கேள்விகளே வெற்றிக்கான சாவிகள்!

motivation image
motivation imageImage credit - pixabay.com

வெற்றி, தோல்விகள் தேர்தல் முடிவுகளைப் போல் குழப்பமானவை அல்ல. தேர்வின் முடிவு போல் தீர்க்கமானவை. எதை அடைய வேண்டும் என்ற தெளிவு இருந்தால்தான் அதை நீங்கள் அடைய முடியும். உங்களுக்குத் தெளிவு இல்லாதபோது கிடைத்தாலும் ருசிக்காது.

நாம் அடைய வேண்டிய நிலை என்ன  அதற்கு என்ன முயற்சிகள் தேவை. எவை என்று விழிப்புணர்வு தோன்றிவிட்டால் நமக்கு வெற்றி நிச்சயம். சிலர் ஹோட்டலில் கூட என்ன சாப்பிடுவது  என்ற தெளிவே இன்றி மெனு கார்டை வெறித்துப் பார்ப்பார்கள். இந்த குழப்பவாதிகள் வெற்றிக் கனியைப் பறிப்பது மிகக் கடினம்.

வாழ்க்கையில் என்ன  வேண்டும் என்பதில் தெளிவு கண்டிப்பாக இருக்க வேண்டும். அமெரிக்க ஜனாதிபதியாக விளங்கியவர் ஜான்.எஃப் கென்னடி. அவர் தினமும் தன்னைக் காண வரும் பார்வையாளர்களிடம் சில நிமிடங்கள் செலவிடுவார். ஒரு மாணவனின் கன்னத்தை தட்டி உன் இலட்சியம் என்ன என்று கேட்க அவன்  பளீரென்று", நீங்கள் இன்று இருக்கும் இடத்தில்  நான் இருக்க வேண்டும்.இதுதான் என் இலட்சியம்" என்றான் அந்த சிறுவன். அந்த சிறுவன் பிற்காலத்தில் அப்படியே ஆனான். அவர்தான் பில் க்ளிண்ட்டன். அவர் எண்ணம் வேறு ஆசையோ கற்பனையோ அல்ல. தீர்க்கமான தீர்மானம். அதனால் அது நடந்துவிட்டது. எல்லோருக்கும் இப்படி நடக்குமா என்று கேள்வி எழும். நம்பிக்கைகள் நடக்காமல் போகும் பட்டியலில்  நம் பெயர் ஏன் இருக்க வேண்டும்? பலித்தவர் பட்டியலில் நம் பெயர் இருக்க வேண்டும்  என்று நீங்கள் நினைக்கக் கூடாதா? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. 

நன்றாக வளர்ந்திருந்த ஒரு இளைஞனிடம் ஒரு பெரியவர் நீ என்ன செய்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்  அப்பாவுக்கு உதவியாக இருக்கிறேன் என்றான். அப்பா என்ன செய்கிறார் என்று கேட்க அவர் சும்மாதான் இருக்கிறார் என்று கூற பெரியவருக்கு அதிர்ச்சி. தான் காலத்தை வீணாக்குகிறோம் என்ற குற்ற உணர்வு  கூட இல்லாத இவனால் எப்படி முன்னேற முடியும்? இப்போது நாம் இருக்கும் நிலை என்ன.முன்னேற என்ன செய்யலாம் என்ற சின்னச் சின்னக் கேள்விகள்  உங்களுக்குள் பிறந்துவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக விடைகள் கிடைக்கத் தொடங்கும்.  ஒன்றை  மறந்துவிடாதீர்கள்.

இதையும் படியுங்கள்:
ஃபேஷன் உலகில் டிரெண்டாகி வரும் புதுவித சோக்கர் நெக்லஸ்கள் பற்றி பார்க்கலாம்!
motivation image

எவ்வளவு பெரிய கதவுக்கும்  தாழ்ப்பாள் சின்னதுதான். பூட்டோ அதைவிடச் சின்னது. சாவியோ பூட்டை விடச் சின்னது. சின்ன சாவியால் பூட்டைத்திறந்தால்  பெரிய கதவுகளையே  சுலபமாகத் திறக்கலாம். எனவே சின்னச் சின்ன கேள்விகள், பெரிய பெரிய கோட்டை வாசலைத் திறக்கப் போகும் சாவிகள். உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள். அந்த கேள்விகள்  கோட்டை வாசலைத் திறக்கும் சாவிகள். இதை நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு  வெற்றி நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com