எண்ணத்தை உயர்த்துங்கள் வாழ்க்கை வண்ணமயமாகும்!

Life is colorful...
Change your mindImage credit - pixabay
Published on

"வண்ணம் கலந்தால் ஓவியம் மலரும்! எண்ணம் உயர்ந்தால் வாழ்க்கை உயரும்!"

வாழ்க்கையை மாற்றி அமைக்க விரும்பினால். முதலில் உங்களுடைய எண்ணத்தை மாற்றுங்கள். ஏனென்றால் எண்ணமே வாழ்க்கையாக மலர்கின்றது.

எதைச் சிந்திக்கின்றீர்களோ அதன் பிரதிபலிப்பே உங்களுடைய வாழ்க்கையாகும். மேலும் உலகில் இயல்பாகவும் இயற்கையாகவும் நடைபெறும் நிகழ்வுகளை உங்கள் மனதில் நிகழும் சிந்தனை ஓட்டத்தின் அடிப்படையில்தான்  உணர்ந்து கொள்கின்றீர்கள்.

அதாவது உங்களுடைய மனக்கண்ணாடியின் வழியாகத்தான் நீங்கள் எதையும் பார்க்கின்றீர்கள். உங்களுடைய மனத்தின் தன்மையைப் பொறுத்துத்தான் வெளி உலகைக்காண்கிறீர்கள்.

மேலும், நீங்கள் சந்திக்கும் நபர்களின் செயல்களை ஆக்கப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கு, உங்கள் சிந்தனை ஓட்டம் ஆக்கப்பூர்வமாகவும் தெளிவாகவும் இருக்கவேண்டும்.

மனதில் குழப்பமும் பயமும் இருந்தால் எல்லாம் தவறாகவும் எதிராகவும்தான் தெரியும். ஆகவே முதலில் உங்கள் எண்ணத்தை உயர்த்துங்கள். எண்ணம் உயர்ந்தால் வாழ்க்கையும் உயரும். வளமும் நிறையும்.

சிலர் சிந்திப்பார்கள். ஆனால் அச்சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்க மாட்டார்கள். காரணங்களைக் கூறுபவர்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். அதாவது "காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை. காரியங்கள் பல செய்பவர்கள் காரணங்கள் சொல்வதில்லை" என்பதுதான் அது.

இதையும் படியுங்கள்:
மனச்சோர்வை மாற்றுங்கள்!
Life is colorful...

ஆகவே, எதற்கெடுத்தாலும் காரணங்களை சொல்வதை விட்டு அந்தக் காரியத்தைச் செய்து முடிப்பதற்கான வழிகளைத் தேடுங்கள் எத்தகைய பிரச்னையாக இருந்தாலும் அதைத் தீர்ப்பதற்கான வழி நிச்சயம் உண்டு என்று முதலில் நம்புங்கள்.

அப்பொழுதுதான் தீர்வுகளைத்தேடி உங்களுடைய சிந்தனைப் பறவைகள் முயற்சிச் சிறகுகளை விரிக்கத் தொடங்கும். இதற்கெல்லாம் தீர்வு இருக்காது. இதை யாராலும் தீர்க்க முடியாது என்பது போன்ற எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதற்கு எக்காரணம் கொண்டும் மனதில் இடம் கொடுத்து சோர்ந்து உட்காராமல் எண்ணங்களுக்கு வண்ணம் கொடுத்து வாழ்க்கையில் உயருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com