வாழ்க்கையில் முன்னேற முதல்படி திட்டமிடல்தான்!

motivation image
motivation imageImage credit - pixabay.com
Published on

திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்பது பலருக்கும் புரிவதில்லை. நமக்கு 30 ஏக்கர் நிலம் உள்ளது. யாரோ தென்னை எலுமிச்சை மா வாழை போடலாம் என்கிறார்கள். நாமும் தென்னை நடுகிறோம். இரண்டு மூன்று ஆண்டுகளில் அது வளரவில்லை. மற்றொருவர் தோட்டத்தைப் பார்க்கிறோம். சீமை எலந்தை போட்டிருக்கிறார். பாத்தி கட்டி பம்ப் போட்டிருக்கிறார்.

அவர் சொல்கிறார், "இந்த பூமியில் நீர் குறைவு. சப்போட்டா கொய்யா இலந்தை போடலாம் என்றார்கள். சீமை எலந்தையை கடையில் பார்த்தேன் ருசியாக இருந்தது. விலையோ அதிகம். விவசாய நிபுணர்களைக் கேட்டேன். சீமை இலந்தை பயிரிட்டேன். நல்ல மகசூல்."

திட்டமிடுபவர்களுக்கும் திட்டமிடாதவர்களுக்கும் இதுதான் வித்தியாசம். திட்டமிடாவிட்டால் என்ன நேருகிறது. நமது நேரம்  உழைப்பு  புத்திசாலித்தனம்  எல்லாம் நம் கையில் இல்லை. எது வருகிறதோ அதற்கு ஈடுகொடுத்து நேரத்தை உழைப்பை செலவிடுகிறோம். காலமும் நேரமும் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். திட்டமிடல் என்பது அன்றாட வாழ்வில் தொடங்க வேண்டும். நம் வாழ்வில் என்ன ஆக விரும்புகிறோம் என்பதை யோசித்து நம் இலட்சியத்திற்கேற்ப திட்டமிட வேண்டும். அடுத்து லட்சியத்தை அடைய நாம் எதை முக்கியமாக  செய்ய வேண்டும்  என்ற தெளிவு அவசியம். மூன்றாவதாக எந்த நேரம் ஏற்ற நேரம். காலையா மதியமா மாலையா இரவா என்று தேர்ந்தெடுத்து அதற்கேற்ப நம் பணிகளைத் தொடங்க வேண்டும்.

எனக்கு நேரம் கிடைப்பதில்லை என்றார் ஒரு பெரிய பணக்கார தொழிலதிபர். எனக்கு பல காரியங்களையும் செய்ய நேரம் கண்டுபிடித்துக்  கொடுத்தால் நீங்கள் கேட்கிற பணத்தை உங்களுக்குத் தருகிறேன் என்று அவர் தொழில் ஆலோசகரிடம் கூற அவர் தொழிலதிபரின் "நீங்கள் நாளைக்கு செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாவற்றையும் ஒரு தாளில் எழுதுங்கள். அதில் எது முக்கியமாக செய்யவேண்டியது என்று வரிசைப் படுத்துங்கள். 1,2,3 என்று வரிசைப்படுத்துங்கள். முதல் காரியத்தை முடிக்கிற வரையில் இரண்டாவது காரியத்திற்கு போகவேண்டாம்.

இதையும் படியுங்கள்:
முதுகு வலியை முறியடிக்க செய்ய வேண்டியது என்ன?
motivation image

அதேபோல் முதல் வேலையை முடித்து இரண்டாவது பிறகு மூன்றாவது என்று செய்யும்போது முக்கியமான விஷயங்கள் எல்லாம் முடித்திருப்பீர்கள். இப்படி 1மாதம் செய்து பார்த்தார் தொழிலதிபர். மூன்று மாதம் கழித்து அந்த தொழில் ஆலோசகருக்கு அவர் யோசனைக்காக 25,000 டாலருக்கான காசோலையை அனுப்பினார். இதே மாதிரி நீங்களும் திட்டமிட்டால் நிச்சயமாக வெற்றி பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com