

Positive thinking: அன்பை விதைத்தால் நல்ல உறவுகளையும் நட்பையும் அமோகமாக அறுவடை செய்யலாம்.அதை நாம் செய்யத் தவறிவிடுகிறோம். முகநூலில் முகம் தொியாத நபர்களிடம் வைத்திருக்கும் அன்பான வாா்த்தைகளைக் கூட நோில் பழகிவரும் நட்பு, மற்றும் உறவு வட்டங்களில் நாம் கடைபிடிக்கத் தவறிவிடுகிறோம்.
அது நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் தேவையில்லாத சங்கடம். ஆத்திரம் தன்னை அழித்திடும்போது அறிவுக்கு வேலை கொடு என்று ஒரு பாடல், அதில் குறிப்பிட்டிருப்பதுபோல ஆத்திரப் படுவதால் எந்த காாியமும் வெற்றி பெறாது,அந்த நேரம் நமது திருவாய் மலரும் நிலையில் உதிா்க்கும் வாா்த்தைகளுக்கு உஷ்ணமும், வீாியமும், அதிகம்.
அது நமக்கு பல வகைகளில் நமக்கிருக்கும் மதிப்பையும், மரியாதையையும் கெடுத்துவிடுமே! அப்போதுதான் நாம் நம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆத்திரத்தில் பொியவர், சிறியவர், என பேதம் பாா்க்காமல் பேசுவதால் எந்த பலனும் வராது. மாறாக வெறுப்புதான் வரும்.
எனவே ஆத்திரம் எனும் பயிரை வேறோடு கிள்ளி எாியவேண்டும். அது ஒரு நச்சுப்பயிா், அது வளர்வதால் நமக்கு வாழ்க்கையில் வரக்கூடிய முன்னேற்றம் தடைபடக்கூடும். எந்த நிலையிலும் கோபம், ஆத்திரம், தவிா்த்து வாழக்கற்றுக்கொள்ளுங்கள் இயல்பாய் வாழ்வதே நல்லது.
இன் முகத்துடன் அனைவரிடமும் மரியாதையும் அன்பும் செலுத்தி வாழ்ந்து பாருங்கள்,வாழ்க்கையில் மரியாதை தானே தேடிவரும். ஈகை, ஈவு, இரக்கம் கடைபிடித்து வாழ்ந்து வருவதால் நமக்கு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் வரப்போவது இல்லை.
அந்த விஷயத்தில் மனதை ஒரு நிலைப்படுத்தி நம்மைவிட உடலால் உள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்த வரை உதவி செய்யுங்கள். அதில் நமக்கு ஒரு ஆத்ம திருப்தி ஏற்படலாம். உதவும் மனப்பான்மையில் சிலருக்கு உதவி செய்யும்போது பல வகைகளில் இடையூறு வரலாம், சிலர் நமது மனப்பான்மையை பாராட்டுவாா்கள், சிலர் ஏகடியம் பேசுவாா்கள், அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம். நாம் எடுத்து வைக்கும் காாியத்தில் கவனச்சிதறல் வராமல் பாா்த்துக்கொள்ளவேண்டும்.
ஒருவர் தனது முயற்சியால் பல செயல்களைச்செய்யும் நிலையில் தோல்வி வந்து நொடித்துப்போய்விட்டால் அவர்களுக்கு ஆறுதல் கூறாவிட்டாலும், அவர்கள் மனது வருத்தப்படும் வகையில் மேலும் அவர்களுக்கு சங்கடம் தருவதோ அவர்களை ஏளனமாக பேசி கேவலப்படுத்துவதோ வேண்டாம். வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது சகஜம்.
காற்று ஒரேபக்கம் வீசாது, தென்றலாய் வீசும் காற்று புயலாய் மாறலாம். வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் எப்போதும் வரலாம், ஆக யாா் மனதும் மனதும் புண்படும்படியான காாியங்களில் ஈடுபடுவதை தவிா்ப்பது நல்லது.
பொதுவாகவே நமது ஒவ்வொரு அசைவும் இறைவனால் கவனிக்கப்படுகிறது என்பதை உணருங்கள். பாவத்தை சோ்க்காதீா்கள் எந்த விஷயத்தையும் நிதானித்து கவனமுடன் கையாளுங்கள். நமக்குத்தான் தொியும் என்ற அகம்பாவத்தோடு வாழாதீா்கள்.
அது இன்று நமக்கு உதவலாம் நாளை ஒரு நேரம் நமக்கே அது எதிா்மறையாக மாறலாம். எங்கும் எதிலும் நல்ல எண்ணம் தர்ம சிந்தனை கடைபிடித்து அடுத்துக்கெடு்க்காத கோட்பாடுகளை தவிா்த்து வாழ்ந்து பாருங்கள். அதுதான் நமக்கும் நமது சந்ததிக்கும் நல்லது.
எனவே தீய சிந்தனையை வேறோடு அறுத்துவிடுங்கள், அதுவே உயர்வான வாழ்க்கைக்கு வழிகாட்டும் என்பதை உணருங்கள். மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழ்வதே எப்போதும் நல்லதாகும் என்பதை தொிந்துகொள்ளுங்கள். முடிந்தவரை நல்லதையே நினைப்போம் நல்ல செயல்களில் ஈடுபடுவோம்.நோ்மறை சிந்தைனை எனும் பயிரை வளா்ப்போம்!