லேடீஸ் விரும்பும் லேட்டஸ்ட் ஃபாஷன் – லெக்கிங்ஸ் இந்த 10 வகைகள் மிகப் பிரபலம்!

Leggings)
Leggings)Image credit - pixabay.com

ற்போதைய பெண்களுக்கு காலுறைகள் எனப்படும் லெக்கிங்ஸ் (Leggings) அன்றாட வாழ்க்கைப் பயன்பாட்டு உடையாகிப்போனது. இந்த உடை வீட்டிலிருக்கும்போதும், வெளியிடங்களுக்குச் செல்லும்போதும் அணிந்து கொள்ளக்கூடிய உடையாக மட்டுமின்றி, உடற்பயிற்சிக்கான உடையாகவும் இருக்கிறது.

நீளமான காலை முழுவதும் மூடிக்கொண்ட வடிவமைப்பிலான லெக்கிங்ஸ் மட்டுமே இருக்கின்றன என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இன்றைய பயன்பாட்டுக்கேற்பக் காலின் நீள அளவை அடிப்படையாகக் கொண்டு ஐந்து வடிவமைப்புகளிலான லெக்கிங்ஸ்கள் பயன்பாட்டில் பிரபலமாக இருக்கின்றன.

வாங்க அந்த ஐந்து வகையான லெக்கிங்ஸ்கள் என்னவென்று பார்க்கலாம். 

1. கணுக்கால் வரை நீளமான லெக்கிங்ஸ் (Ankle - Length Leggings)

Ankle - Length Leggings
Ankle - Length Leggings

கணுக்கால் வரை மட்டும் காலை மூடக்கூடியதாக இருக்கும் இந்த வகை லெக்கிங்ஸ் அழகிய நிறங்களில், அச்சிடப்பட்ட அழகிய டிசைன்களுடன் கிடைக்கிறது. இந்த லெக்கிங்சை உங்கள் இடைவரையிலான சிற்றாடை (Kurthi) கீழாக அணிந்துகொள்ளலாம். இதனை உடற்பயிற்சிகள், விளையாட்டுகள் மற்றும் சாதாரண பயணங்களின்போது அணிந்துகொள்ளலாம்.

2. முழங்கால் வரை லெக்கிங்ஸ் (Knee - Length Leggings)

Knee - Length Leggings
Knee - Length Leggings

முழங்கால் வரை நீளமான லெக்கிங்ஸ்கள் கிடைக்கின்றன. இவை மிகவும் நெகிழ்வானவை, நல்ல தோற்றத்தைத் தருகின்றன. இந்த வகை லெக்கிங்ஸ் களும் தனித்துவமான டிசைன்கள் மற்றும் அழகிய நிறங்களில் கிடைக்கின்றன.  இவை பல்வேறு தேர்வுகளுக்கு ஏற்றதாக அமைந்திருக்கின்றன. அவற்றை உங்கள் மேலாடை, கொசுவச்சட்டை எனப்படும் டி-சர்ட்களுக்குக் கீழாக அணிந்து கொள்ளலாம். யோகா பயிற்சிகள், விளையாட்டுப் பயிற்சிகள் மற்றும் நடைபயணத்தின்போதும் அணிந்துகொள்ளலாம்.

3. கேப்ரி லெக்கிங்ஸ் (Capri Leggings)

Capri Leggings
Capri Leggings

சிறிது அளவு நீளம் குறைந்த லெக்கிங்ஸ்கள் கேப்ரி லெக்கிங்ஸ் எனப்படுகின்றன. இவை கால்களில் நான்கில் மூன்று பகுதியை மூடுகின்றன. இவ்வகை லெக்கிங்ஸ்கள் பல்வேறு துணிகள் மற்றும் நிறங்களில் கிடைக்கின்றன. எளிமையான மற்றும் பல்துறை தோற்றம் காரணமாக அன்றாட உடைகளுக்கு ஏற்றவைகளாக இருக்கின்றன. தளர்வான டி-ஷர்ட்கள் மற்றும் நவநாகரீக மேலாடைகள் இந்த வகையான லெக்கிங்ஸ்களுக்கு மிகவும் அழகாக இருக்கும். கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு அணிந்து செல்லலாம்.

4. நடு கெண்டைக் கால்கள் லெக்கிங்ஸ் (Mid - Calf Leggings)

Mid - Calf Leggings
Mid - Calf Leggings

இவ்வகை லெக்கிங்ஸ்கள் அரைப் பங்கு லெக்கிங்ஸ்கள் எனப்படுகின்றன. சுரிதார் ஆடைகளுக்கு மாற்றாக இவ்வகை லெக்கிங்ஸ்களை அணியலாம். இவ்வகை லெக்கிங்ஸ்களின் நெகிழ்வான இடுப்புப் பட்டைகள், இடுப்புப் பகுதியில் தொல்லை தரக்கூடிய அடையாளங்களை ஏற்படுத்தாமல், கால்சட்டையை (Pants) சரியான இடத்தில் பிடிப்பாகவும் உறுதியாகவும் வைத்திருக்க உதவுகின்றன. மரபு வழி நிகழ்வுகள் மற்றும் பயிற்சிக் களங்களுக்கு அணிந்து செல்லலாம்.

5. அங்கவடி லெக்கிங்ஸ் (Stirrup Leggings)

Stirrup Leggings
Stirrup Leggings

முதன்முதலாக, குதிரையேற்றம் செய்யும்போது, ​​தங்கள் கால்சட்டைகளை (Pants) சரியான இடத்தில் வைத்திருப்பதற்காக, இந்த வகையான லெக்கிங்ஸ்களை அணிந்தனர். இந்த லெக்கிங்ஸ்கள் காலணிகளுக்கு மேலே நகராது. இது பனிச்சறுக்கு, குதிரையேற்றம் போன்ற வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளுக்கு இப்போதும் சரியானதாக இருக்கிறது.  நடன நிகழ்ச்சிகளுக்கும் இவ்வகை லெக்கிங்ஸ்கள் மிகவும் நேர்த்தியாக இருக்கும். ஓடுதல், பனிச்சறுக்கு, சவாரி, விருந்துகள் போன்றவைகளுக்கு அணிந்து செல்லலாம்.

மேற்சொன்ன ஐந்து லெக்கிங்ஸ்கள் தவிர்த்து, குறிப்பிட்ட நோக்கங்களுக்காக அல்லது குறிப்பிட்ட பருவங்களில் அணிவதற்காக தயாரிக்கப்படும் லெக்கிங்ஸ்களிலும் ஐந்து வகையான லெக்கிங்ஸ்களை இங்கு பார்க்கலாம்.

6. உடற்பயிற்சி லெக்கிங்ஸ் (Athleisure Leggings)

Athleisure Leggings
Athleisure Leggings

விளையாட்டு உடையுடன் சாதாரண உடையின் கலவையாக இவ்வகை லெக்கிங்ஸ்கள் இருக்கின்றன. இவை ஆடம்பரமான, அணிவதற்கு வசதியான ஆடையாகவும் இருக்கின்றன. இவற்றை அணிந்து உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்லலாம், அருகிலுள்ள கடைகளுக்கு உடனடியாகச் செல்லலாம், வீட்டில் ஓய்வெடுக்கவும் பயன்படுத்தலாம். இவை நெகிழிழை (Spandex) மற்றும் பலமரிழை (Polyester)  ஆகியவற்றின் கலவையால் உருவாக்கப்படுகின்றன. எளிதாகக் காற்று உட்புகக் கூடியதாகவும், தேவைக்கேற்ப நீட்டிக்கக் கூடியதாகவும் அமைந்திருக்கின்றன. இவற்றை சாதாரணமாக வீட்டில் அணிந்திருக்கலாம், உடற்பயிற்சி கூடம் மற்றும் அருகிலுள்ள இடங்களுக்கு உடனடியாக அணிந்து செல்லலாம்.

7. மாற்றுத் தோல் லெக்கிங்ஸ் (Faux - Leather Leggings)

Faux - Leather Leggings
Faux - Leather Leggings
இதையும் படியுங்கள்:
செம்மரத்தின் செம்மையான ஆரோக்கியம் நன்மைகள்!
Leggings)

இவ்வகை லெக்கிங்ஸ்கள் ஆடம்பரமாக இருக்கும். கம்பீரமான தோற்றத்தை அளிக்கும். இவை கவர்ச்சியாகவும், மிகவும் வசதியாகவும் இருக்கும். ஆண்டு முழுவதும் இவற்றை அணியலாம். உண்மையான தோலின் பல பண்புகளைக் கொண்டு விளங்கும், பெட்ரோலிய மூலப்பொருளைக் கொண்டு உருவாக்கப்பட்ட, மாற்று வகைத் தோலால் செய்யப்பட்டவை. இவை உடலுக்கு எவ்விதத் தீங்குகளையும் ஏற்படுத்தாதவை. விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கு அணிந்து செல்லலாம்.

8. பாதங்களை மூடிய லெக்கிங்ஸ் (Footed leggings)

Footed leggings
Footed leggings

இவை கீழ்ப்பகுதியில் திறப்புடன் இருப்பதில்லை. கால்களை முழுவதும் மூடி மறைக்கக் கூடியவை. குளிர்காலத்தில் சிறந்த உடையாகப் பயன் படுத்தப்படுகிறது. குளிர்காலங்களில் உள்ளாடை களாகவும் அணிந்து கொள்ளலாம். மிகவும் தடிமனான பொருட்களால் செய்யப்பட்டவை.  குளிர்ச்சியைத் தடுக்கச் சரியானவை.

9. முரட்டுத்தனமான லெக்கிங்ஸ் (Rugged Leggings)

மிகவும் மெல்லிய மற்றும் வழுவழுப்பான பொருட்களால் செய்யப்பட்ட, கரடுமுரடான லெக்கிங்ஸ்கள் இவை. முரட்டுத்தனமானதாகவும், சாதாரண தோற்றத்தையும் கொடுக்கும். வெளித்தோற்றத்தில் முரட்டுத்தனமான தோற்றத்தைக் காட்ட விரும்புபவர்களுக்கு ஏற்றவை. ஆடம்பரமான தோற்றத்தை விரும்பாதவர்கள் இந்த வகை லெக்கிங்ஸ்களை அணியலாம். சாதாரண நிகழ்வுகளுக்கும், கல்லூரி மற்றும் அலுவலகத்திற்கு அணிந்து செல்லலாம்.

10. கம்பளி லெக்கிங்ஸ் (Woolen Leggings)

Woolen Leggings
Woolen Leggings

இவை ஆடம்பரமானதாகவும், அணிய வசதியாகவும் இருப்பது மட்டுமல்லாமல், குளிர்காலம் முழுவதும் உங்களை வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும். குளிர்காலத்தில் நடைபயணத்தின் போது இந்த லெக்கிங்ஸை உங்கள் கால்சட்டைக்கு அடியில் ஒரு அடிப்பாகமாகப் பயன்படுத்தலாம். விளையாட்டாளர்கள் அணியும் மேற்சட்டை மற்றும் பெரிதாக்கப்பட்ட ஸ்வெட்டர் ஆடைகளுடன் அணிந்தால் மிகவும் அழகாக இருக்கும். குளிர்காலப் பயணங்களுக்கும், மலைப்பகுதிப் பயணங்களுக்கும் அணிந்து செல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com