உங்கள் மூளையை சரியாக புரோகிராம் செய்யுங்கள்! 

Program your brain.
Program your brain.

நாம் அனைவருமே நம்முடைய வரலாற்றை சற்று புரட்டிப் பார்த்தால், மிகவும் வலி மிகுந்த தருணங்கள் சிலது அல்லது பலது வந்திருக்கும். அந்த அழுத்தம் மிகுந்த தருணங்களில் இருந்து வெளிவருவது மிகவும் கடினமான ஒன்றாக உணர்ந்திருப்போம். இன்றளவும் பலர் தங்களுடைய அழுத்தங்களை நினைத்து, அதிலிருந்து மீள முடியாமல் வாழ்க்கையை பெரும் துயரத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பர். இந்த பதிவைப் படித்த பிறகு, உங்களின் மனநிலையை மாற்றுவதற்கான உந்துதல் கிடைக்கும் என நம்புகிறேன்.

முதலில் மனித உடலை ஒரு கணினி போன்று பாவித்துக் கொள்ளுங்கள். கணினியானது செயல்பட நிரலாக்கம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல நம்முடைய செயல்பாடுகள் சிறப்பாக அமைய நம்முடைய அனுபவங்கள் மிக முக்கியம். நமது வாழ்வில் நாம் காணும் அனுபவங்கள் அனைத்துமே நமது மூளையில் நிரலாக்கம் போன்று பதிவு செய்யப்படுகிறது. அதுவே நம்முடைய அடுத்த செயல்களுக்கான கட்டளைகளைத் தருகிறது.

நாம் நமது வாழ்க்கையை மிகவும் கடினமாக உணர்கிறோம் என்றால், நாம் மோசமான அனுபவ நிரலாக்கத்தை மூளையில் செலுத்தியுள்ளோம் என்று அர்த்தம். எனவே நமக்கு துன்பத்தை அழிக்கும் தவறான நிரலாக்கத்தை நீக்கிவிட்டு நேர்மறை சிந்தனைகளை ஊக்குவிக்கும் நிரலாக்கத்தை உள்ளீடு செய்ய வேண்டும்.

அதற்கு அதற்கு நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உங்களைப் பற்றிய அனைத்து விடயங்களையும் அறிந்து கொள்ளுங்கள். உங்களின் பழக்கவழக்கங்கள், செயல்பாடுகள், எண்ண ஓட்டங்கள் மேலும் உங்கள் மீது நீங்கள் ஒரு பார்வையை வைத்திருப்பீர்கள் அல்லவா, அனைத்யும் சற்று அலசி ஆராயுங்கள். அது உங்களைப் பற்றிய ஓர் உண்மைத் தன்மையை அறியச்செய்யும்.

இரண்டாவது, நீங்கள் செய்ய நினைத்த செய்யாமல் தவறவிட்ட விஷயங்களை சிறிது காலம் தொடர்ச்சியாக செய்ய முயற்சியுங்கள். அது உங்களின் அன்றாட வாழ்க்கை சுழற்சியில் புதிய அனுபவங்களை ஏற்படுத்த மிகவும் பயன்படும். அதுமட்டுமின்றி புதிய செயல்பாடுகள் என்பது உங்களின் மனநிலையை தலைகீழாக மாற்றிவிடும். புதிய சிந்தனைக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

மூன்றாவது, உங்களின் மனநிலையை சீர்படுத்துங்கள். என்ன செய்தால் இதுபோன்ற கடினமான சூழலில் இருந்து நான் வெளிவர முடியும். இதை நானே தீர்த்துக் கொள்ளலாமா? அல்லது இன்னொரு மனிதனின் உதவி எனக்கு தேவையா? என்பதனை அறிந்து, தேவைப்பட்டால் பிற மனிதர்களின் உதவியை எந்தவித கூச்சமும் இன்றி நாடுங்கள். இது உங்களின் வருத்தத்தை வேகமாக போக்கக்கூடிய யுத்தி.

நான்காவது, இதுநாள் வரையில் நீங்கள் நினைத்து வைத்திருந்த அனைத்து நம்பிக்கைகளையும் வேறு கோணத்தில் சிந்தித்துப் பாருங்கள். முடிந்தால் இதுவரையில் நீங்கள் மேற்கொண்டிருந்த அனைத்து பழக்கவழக்கங்களையும் தைரியமாக கைவிடுத்து, உங்களின் வாழ்விற்கு மிகவும் உதவி புரியும் புதிய பழக்கங்களை எதைப்பற்றியும் சிந்திக்காமல் தொடங்குங்கள். உங்களின் பழக்கவழக்கங்கள் தான் எங்கள் என்பதனை யாரும் மறுக்க முடியாது.

இதையும் படியுங்கள்:
ஆன்லைன் வேலைகளுக்கு உகந்த டாப் 10 நாடுகள்! 
Program your brain.

இறுதியாக, நீங்கள் எது செய்ய வேண்டுமானாலும் இதை எப்போதும் மறக்க வேண்டாம். உங்களுடைய பிரச்சினைகளை உங்களால் மட்டுமே முழுமையாக தீர்க்க முடியும். மாற்றத்தினை நீங்கள் ஏற்படுத்தாத வரை உங்கள் வாழ்வில் ஏதும் மாறாது என்பதனை சற்று சிந்தியுங்கள். அவர் கூறினார் இதை செய்தேன் இவர் கூறினார் அதை செய்தேன் ஆனால் வாழ்க்கை மாறவில்லை என்று புலம்புவது முற்றிலும் தவறானது. 

ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் உங்களுக்கு ஒரு விஷயம் உண்மையிலேயே தேவை எனில் அதனைத் தேடி நீங்கள்தான் செல்ல வேண்டும். பிறர் கூறுகிறார்கள் என்பதற்காக எதுவும் தன்னிச்சையாக பறந்து வந்து உங்கள் மடியில் உட்காராது என்னும் பகுத்தறிவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதுவே உங்களின் உண்மையான மாற்றத்தின் திறவுகோல்.

மேற்கூறிய செயல்களை நீங்கள் தொடர்ந்து முயற்சிக்கும் பட்சத்தில், உங்களையும் அறியாமல் உங்களின் மனநிலை புத்துணர்வடையும். உங்களுக்குள்ளே ஓர் தன்னம்பிக்கை, தைரியம் ஊற்றெடுக்கும். நம்மைப் பற்றி நாம் அறிந்து, நமக்கானதை நாம் செய்வது தானே உண்மையான மகிழ்ச்சி.

மாற்றம் வேண்டுமெனில், மாற்றத்திற்கான முதலடி எடுத்து வையுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com