வாழ்க்கையில் முன்னேற நேர்மறை சிந்தனை (Positive Thinking) அவசியம் தேவை!

motivation image
motivation imageImage credit - pixabay.com
Published on

சிந்தனை செய்யாதவர்களே கிடையாது. நல் வழியில் சிந்திக்க பழகிக்கொண்டால், நாளடைவில் நாம் அறியாமலேயே அதன் பலன்களை அனுபவிக்க ஆரம்பித்து விடுவோம்.

நேர்மறையாக சிந்திப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களால் முடியுமென்றால், நம்மாலும் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு தொடங்கவும்.

• வாழ்க்கையில் முன்னேற தேவையான தைரியம் அளிக்கும்.

• உங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வழி வகுக்கும்.

• நீங்கள் அறியவேண்டும் என்ற ஆவலை அதிகரிக்க செய்யும்.

• நேர்மறையானவை கண்களில் தென்படும்.

• எதிர்மறை என்பவை கிடையாது. அதற்கு பதிலாக சவால்களை சாதிக்க தூண்டும்.

• அடுத்த கட்டம் உங்களை சந்திக்க காத்துக்கொண்டு இருக்கிறது என்பதை உணரவைக்கும். செயல்பட வைக்கும்.

• நேர்மறையான எண்ணங்கள், சுய உந்து சக்தியாக (self motivating energy factor) வேகம் எடுத்து, இலக்கை அடைய உதவும்.

• பிறரின் சாதனைகளை கண்டு பெருமை கொள்ள வைக்கும். நேர்மறை எண்ணங்களுடன் அணுகுபவர்களின் டிக்க்ஷனரியில், பொறாமை (Jealous) என்ற வார்த்தைக்கு இடமேயிருக்காது.

• அத்தகைய நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்
கொண்டவர்களால், பிறரின் முன்னேற்றம் கண்டு உண்மையாக மகிழவும், அவர்கள் மகிழ்ச்சியில் மனதார பங்கு கொள்ளவும் முடியும், முழுமனதுடன்.

• இவர்களால் எந்த வகை சூழ்நிலையிலும், முடியும் என்ற எண்ணத்துடன்தான் எதிர்கொள்வார்கள்.

• தன்னம்பிக்கை மிக்கவர்களால் பிறரின் நம்பிக்கைக்கு உரியவர்களாக முடியும்.

• நேர்மறை எண்ணங்கள் உடையவர்களின் கண்களுக்கு சந்தர்ப்பங்கள் காணப்படும்.

• இத்தகையவர்களுக்கு தோல்வி, தடங்கல் இல்லை, அது ஒரு கற்றுத்தரும் மேடை என்று அறிவார்கள்.

இதையும் படியுங்கள்:
அனைத்திற்கும் நீங்கள்தான் காரணம்; நீங்கள் மட்டுமே காரணம்!
motivation image

• நேர்மறை எண்ணங்கள் உடையவர்களால், திடமான மனத்துடன் எத்தகை வகையான பிரச்சனைகளையும் எதிர் நோக்கி, அலசி ஆராயந்து முடிவு எடுத்து செயல்படுத்த முடியும்.

• இவர்கள் வாழ்க்கையில் தயக்கம், பின் வாங்குதல், தடுமாறுவது போன்றவைக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது கிடையாது.

• நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களால், தன்னம்பிக்கை தானாக வளருவதை உணரமுடியும்.

• இவர்களுக்கு எத்தகை வகையான முடிவு வந்தாலும், ஏற்றுக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செயல்படும் பக்குவம் இருக்கும்.

• நேர்மறை எண்ணங்களை கொள்வதை வாழ்க்கையின் ஒரு பகுதியாக்கிக் கொண்டு, பலன்களை அனுபவியுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com