இந்த 7 விஷயங்களுக்கு தயார் என்றால் வெற்றி உங்களுக்குத்தான்!

Motivation Image
Motivation Imagepixabay.com

''எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவே எண்ணல் வேண்டும்'’

என்றான் பாரதி

நாம் நினைத்த விஷயம் முடிய வேண்டுமென்றால் முதலில் நினைத்தது நல்லதாக இருக்க வேண்டும். உயர்ந்த லட்சியங்கள் வேண்டும்.  தான் நினைத்ததை சாதிக்கும் வல்லமை பெறுவதற்கு அதை அடைந்தே தீர வேண்டும் என்கிற உத்வேகம் மிக அவசியம். அதனுடன் கீழ்கண்ட இந்த ஏழு விஷயங்களுக்கு தயாராக இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். அவை என்ன என்பதை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

1. விமர்சனம்;

வெற்றி பெற நினைக்கும் மனிதன், சராசரியான பிற மனிதர்களிடமிருந்து இருந்து சற்று மாறுபட்டு தெரிகிறான். ஏனென்றால் அவன் பிறரை போல உண்டு, உறங்கி பொழுதுபோக்கி தன் காலத்தை கடக்க விரும்பவில்லை. இதனாலேயே அவன் பிறருடைய விமர்சனங்களுக்கு ஆளாகிறான். ''என்னமோ இவன் புதுசா செய்யப் போறான். அப்படி என்ன சாதிச்சு முடிக்க போறான் தெரியல? இவன் எல்லாம் என்னத்த செஞ்சு?’’ என்று எதிர்மறையான விமர்சனங்கள் தான் பெரும் பாலும் ஒருவர் எதிர்கொள்ள நேரும். அவ்வளவு சீக்கிரமாக யாரும் புதிய முயற்சிகளுக்கு ஒப்புதலோ அங்கீகாரமும் பாராட்டுகளையோ அளிக்க மாட்டார்கள். எனவே விமர்சனங்களை எதிர்கொள்ளும் மனநிலை வெற்றி பெற நினைக்கும் ஒருவருக்கு மிக அவசியம்.

2. நிராகரிப்பு;

ருவர் ஒரு புதிய முயற்சியை தொடங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். ஆரம்பத்தில் அவருக்கு நிராகரிப்புகள் மட்டும்தான் பதிலாக கிடைக்கும். ஒரு புதிய எழுத்தாளர் தன்னுடைய புத்தகங்களை பதிப்பிக்க எண்ணி பல பதிப்பகங்களின் வாயில்களை தட்டி நிராகரிப்பு என்னும் பதிலை பெறலாம். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான  ஜே. கே. ரௌலிங் கூட நிராகரிப்பு என்கிற அனுபவத்தை பல முறை பெற்று அதன் பின்பு அவரது விடாமுயற்சியினால் புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டு உலகமே கொண்டாடும் எழுத்தாளராக புகழ்பெற்றார். எனவே நிராகரிப்புக்கு என்றுமே கலங்கக்கூடாது.

3. தியாகம் செய்தல்;

வெற்றி பெற வேண்டும் என்று நினைத்துவிட்டால் சராசரி மனிதன் செய்யும் காரியங்களை தியாகம் செய்ய வேண்டும். அதாவது மணிக்கணக்கில் போன் பார்ப்பது டிவி பார்ப்பது, நண்பர்களுடன் வெட்டி அரட்டை அடிப்பது, தேவையில்லாமல் ஊர் சுற்றுவது, இவற்றையெல்லாம் தியாகம் செய்துவிட்டு எடுத்துக்கொண்ட காரியத்தில் முழுமூச்சாக இறங்கி வேலை செய்ய வேண்டும்.

4. இரவு கண் விழித்து வேலை பார்ப்பது

''தூங்க விடாமல் செய்வதுதான் கனவு'’ என்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் கூற்று சாதிக்க நினைப்பவர்களுக்கு வேதவாக்காக இருக்க வேண்டும். இரவு 10 மணிக்கு நான் தூங்கியே ஆக வேண்டும் என்றெல்லாம் சாதிக்க நினைப்பவன் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. தான் போட்டு வைத்த திட்டங்களின் படி அன்றைய வேலையை முடித்துவிட்டு தான் தூங்க வேண்டும். பல இரவுகள் கண் விழித்து வேலை செய்ய வேண்டும்.

5. தோல்விகள்

டுத்த காரியங்களில் தோல்விகள் வரும். அதற்கெல்லாம் மனம் கலங்கக்கூடாது தோல்விகள்தான் வெற்றியின் முதல் படி என்று எடுத்துக்கொண்டு தொடர்ந்து செயல்பட வேண்டும். 

இதையும் படியுங்கள்:
உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
Motivation Image

6. சந்தேகம்

பிறரது விமர்சனங்கள், நிராகரிப்பு, தோல்வி இவையெல்லாம் சேர்ந்து நம்மால் வெற்றி பெற முடியுமா? நினைத்ததை சாதிக்க முடியுமா? என்றெல்லாம் சந்தேகம் எழும். ஆனால் சந்தேகத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒரு நாள் வெற்றி பெற்றே தீருவேன் என்று உறுதியாக ஒருவன் தொடர்ந்து செயல்பட வேண்டும். பிறர் அவனை நம்பாவிட்டால் பரவாயில்லை. ஆனால் தன் மேல் அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும். அதில் சந்தேகமே இருக்கக் கூடாது. 

7. விடாமுயற்சி;

ட்சியப் பாதையில் பலவித இன்னல்களை அனுபவித்தாலும் அவற்றையெல்லாம் துடைத்தெறிந்து விட்டு தன்னுடைய முயற்சிகளில் மிகுந்த நம்பிக்கை யுடனும் கவனத்துடனும் தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்பட நினைக்கும் மனிதனுக்கு நிச்சயம் வெற்றி காத்திருக்கும். நினைத்ததை சாதிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com