ்வை உங்களுக்குப் பிடித்த மாதிரியும், நீங்கள் நினைப்பது போலவும் வாழ்வதுதான். – Christopher Morley

7. சாதனை என்பது பணம், ஆற்றல், புகழ் போன்றவற்றால் அளக்கப்படுவது இல்லை. இது ஒரு மனிதன் என்னவாக இருந்தான், என்னவாக ஆனான் என்பதற்கு நடுவில் இருக்கும் தொலைவை அளப்பதுதான் சாதனை. – H.G Wells.

இதையும் படியுங்கள்:
58 வயதில் IVF முறையில் கருதரித்த பஞ்சாப் பாடகர் சித்துவின் தாய்!
 Seneca

8. என்னால் சாதனைக்கான விதிமுறையைக் கொடுக்க முடியாது. ஆனால், தோல்விக்கான விதிமுறையைக் கொடுக்க முடியும். அது “அனைவரிடமும் கெஞ்சுங்கள் ( வாய்ப்பிற்காக )” என்பது. – Herbert Bayard Swope

9.  உன் இடத்தைக் கண்டுப்பிடித்து, அந்த இடத்தை உனது சாதனைகளால் நிரப்பு. – Phillip Brooks

10. தோல்விகள் சிறப்பான மாற்றத்தைக் கொடுக்கும். அதேபோல் சாதனைகள் மோசமான மாற்றத்தைக் கொடுக்கும். (சாதனைகளைத் தக்கவைப்பது அவசியம்.) – Seneca

சாதனைகளைத் தக்கவைத்துக்கொள்வது மிகவும் அவசியம் தான். அதற்கு ஒரே வழி, தோல்வியிலும் வெற்றிக்கு முன்னும் வெற்றிக்கு பின்னும் ஒரே மாதிரியான, சீரான முயற்சியைச் செய்வது. எதற்கும் ஆச்சர்யப்படாமல் தொடர்ந்து உங்களின் வேலையைச் சரியாக செய்தாலே போதும்.

logo
Kalki Online
kalkionline.com