உலகில் ஒரே ஒரு மனிதன் மட்டும் இருந்தால் என்ன ஆகும்? 

one man in the world
What if there was only one man in the world?
Published on

ஒரு நாள் காலையில் நீங்கள் கண்விழித்துப் பார்க்கும்போது உலகமே வெறிச்சோடி இருக்கிறது. உங்களைச் சுற்றி யாருமே இல்லை என்றால் என்ன செய்வீர்கள்? இனி உங்களுக்கு எந்த கடமையும், விதியும் இல்லை. எந்த வரம்புகளும் இன்றி சுதந்திரமாக இருக்கலாம் என்பது போன்ற சிந்தனை அருமையானதாகத் தோன்றலாம். ஆனால் அது உண்மையா? உலகின் கடைசி மனிதராக இருப்பது நினைத்துப் பார்க்க நன்றாக இருந்தாலும், அதுபோன்ற சூழலில் வாழ்வது மிகவும் கடினமான ஒன்று என்பதே யதார்த்தம். இந்தப் பதிவில் அத்தகைய சூழலில் உயிர்வாழ்வதற்கான சவால்கள் மற்றும் திட்டங்கள் பற்றி பார்க்கலாம். 

உணவு: கடைகளில் உள்ள உணவுப் பொருட்கள் உங்களுக்கு அதிகமாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் பழங்கள், காய்கறிகள் போன்றவை விரைவில் கெட்டுப் போய்விடும். எனவே கிடைக்கும் வரை அவற்றை நன்றாக சுவைத்து மகிழுங்கள். ஆனால் கைவிடப்பட்ட கார்கள் படக்குகள் மற்றும் விமானங்களைப் பயன்படுத்தி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என நினைக்காதீர்கள். அவற்றில் உள்ள எரிபொருள் தீர்ந்து போனால், அதே பகுதியில் நீங்கள் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். ஒருவேளை உணவு இல்லாத பகுதியில் போய் மாட்டிக் கொண்டால், உங்கள் கதி அவ்வளவுதான். 

தங்குமிடம்: ஒரு மனிதனுக்கு உணவு தண்ணீர் மற்றும் தங்குமிடம் ஆகியவை அடிப்படையான ஒன்றாகும். இப்போது உங்களுக்கு இந்த உலகமே வீடாக இருக்கும். உங்கள் விருப்பம் போல எங்கு வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம். ஆனால் எங்கு தங்குகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். பராமரிப்பு இல்லாமல் நகரங்கள் விரைவில் சீரழிந்துவிடும். மழை, பனி, வெயில் போன்ற இயற்கை காரணிகள் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள் இல்லாத இடங்களில் துர்நாற்றம், அழுகல் மற்றும் புஞ்சைகள் காணப்படும். எல்லா இடங்களிலும் தாவரங்கள் முளைக்க ஆரம்பிக்கும். 

நகரத்தை நீங்கள் தனி ஒரு ஆளாக மீட்டெடுக்கப் போராடினாலும், அதிகப்படியான தாவரங்களால், ஒரு சிறு தீப்பொறி கூட நகரத்தையே எரித்துவிடும். இச்சமயத்தில் நீங்கள் தீயணைப்பு வீரர்களை அழிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே மலைப்பகுதிகளில் வாழ்வது நல்லது. 

பாதுகாப்பு: அப்படியே நீங்கள் மலைப் பகுதிகளில் வாழ்ந்தாலும், காட்டு நாய்கள், காட்டுப் பூனைகள், கரடிகள் போன்ற காட்டு விலங்குகளிடமிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கும். இதில் மற்றொரு ஆபத்து என்னவென்றால், உலகெங்கிலும் சுமார் 400க்கும் மேற்பட்ட அணு உலைகள் உள்ளன. அவை முறையான கண்காணிப்பு இல்லாமல் பாதுகாப்பு அமைப்புகள் செயலிழந்து உலகம் முழுவதும் கதிர்வீச்சு ஏற்பட்டு பல பகுதிகள் வசிக்க முடியாத இடங்களாக மாறிவிடும். 

உணவுக்கான போராட்டம்: தொடக்கத்தில் உங்களுக்கு உணவு வேண்டுமெனில் நகரம்தான் நீங்கள் வாழ்வதற்கு சிறந்த தேர்வாக இருக்கும்.‌ மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் சில உணவுகளை ஃப்ரீசரில் வைத்திருப்பார்கள், அவை சில காலம் உங்களுக்குப் போதுமானதாக இருக்கும். கிராமபுரத்தில் வாழ நினைத்தால், அங்குள்ள பயிர்கள் மற்றும் கால்நடைகள் முறையான பராமரிப்பு இல்லாமல் அழிந்துவிடும். இதன் காரணமாக நீங்கள் கற்கால மனிதனாக மாற வேண்டி இருக்கும். அதாவது வேட்டையாடி உணவு உட்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். 

இதையும் படியுங்கள்:
உடலில் வெண்புள்ளிகள் தோன்றுவதன் காரணம் தெரியுமா?
one man in the world

நீங்கள் சற்று நிதானமாக சிந்தித்து செயல்பட்டால், உங்களிடம் அதிக நேரம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, நீங்களாகவே வாழ்வதற்கு தேவையான எல்லா விஷயங்களையும் செய்து கொள்வீர்கள். நீங்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள எக்கச்சக்கமான புத்தகங்கள் இருக்கும். அவற்றைப் படித்து உங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை நீங்களே கற்றுக் கொள்ளலாம். 

எனவே, தொடக்கத்தில் உலகில் தனி மனிதனாக வாழ்வது கடினமாக இருந்தாலும், அவ்வாறு இறுதிவரை வாழ்வது சாத்தியம்தான். ஆனால் மனரீதியாக நீங்கள் அதிகம் பாதிக்கப்படுவீர்கள். மனிதர்கள் கூட்டமாக வாழும் ஒரு இனமாகும். எனவே சமூகத் தொடர்பு இல்லாமல் நீங்கள் அதிக கவலையுடன் காணப்படுவீர்கள். இருப்பினும் எல்லா சூழ்நிலைகளிலும் மனிதனால் வாழ முடியும். யாருமே இல்லை என்றாலும் அதை ஏற்றுக் கொண்டு வாழும் தன்மை மனிதனிடம் உண்டு. 

ஒருவேளை நீங்கள் இந்த உலகில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்? என கமெண்ட் செய்யவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com