
முயற்சியை தொட, நாம் வெற்றியை அடைய வயதோ. வறுமையோ ஒரு காரணமாக இருக்காது. எந்த வயதிலும், எந்த நிலையிலும் முயற்சியை தொடங்கி வெற்றி அடையலாம்.
நாம் சிலரைப் பார்க்கலாம் எதையுமே முயற்சித்துக்கூட தன்னால் முடியாது என்று சட்டெனக் கூறிவிடுவார்கள்.
லியோனார்டோ டாவின்ஸி உலகம் போற்றும் ஒப்பற்ற ஓவியத்தை தனது எண்பது வயதில்தான் வரைந்தார்.
‘மைக்ராஸ்கோப் சைன்சை' பற்றிய தனது ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டபோது அவருக்கு வயது எண்பத்தொன்பது - அவர்தான். ஸோமவில்லி
அதைப்போல சின்ன வயதிலும் பலர் உயர்ந்த சாதனைகளைப் புரிந்துள்ளார்கள்.
ஜோன் ஆப் ஆர்க் என்பவர் ஒரு பெரும்படைக்கு தலைமை தாங்கி வெற்றிவாகை சூடியபோது பதினாறு வயதுதான்.
நம் இந்திய விடுதலைக்காகப் போராடி தங்கள் இன்னுயிரை இழந்தபோது பகத்சிங்கிற்கும், அவரது தோழர்களுக்கும் வயது மிகக்குறைவுதான்.
மாவீரன் நெப்போலியன் பல நாடுகளை வென்றபோது அவனுக்கு வயது இருபத்தைந்து, அதுபோல அலெக்சாண்டரும் சிறு வயதிலேயே மாவீரன் என அழைக்கப்படவில்லையா?
சிலர் தனக்குள்ள நோய்களைக் காரணங்களாய்க் கூறி மூலையில்உட்கார்ந்து விடுவோரையும் நாம் காண்கிறோம். மீண்டும். நெப்போலியனையே எடுத்துக்கொள்வோம். மூலநோய் முற்றிய நிலையிலும் அவன் சாதித்தவைகளைச் சரித்திரம் கூறவில்லையா?'
மில்டன் ஒரு குருடர்; பித்தோவன் செவிடர்; ஜூலியஸ் சீசருக்கு காக்காய் வலிப்பு நோய்கள்.
வறுமை தன்னை வருத்திவிட்டதாக சொல்லி வாடிவதங்கிப் போனவர்களையும் நாம் காணமுடியும். இதற்கு வறுமை படைத்த வல்லுனர்களை இங்கே உதாரணம் காட்ட முடியும்.
இலக்கிய உலகில் தலைசிறந்த மேதைகள் பலருண்டு, அவர்கள் ஒரு கையால் வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மறு கையால் எழுதினார்கள்.
1862 ம் ஆண்டில் ரஷியாவில் ஒரு பிரபல வழக்கு நடைபெற்றது. அதில் எழுந்த சட்டப்பிரச்னைகளைப் பற்றி ஒரு நூல் எழுத எண்ணினார் காரல்மார்க்ஸ்.
காகிதம் வாங்க காசில்லை. ஒரு யோசனை தோன்றிற்று தனது மழைக்கோட்டை விற்றார்; காகிதம் வாங்கினார்; எழுதி முடித்தார். 'மூலதனம்' என்ற அந்த நூல் உலகப் புகழ்பெற்றது.
அவர் மனைவி ஜென்னி கூறினாள் - “எங்கள் குழந்தை பிறந்த போது அதற்குத் தொட்டில் இல்லை; அவன் இறந்தபோது அதற்குச் சவப்பெட்டி இல்லை. இதைவிட வேறு என்ன சொல்ல?"
இளமையில் வேலைக்காரியாக இருந்து ஏழ்மையில் வாழ்ந்தாலும், இருதடவை நோபல் பரிசு பெற்றவர் மேடம் கியூரி அம்மையார்.
சட்டி பானை விற்கும் தொழிலாளியின் மகன் பிச்சையெடுத்த குற்றத்திற்காக பலமுறை சிறை தண்டனையை அனுபவித்தார். இப்படிப்பட்ட ஆசாமி பின்னர் எழுதிய நூல் ஒன்று கொடுத்த வருமானம் அமெரிக்க ஜனாதிபதியின் வருமானத்தைவிட இரண்டு மடங்காக இருந்தது. அவர்தான் எச்.ஜி.வெல்ஸ் என்ற புகழ் பெற்ற எழுத்தாளர்.
வில்கின்ஸ் என்பவர் தாவர சாஸ்திரத்தில் மேதை. இவர் தமது இருபத்து மூன்றாவது வயதில் பார்வையை இழந்துவிட்டார். ஆனால் பூக்களை நாக்கின் நுனியால் ஸ்பரிசித்துப் பார்த்தே இன்ன பூ என்று அதன் பெயரை சொல்லிவிடுவாராம். இப்படி இவர் அடையாளம் கண்டுபிடித்த பூக்களின் எண்ணிக்கை 50,000.