கோபம் வந்தா இனி சும்மா கத்தாதீங்க... இந்த 'சைலன்ட்' டெக்னிக் ஃபாலோ பண்ணுங்க!

மௌனம் பேசுங்கள் மக்களே! அதுவே நல்ல மருந்து...
Silence
SilenceImg credit: Freepik
கல்பனா ராஜகோபால்

கல்பனா எனும் நான் பள்ளிப் பருவத்திலிருந்தே என்னுள் இருக்கும் தமிழார்வத்தால் புத்தகம் வாசிப்பதிலும் கவிதை எழுதுவதிலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளேன். என் கவிதைக்கு முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் ஐயா அவர்களிடம் இருந்து வாழ்த்துக் கடிதம் பெற்று உள்ளேன். என் கவிதை முதன் முதலில் மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியாகி அதற்கு பரிசும் பெற்றேன். பணி ஓய்வுக்கு பிறகு என் எழுத்துப் பணியை கல்கி ஆன்லைனில் தொடந்துள்ளேன். எனக்கு வாய்ப்பு நல்கிய. கல்கிக் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Updated on: 

மெளனம் என்பது பேசாமல் இருப்பது மட்டுமல்ல; அது ஆழமான சிந்தனைக்கும், உள்ள அமைதிக்கும் வழிவகுக்கும் ஒரு வலிமையான நிலை. சில நேரங்களில் வார்த்தைகள் சொல்ல முடியாத உணர்வுகளை மௌனம் அழகாக வெளிப்படுத்துகிறது.

அந்த மெளனம் தரும் சக்திகளில் ஒரு சிலவற்றைப் பற்றி தான் இந்த பதிவு

மன அமைதி:

ஒருவர் மெளனம் காப்பதால் மன அழுத்தத்தை குறைத்து அமைதியை அளிக்கிறது.

ஆழ்ந்த சிந்தனை:

பேசாமால் மெளனமாக இருப்பது நமது சிந்தனையை தெளிவாக்குகிறது. மெளனம் நம்மை நாமே அறிந்து கொள்ள உதவுகிறது.

கோபத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்:

கோபம் வந்த நேரத்தில் உடனே பேசிவிட்டால், பல பிரச்னைகள் உருவாகலாம். அதே நேரத்தில் சிறிது மௌனம் காத்தால், நம் கோபமும் குறையும். பிறரின் மனமும் காயப்படாது. அதனால் தான் பெரியவர்கள் “சில சமயம் மௌனமே சிறந்த பதில்” என்று கூறினர்.

உறவுகள் மேம்பாடு:

எங்கேயும் எப்போதும் மௌனமாக நம் வேலைகளைத் தொடர்வது தேவையற்ற வாதங்களை குறைத்து எண்ணங்களில் தெளிவை உண்டு பண்ணும். இது சுற்றமும் நட்பு வட்டமும் சிதறாமல் இருக்க உதவுகிறது.

கேட்பு திறன்:

மௌனம் நமக்கு பொறுமையை கற்றுத் தருகிறது. மற்றவர் பேசும்போது அமைதியாகக் கேட்பது கூட ஒரு வகை மௌனமே. கேட்பது ஒரு கலை என்றால், மௌனம் அதன் அடிப்படை. ஆனால், அநீதி நடந்தால் மௌனமாக இருக்கக் கூடாது. உண்மை பேச வேண்டிய இடத்தில் தைரியமாக பேச வேண்டும்.

மன அமைதி:

ஆன்மீக சிந்தனையுடன் கூடிய தியானம் மற்றும் பூஜைகளில் நாம் மௌனத்தை கடைபிடிப்பதால் ஒருவரது மன அமைதி அதிகரிக்கிறது.

இதையும் படியுங்கள்:
உங்க கார் உங்களுக்கு சொத்தா? இல்ல வெத்தா? 90% பேர் பண்ற தப்பு இதுதான்!
Silence

சொல்லின் மதிப்பு:

அதிகமாக வளவளவென பேசுவதை விட பேச வேண்டிய இடத்தில் மட்டும் குறைவாக பேசும் போது நம் வார்த்தைகளின் மதிப்பு உயருகிறது.

செயல் திறன் அதிகரிப்பு:

ஒருவரது அமைதியான சூழல் அவரின் சிந்தனையைத் தூண்டி செயல்திறனை மேம்படுத்துகிறது.

மன வலிமை:

மெளனம் ஒருவரின் மனவலிமையை காட்டுகிறது.அது மனதிற்கு ஓய்வையும், உள்ளத்திற்கு உறுதியையும் தருகிறது.

சிறிது நேரம் தினமும் மௌனமாக இருந்து பாருங்கள். மனம் அமைதியாகும். எண்ணங்கள் தெளிவாகும். மெளனம் பேசும் மொழி நம்மை மேன்மை படுத்தும்.

logo
Kalki Online
kalkionline.com