Woman
Woman

பலராலும் மதிக்கப்படும் பெண்ணிடமுள்ள 10 சிறப்பான குணங்கள்!

Published on

பிறரால் பெரிதும் மதிக்கப்படும் ஒரு சிறந்த பெண்மணியிடம் உள்ள தனித்துவமான 10 வகையான குணநலன்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

1. நாலு பேர் சூழ்ந்திருக்கும் ஓர் இடத்திற்கு அந்தப் பெண் வரும்போது, அங்குள்ளவர்கள் அவளை வெகு இயல்பாக வரவேற்கும் சூழல் அங்கு உருவாகும். அவளிடமுள்ள நேர்மறை சக்தி மற்றும் எளிதில் எல்லோருடனும் பழகக்கூடிய நற்குணம் போன்றவை அங்குள்ளவர்களை அச்சம் மற்றும் எவ்வித அசௌகரிய உணர்வுமின்றி, அவளிடம் நெருங்கிப் பழகத் தூண்டும்.

2. அவளின் களங்கமற்ற சிரிப்பு அன்பையும் ஓர் இதமான உணர்வையும் வெளிப்படுத்துவதாக இருக்கும். அது அங்குள்ளவர்களை அவள் ஏற்றுக்கொண்டு மரியாதை தருவதாக அவர்கள் எண்ணுவதற்கு வாய்ப்பாகும். அதுவே அவர்களின் அந்த நாள் இனிய நாளாக அமைந்து அவளுடன் இணைந்து செயல் புரிய உதவும்.

3. அந்தப் பெண் தன் உடனிருக்கும் நபர்களுடன் உரையாடுகையில், மற்றவர்களையும் முக்கியமானவர்களாகக் கருதியே உரையாடலைத் தொடர்ந்து கொண்டிருப்பாள். அவள் அங்கிருப்பது, அவளின் உடல் மொழி மற்றும் அவளின் அர்த்தமுள்ள ஆமோதிப்புகள் போன்ற அனைத்தும் அவள் உண்மையாகவே மற்றவர்கள் கூறுவதில் கவனம் செலுத்துகிறாள் என்பதை நிரூபிப்பதாக இருக்கும்.

4. அவளுக்குள்ளிருக்கும் நகைச்சுவை உணர்வு அவ்வப்போது வெளிப்பட்டு, மற்றவர்களை சிரிக்கும்படி செய்து, சூழ்நிலையை கல கலப்பாக்க உதவும். எப்போது ஒரு ஜோக் சொல்லணும், எந்த நேரம் தனக்கு நேர்ந்ததொரு வேடிக்கையான சம்பவத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை யெல்லாம் அவள் தெளிவாக அறிந்திருப்பாள்.

இதையும் படியுங்கள்:
உணர்ச்சி பிணைப்பு (Emotional bonding) வாழ்க்கைக்கு அவசியம் தேவையா?
Woman

5. மற்றவர்களின் உணர்ச்சிகளை சுலபமாகப் புரிந்துகொண்டு இரக்கம் காட்டுவது அவளின் இயல்புகளில் ஒன்றாக இருக்கும். சம்பந்தப்பட்டவர்கள் இதை புரிந்து கொள்ளும்போது, அவர்கள் மீது அவள் காட்டும் உண்மையான அக்கறையை பாராட்டவும் அதற்காக நெகிழ்ந்து போகவும் தவற மாட்டார்கள்.

6. நேர்மையான, உயர்ந்த நற்குணம் கொண்ட பெண்கள் எந்த சூழ்நிலையிலும் பிறரை இகழ்ந்து பேசவோ, அல்லது மற்றவரை சிறுமைப்படுத்தும் செயல்களில் ஈடுபடவோ மாட்டார்கள். அவர்களின் மன உறுதியும் பணிவும் மற்றவரை அவர்களுடன் இருக்கும்போது மரியாதையுள்ளவராகவும், மதிப்பு மிக்கவராகவும் உணரச் செய்யும்.

7. அந்தப் பெண் பிறரிடம் பேசும்போது நேருக்கு நேர் கண்களைப் பார்த்தபடி பேசுவது அவளின் கவனிப்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும். பிறர் கூறுவதை உண்மையாகவே அவள் கவனிக்கிறாள் என்ற நம்பிக்கை பேசிக்கொண்டிருப்பவர் மனதிலும் உண்டாகும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் கட்டை விரல் எப்படி இருக்கும்? அப்போ உங்கள் குணம் இப்படி தான் இருக்கும்!
Woman

8. தனித்துவ குணம் கொண்ட பெண்கள் பிறரிடம் பேசும்போது, முன்பு சந்தித்தபோது பேசிய தனிப்பட்ட சுவாரஸ்யமான நிகழ்வுகள் மற்றும் உடன் பேசிக்கொண்டிருப்பவரின் விருப்பங்கள், முன்னுரிமைகளையெல்லாம் சுலபமாக நினைவுபடுத்தி பேசுவதுண்டு. இதெல்லாம் அந்தப் பெண் ஸ்பெஷல், மிகவும் மதிக்கப்பட வேண்டியவர் என்ற எண்ணங்களை மற்றவரின் மனதில் உண்டுபண்ணும்.

9. தனித்துவ குணங்களுக்காக மதிக்கப்படும் பெண், நவீன கால போட்டிகள் நிறைந்த உலகில் தனக்கொரு நிலையான கௌரவமான வேலையைத் தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து தன் கல்வியறிவை அப்டேட் பண்ணிக்கொண்டேயிருப்பாள்.

10. பொருளாதார ரீதியில் தன்னைத் தானே நிலை நிறுத்திக் கொண்டு சுய சார்புடன் திகழ்வாள்.

logo
Kalki Online
kalkionline.com