உறுதியான வெற்றிக்கு முன்னுரிமை முக்கியம்!

Motivation article
Motivation articleImage credit - pixabay
Published on

நாம் எதையும் செய்ய முடியும். ஆனால் எல்லாவற்றையும் செய்ய இயலாது. எனவே உங்கள் முன்னுரிமையை மனதில் கொண்டு என்ன செய்ய முடியும் என்பதைவிட எப்பொழுது செய்ய முடியும் என சிந்தியுங்கள். சரியான கணம் என்பதுதான் எல்லாமே. - Dan Millman.

சிலர் ஒன்றிலிருந்து இன்னொன்று அதிலிருந்து மற்றொன்று என்று தாவித்தாவி அதை செய்யவேண்டும். இதை செய்யவேண்டும் என்று எதிலும் நிலையான இலக்கின்றி கடைசியில் ஒன்றையும் உருப்படியாக முடிக்காமல் களைத்துப்போய் தோல்வியை சந்தித்து இருப்பார்கள்.

ஒரு மரத்தில் வசித்த இரண்டு காகங்கள் இடையே யார் பெரியவர் என்ற  ஈகோ வந்தது. இரண்டும் சண்டையிட்ட போது அங்கு வந்த அணில் ஒன்று இருவரிடையே என்ன பிரச்னை என்று கேட்டு நான் ஒரு போட்டி வைக்கிறேன் அதில் யார் வெற்றி பெறுகிறாரோ அவரே பெரியவர் என்று சொல்ல அதற்கு இரு காகங்களும் சம்மதித்தன.

போட்டி இதுதான். அங்கிருந்த சிறு சிறு கற்களை அலகுகளால் எடுத்து வந்து அழகிய வீடாக உருவாக்க வேண்டும். இரு காகங்களும் தங்கள் திறமையைக் காட்ட ஓடி ஓடி கற்களை எடுத்து வந்து வீட்டை உருவாக்க ஆரம்பித்தது. அப்போது சுற்றுப் பகுதியில் இருந்து காகத்திற்கு சாப்பாடு வைத்து அழைக்கும் ஒரு குரல் கேட்டது. அவர்கள் வைத்த வடை மணமும் காற்றில் பறந்து வந்தது. இரு காகங்களுக்கும்  வாயில் நீர் ஊறியது என்றாலும் அதில் ஒரு காகம் மட்டும் போட்டி விதிகளை மறந்து சட்டென்று அந்த உணவு இருக்கும் பகுதியை தேடி ஓடியது.

 அணிலிடம் "இரண்டே நிமிடம்தானே நான் வந்து இந்த வீட்டை முடிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றது. இடைப்பட்ட அந்த நேரத்தில் மற்றொரு காகம் அழகாக வீட்டை கட்டி முடித்துவிட்டது. வடை சாப்பிட்டு வந்த மற்றொரு காகமும் மிக மிக அழகிய ஒரு வீட்டைக் கட்டியது.

இப்போது  வெற்றி பெற்றது யார் என்று அறிவிக்கும் நேரம் வந்தது. அணில் இரு வீடுகளையும் பார்த்தது நியாயப்படி அழகிய வீட்டைக் கட்டிய இரண்டாவது காகத்தைத்தான் வெற்றி பெற்றதாக அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அணில் தேர்ந்தெடுத்தது முதல் காகத்தையே. அதற்கு அணில் சொன்ன காரணம், "இந்த காகம் ஒரே ஒரு வேலையில் மட்டும் கவனத்தை வைத்து நான் சொன்ன நேரத்திற்குள் தனது நோக்கத்தை முடித்துவிட்டது. இனி அது போய் அந்த  வீட்டினர் வைத்த உணவை சாப்பிடலாம். ஆனால் நீயோ அவர்களை கூப்பிட்ட அடுத்த நிமிடம் ஓடிப்போய் விட்டாய். உன்னால் ஒரு வேலையில் மட்டும் கவனம் செலுத்த முடியவில்லை. நீ அழகிய வீட்டை இப்போது கட்டி இருக்கலாம். ஆனால் நேரம் தவறிவிட்டது  இந்த காரணத்தால் நீ வெற்றியை இழந்து விட்டாய்" என்று சொன்னது.

இதையும் படியுங்கள்:
சமையலுக்கு ருசி சேர்க்கும் 5 விசேஷப் பொருட்கள்!
Motivation article

உதாரணமாக நமக்குப் பசி இருக்கும்போது கிடைக்கும் எந்த உணவும் ருசியிலும் மதிப்பிலும் சிறந்ததாக இருக்கும். வெற்றி என்பதும் பசியின்போது கிடைக்கும் மதிப்பு மிக்க உணவு போலத்தான். நமக்கு அந்த நேரம் எது முக்கியமோ அதில் மட்டுமே நமது கவனம் இருந்தால் அந்த செயல் சிறக்கும்.

எந்த நேரத்தில் எதற்கு முன்னுரிமை தந்தால் வெற்றி பெறலாம் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு நம்முடையதே. இலக்கின்றி அநேக செயல்களில் ஈடுபட்டு எதிலும் முழுமை பெறாத தோல்வி அடைவதை விட ஒரே  இலக்கை நிர்ணயித்து அதற்கான செயல்களை மேற்கொண்டு வெற்றி அடைவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com