இனிமேலாவது மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள் ப்ளீஸ்!

motivation article
motivation articleImage credit - pixabay

நாம் கூறிய வேலையையோ அல்லது நம்மிடம் மற்றவர் கூறிய வேலையையோ ஒழுங்காகச் செய்யாவிட்டால், அல்லது தவறாகச் செய்துவிட்டால்  அவர்களுக்குக் கொடுக்கும் பட்டம் "முட்டாள்". நாம் செய்யும் செயல்களில் மட்டும் முட்டாள்தனம் வெளிப்படாது. நம்மிடம் இருக்கும் சில குணங்களும் நம்மை முட்டாளாக  மற்றவர்களுக்குக் காட்டும். அப்படி, நீங்கள் முட்டாளாக இருக்கிறீர்களா? என்பதைப் பற்றி இதில் பார்ப்போம்.

 1. ஒருவர் தனக்குத் தெரிந்தவர்கள் ஏதேனும் ஒரு வேலையைக் கொடுத்தால். தனது வேலையை விட்டுவிட்டு அவர்கள் வேலையை முடித்துக் கொடுப்பதில் மும்மரமாகச் செயல்படுவார். நாளின் இறுதியில் பார்த்தால் அவர்கள் வேலையைச் செய்யாமலே விட்டுவிடுவார். இப்படி மற்றவர்களுக்காக உழைத்தால் கண்டிப்பாகத் தங்கள் வாழ்க்கையில் தோல்வியைச் சந்திக்கும் மனிதராகவே இருப்பார். ஆனால், மற்றவர்கள் மத்தியில் முகத்திற்கு முன்னால் நல்ல பெயரும், முதுகிற்குப் பின்னால் ஏமாளி என்ற பட்டமும் மட்டுமே கிடைக்கும்.

 2. இவர்கள் தங்களிடமும் மற்றவர்களிடம் நான் எப்படி எல்லாம் வாழப் போகிறேன் தெரியுமா? எனது வாழ்வின் திட்டம் என்னவென்று தெரியுமா? என்று தங்கள் கனவுகளை வாய்விட்டுக் கூறிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், அந்தக் கனவிற்காக ஏதாவது செய்வார்களா? என்றால் நிச்சயம் கிடையாது. இப்படிக் கனவை மட்டும் கண்டுவிட்டுச் செயலில் கோட்டை விட்டால் ஆகச் சிறந்த முட்டாளாகத்தான் ஆக முடியும்.

3. சிலர் நம்முடன் பழகிய பழக்கத்திற்காக, வாய் வார்த்தையாக உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று கூறியிருப்பார்கள். அதனை முழுமையாக நம்பிவிட்டு, அவர்கள் உதவி செய்வார்கள் என்று நம்பி காத்துக்கொண்டே இருப்பார்கள். கடைசியில் அவர்கள் எந்த உதவியும் செய்யாமல் தட்டிக் கழித்து விடுவார்கள். அப்படி, இந்த குணம் உடையவர்கள் எல்லோரையும் எளிதாக நம்பி விடக் கூடியவர்களாக இருப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
மனதை உறுதியைப் பெற வைக்கும் 5 வழிகள்!
motivation article

 4. தங்களுக்கு வருமானம் என்று ஏதேனும் கிடைக்கும்போது. அந்தப் பணத்தை வைத்து எங்குப் போகலாம் எப்படிச் செலவு செய்யலாம் என்று திட்டமிடுவார்களே தவிர, அந்தப் பணத்தை எப்படி இரட்டிப்பு ஆக்குவது  என்று சிறிதும் சிந்தித்துப் பார்க்க மாட்டார்கள். கிடைக்கின்ற பணத்தை வைத்து மற்றவர்கள் மத்தியில்  தங்களைப் பணக்காரனாகக் காட்டிக் கொள்ளலாம் என்று விரும்புவார்களே தவிர அதனை எதில் முதலீடு செய்யலாம் என்று சிறிதும் சிந்தித்துப் பார்க்க மாட்டார்கள்.

 மேலே கூறியுள்ள பண்புகளில் ஏதேனும் ஒன்று உங்களிடம் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அதனை இனிமேலாவது மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com