பாஸிடிவ் எனர்ஜி இருந்தால் போதும் வெற்றிகரமாக வாழ..!

motivation article
motivation articleImage credit - ttnworldwide.com
Published on

டம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்"- பிடல் காஸ்ட்ரோ சொன்ன இந்த மொழியில் உள்ள பாஸிடிவ் எனர்ஜி பல சாதனையாளர்களை உருவாக்கிக் கொண்டிருப்பது உண்மை.

"நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலைப்படாதே. நீ நடந்தால் அதுவே பாதை" இதை சொன்னது அடால்ஃப் ஹிட்லர்.

வீடு, கல்வி, சொத்து, சுகம் என அனைத்தும் இருந்தாலும் மனதில் பாஸிடிவ் எனர்ஜி இல்லாதவர்கள் முன்னேறும் எண்ணமின்றி இருக்கும் நிலையிலேயே இருந்து அடையாளமற்று வீழ்வார்கள். எந்த வசதிகளும் இல்லாமல் ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மனதில் பாஸிடிவ் எனர்ஜி கொண்டு சாதித்து பலருக்கும் முன்மாதிரியாக வாழ்பவர்கள் சிலர்.

அந்த சிலரில் ஹிட்லர் கூறிய மொழிகளின் சான்றாக உலகத்தையே வியக்க வைக்கும் சாதனையாளர் பற்றி இங்கு பார்ப்போம்.

செர்பிய இனத்தைச் சேர்ந்த நிக் வுஜிசிக் (Nick Vujicic) ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் என்னுமிடத்தில் பிறந்தார். பிறக்கும்போதே இரண்டு கைகளும் கால்களும் இல்லாத ஒரு மாற்றுத்திறனாளி. எட்டு வயதில் தன் நிலையைப் பார்த்து மனமடைந்த தற்கொலைக்கு முயன்றவர். அவரது பெற்றோரின் ஆதரவால் மீண்டவர்.

ஆனால் இன்று அவர்தான் உலகின் தலைசிறந்த ஊக்கப்படுத்தும் பேச்சாளர். இளைஞர்களுக்கும், பெரிய பெரிய நிறுவனங்கள் மற்றும் போதைக்கு அடிமையாகி வாழ்வில் பயனற்று இருப்பவர்களுக்கு என  உலகின் விரக்தி நிலையில் உள்ள அத்தனை பேருக்கும் வாழ்வில் புத்துணர்வு தரும் வழிகாட்டி.

அவருடைய அனுபவங்களின்  தொகுப்பை பேசும்போது எதிரில் இருப்பவர்களுக்கு அவர் நிலை எண்ணி கண்ணீர் வரும். ஆனால் அந்த நிலையிலும் சாதித்த அவரின் பாஸிடிவ் எனர்ஜி கண்டு அந்த கண்ணீரில் அவர்களின்  பயமும் விரக்தி அனைத்தும் கரைந்து போய்  வாழவேண்டும் என்ற புத்துணர்வு ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
மகிழ்வுடன் செயல்படுங்கள்! மனம் மகிழுங்கள்!
motivation article

கைகளும் கால்களும் இல்லாத நிலையிலும் தன் வேலைகளைத் தானே செய்யப் பயிற்சி எடுத்து தன்னுடைய 21-ம் அகவையில் கிரிபித் பல்கலைக் கழகத்தில் கணக்கியல் மற்றும் நிதியியல் திட்டமிடலை இரட்டை பட்டமாக முடித்தார். கூடவே, மிகப்பிரபலமான பேச்சாளராகவும் உருவானார். சுமார் 5 கண்டங்களில் உள்ள 24 - நாடுகளில் மூன்று மில்லியனுக்கும் அதிகமானவர்களுடன்  பள்ளிகள், நிறுவனங்கள் என்று பலதரப்பட்ட மக்களிடம் உரையாற்றியுள்ளார்.

குறிப்பாக இளைஞர்களுக்காக, (No Arms, No Legs, No Worries: Youth Version) கையில்லை கால் இல்லை கவலை இல்லை என்ற தலைப்பில் தொகுப்பினையும் வெளியிட்டார்.
"கை கால் இல்லை என்பதற்காக நான் கவலைப் படவில்லை. இது என்னுடைய தவறும் அல்ல. கடவுள் என்னை இப்படி படைத்ததே கைகால் இருப்பவர்களை ஒரு மோட்டிவேட் பண்ணத்தான் என்று நினைக்கிறேன். அதனால்தான் நான் எப்போதும் சிரிக்க முடிகிறது" என்று கூறியுள்ளார் வெற்றியாளரான நிக். 

பாசிட்டிவ் எனர்ஜியுடன் தன்னைத்தானே நேசிக்க நேசிக்கும் மனிதர்களால் மட்டுமே இப்படிப்பட்ட வெற்றி சாத்தியமாகும். நாமும் நமது குறைகளை எண்ணி முடங்காமல் இருப்பதே போதும் எனத் தேங்காமல் பாசிடிவ் எனர்ஜியை நமக்குள் நாம் வளர்த்துக் கொண்டால் எத்தனை துயர்கள் இடர்கள் வந்தாலும் நாமும் தடம் பதிக்கும் வெற்றிகரமான மனிதராகத் திகழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com