மக்கள் கணிப்பு
முதலாவதாக எந்த பொருளை உற்பத்தி செய்ய விரும்புகிறோமோ அதைப் பற்றிய மக்களின் கணிப்பு தேவை. மக்கள் தரமான பொருளை விரும்புகிறார்களா, மலிவான விலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களா போன்ற விவரங்கள் நமக்குத் தேவை. ஒரு கடையில் விற்பனையாளர் பொறுமையாக பல தண்ணீர் பாட்டில்கள் பற்றி விளக்கினார். அவர் அங்கு எத்தனை ஆண்டுகளாக வேலை பார்க்கிறார் என கேட்கப்பட்ட போது, நான் விற்பனையாளர் இல்லை. இந்தப்பொருளை தயாரிக்கும் பொறியாளர். மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள என் நிறுவனம் ஒரு வாரம் இங்கே அனுப்பியது என்றார். மக்களுடன் தொடர்பு இருத்தல் வேண்டும்.ஏனென்றால் அவர்கள் நம் எஜமானர்கள்.
தன்னம்பிக்கை
பணத்தை மனிதன்தான் உண்டு பண்ணுகிறான். என்னால் முடியும் என்ற அசாத்திய தன்னம்பிக்கை இவர்களிடம் உண்டு. ஓட்டப் பந்தய வீரர்களைப் போன்று இவர்கள் ஓடத் தயங்க மாட்டார்கள். கோழைகள் அல்ல இவர்கள். கடலில் குளிக்கும்போது எப்போது தலையைத் தூக்க வேண்டும். எப்போது கடல் அலைக்குள் தலையைத் தாழ்த்தி வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
தத்துவம் பேசமாட்டார்கள்
அவர்கள் பேசுவதைவிட செயலில் ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் அணுகுமுறை எப்போதும் செயல்,செயல், செயல் என்றிருக்கும். மூச்சைப் பிடித்துக் கொண்டு வேலையை முடிப்பதில் வல்லவர்கள். ஒருமுறை ஆவடியில் காங்கிரஸ் மாநாடு நடந்தபோது அதை ஏற்பாடு செய்யும் பொறுப்பை ஜெமினி வாசனிடம் காமராசர் ஒப்படைத்தார். அதை அவர் வெற்றிகரமாகச் செய்து பலத்த பாராட்டைப் பெற்றார்.
குறைந்த ஆட்கள்
இவர்கள் குறைந்த ஆட்களை வைத்துக் கொண்டு போதுமான இடத்தை வாடகைக்குப் பிடித்துக் கொண்டு தொழிலைத் தொடங்கி வளர்க்கின்றனர். சிக்கனமாக இருப்பார்கள். தொழில்தான் அவர்களது குறி. சொந்த சுகபோகங்களை தன் தியாகம் செய்யத் தயங்க மாட்டார்கள்.
மதிப்பார்கள்
தங்களிடம் வேலை பார்ப்பவர்களை மனிதர்களாக மதிப்பார்கள். வேலை பார்ப்பவர்களின் கச்சாப் பொருளை வாங்கும்போதும் விற்கும்போதும் அதில் ஈடுபட்டவர்களுக்கு. மரியாதை காட்டுவார்கள். அவர்கள் கூறும் யோசனைகளை காது கொடுத்துக் கேட்பார்கள். மனவியல் என்ன சொல்கிறது தெரியுமா? "நீ ஒருவனை முதல் தர மனிதனாக நடத்தும்போது உனக்கு அவனிடமிருந்து முதல் தர பணி கிடைக்கிறது" என்று. நம்மிடம் சிலர் வேலை செய்கிறார்கள் என்றால் அவர்கள் தாழ்ந்தவர்கள் ஆவதில்லை. மனிதர்களிடமும் சரி மற்ற உயிர்களிடம் உம் சரி அவர்களுள் இருக்கும் ஆத்மாவை பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மேற்கூறியவற்றை கவனம் வைத்தால் வெற்றி நிச்சயம்.