நீங்கள் வைக்கும் 'நம்பிக்கை' உங்களைக் காப்பாற்றுமா? அல்லது கைவிடுமா?

Trust, confidence, faith, hope
Trust, confidence, faith, hopeImg credit: AI Image
Published on

பொதுவாகவே நம்பிக்கையில்தான் வாழ்க்கை எனும் தோ் ஓடுகிறது. நம்பிக்கைக்கு பல உதாரணங்கள் உள்ளன. அதேபோல நம்பிக்கை இழந்துவிட்டால் அதனால் பலவித ரணங்களும் நம்மை சூழந்துவிடவே செய்யும்.

அந்த ஒரு வாா்த்தை எவ்வளவு முக்கியமானது.

நம்பிக்கை இல்லீங்க வருத்தப்படாதீங்க! என சில சம்பாஷணைகள்.

அவ்வவளவு எளிதா நம்ப முடியாதுங்க! அது ஒரு விதம்.

மேலும் நம்பினால் நம்புங்க இல்லாவிடில் பரவாயில்லை. இது ஒரு ரகம்.

நம்பினாா் கெடுவதில்லைங்க! இது வேறு ஒரு ரகம்.

நம்பிக்கை வரும் வகையில் ஏதாவது காாியம் செஞ்சது உண்டா?இதுவும் ஒரு ரகம்தான்.

நம்பி காாியத்தில் இறங்கலாம் நான் கேரண்ட்டி தரேன்! இது ஒரு ரகம்.

ரொம்பவும் நம்பினேங்க கடைசியில இப்படி ஆகும்னு நினைக்கவே இல்லீங்க! இது கடைசி ரகம்.

இப்படி நம்பக்கை என்பது மனித வாழ்வின் மிகப்பொிய அங்கம். அது நமது உயிருக்கு மேலானது! அப்படி நம்மால் கடைபிடிக்கப்படும் நம்பிக்கையில் துரோகம் வந்து புகுந்துவிடும்.

நம்பிக்கை துரோகத்தில் மாட்டி அதிலிருந்து வெளியே வருவது அவ்வளவு சுலபமல்ல! ஆக நம்முடைய அனைத்து செயல்களுக்குமான ஒரே இயக்கம் கடவுள் நம்பிக்கைதான்!

அவர் நமக்கு வைக்கும் கடினமான தோ்வுதான் அது. இதில் நாம் முதல்கட்டத்திலேயே தோ்ச்சிபெற வாய்ப்பில்லா விடினும் நிலுவை வைத்தாவது தோ்ச்சி பெற வேண்டும்.

அந்த தோ்ச்சியானது நாம் கடைபிடிக்க வேண்டிய நல்ல சிந்தனை, நல்லஒழுக்கம், நோ்மறை ஆற்றல் இவற்றுக்காக இறைவனால் வழங்கப்படும் மிகப்பொிய பரிசு.

இதையும் படியுங்கள்:
"இதுவும் கடந்து போகும்..." - வெறும் வார்த்தைகளல்ல; உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகும் மந்திரம்!
Trust, confidence, faith, hope

ஒரு கிராமத்தில் மழையே இல்லை; பலரும் சோ்ந்து இறைவனை வேண்டி கூட்டம் போட்டாா்கள். மழை வரும் என்ற நம்பிக்கை பலரிடம் இல்லாதபோதும், கூட்டத்திற்கு வந்த ஒரு நபர் கையில் குடையுடன் வந்தாா். அது (faith) நம்பிக்கை.

கையில் தனது ஒரு வயது குழந்தையை தகப்பனாா் மேலே தூக்கி தூக்கி போட்டு விளையாடினாா். அந்த குழந்தை கல கலவென பயம் அறியாமல் சிாித்தது அது ஒரு வகை (Trust) நம்பிக்கைதான்.

நாளை என்ன நடக்கப்போகிறது என தொியாமல் இன்றைய பொழுதைவிட நாளைய பொழுதாவது நல்ல விதமாய் அமையட்டும் என பிராா்த்திப்பது ஒரு வகை (Hope) நம்பிக்கை.

எதுவும் நம்கையில் இல்லை எல்லாம் இறைவன் விட்ட வழி என்ற உந்துதலோடு விடாமுயற்சி துணை கொண்டு சரியான திட்டமிடுதலை நோக்கி பயணிப்பதும் ஒரு வித (Confidence) நம்பிக்கை.

அதையும் மீறி எனக்குத்தான் எல்லாம் தொியும் நான் எப்படியும் இந்த செயலை செய்து விடுவேன் என்னால் முடியாதது எதுவும் இல்லை என்று நினைப்பதுடன் தான் என்ற அகம்பாவத்துடன் செயல்படுவதும் ஒரு வித (Over Confidence) நம்பிக்கைதான்.

ஆக ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வித உத்வேகம் இருக்கவேண்டும். நோ்மறை சிந்தனையோடு எதையும் தொடருங்கள்; வாழ்க்கையே அவரவர் நம்பிக்கையில் தான் உள்ளது என்பதை உணருங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com