புத்திசாலிகள் சந்திக்கும் பிரச்சனைகள்!

Intelligent people.
Problems faced by intelligent people!

புத்திசாலித்தனம் என்பது ஒரு வரம் என பலர் நினைத்தாலும் புத்திசாலிகள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி பெரும்பாலானவர்கள் கண்டுகொள்வதில்லை. அவர்கள் புத்திசாலிகள் என்பதற்காகவே தனிமை, தவறான புரிதல் மற்றும் அதிக எதிர்பார்ப்புகள் போன்ற பிரச்சனைகளை அதிகம் சந்திக்கின்றனர். இந்தப் பதிவில் புத்திசாலிகள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகள் என்னென்ன என்பது பற்றி முழுமையாகப் பார்க்கலாம். 

தனிமை: புத்திசாலிகள் சமூக சூழ்நிலைகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டது போல உணரலாம். அவர்களின் சிந்தனைகள் மற்றும் ஆர்வங்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு இருப்பதால், அவர்கள் பிறருடன் இணைந்து செயல்படுவது கடினமாக இருக்கும். 

தவறான புரிதல்: புத்திசாலிகள் பெரும்பாலும் மாற்றி யோசிப்பவர்கள் அல்லது அறிவாளிகள் என்று பிறரால் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறார்கள். அவர்களது சிந்தனைகள் வித்தியாசமாக இருப்பதால், அவர்களது கருத்துக்கள் மற்றும் யோசனைகள் புறக்கணிக்கப்படலாம் அல்லது கேலி செய்யப்படலாம். 

அதிக எதிர்பார்ப்புகள்: புத்திசாலிகள் தங்கள் திறமைகளைப் பயன்படுத்தி சிறந்து விளங்க வேண்டும் என்ற அதிக எதிர்பார்ப்புகளை எதிர்கொள்கின்றனர். எனவே அவர்களுக்கு தோல்வி மற்றும் கஷ்டங்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். ஏனெனில் அவர்கள் எப்போதும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றே இச்சமுகம் எதிர்பார்க்கிறது. 

மன அழுத்தம் மற்றும் பதட்டம்: புத்திசாலிகள் அதிகமாக சிந்தித்து சிக்கல்களைத் தீர்க்கும் திறன் கொண்டவர்கள். இது அவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும். குறிப்பாக அவர்கள் அதிக வேலை மற்றும் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். 

இதையும் படியுங்கள்:
உண்மையிலேயே ஒருவர் புத்திசாலி என்பதை கண்டுபிடிப்பது எப்படி? 
Intelligent people.

மனச்சோர்வு மற்றும் பிற மனநலப் பிரச்சனைகள்: புத்திசாலிகள் மனநலப் பிரச்சினைகளுக்கு ஆளாவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்கு அவர்கள் பல விஷயங்களை அதிகமாக யோசித்து செயல்படுவதே காரணமாக இருக்கிறது. மேலும், சமூக எதிர்பார்ப்புகள் தவறான புரிதல்கள் மற்றும் அவர்களின் தனிமை உணர்வு போன்ற அனைத்தும் ஒன்றாக சேர்ந்து மனச்சோர்வை ஏற்படுத்தி, மனநிலை மாற்றத்திற்கு வழி வகுக்கலாம். 

எனவே புத்திசாலிகளுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பதை புரிந்துகொண்டு, அவர்கள் தங்களது திறமைகளை இயல்பாக அவர்கள் பார்க்க வேண்டும். ஒவ்வொருவரும் இவ்வுலகில் தனித்துவமானவர்கள் என்பதை நினைவில் கொண்டு, தன்னை மற்றவர்களுடன் ஒப்பிடாமல் இருப்பது மிகவும் முக்கியம். போதுமான தூக்கம், ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி செய்வது மூலமாக புத்திசாலிகள் தங்களின் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com