மன அழுத்தத்தைக் குறைத்து, மகிழ்ச்சியாக இருக்க...

motivation Image
motivation Imagepixabay.com

சிலர் தங்கள் எதிர்காலம், பணி, பொருளாதாரம் என நினைத்து, நினைத்து மன அழுத்தத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.

அதிகமாக யோசிக்காதீர்கள்:

உங்கள் பதற்றத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் காரணத்தை கண்டுபிடிக்க யோசித்தால், கண்டிப்பாக ஏதாவது ஒரு காரணம் உங்கள் நினைவுக்கு வரும். வேலை செய்பவர்களுக்கு வேலையை நினைத்து பதற்றம். பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளின் படிப்பு, திருமணம் போன்றவற்றை நினைத்துக் கவலை.

மேல் படிப்பு படிப்பவர்களுக்கு எதிர்காலத்தில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற சிந்தனை. இப்படி ஏகப்பட்ட விஷயங்களை சொல்லலாம். எனவே எந்த விஷயத்திற்கும் பதற்றம் அடையாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும்.

மகிழ்ச்சியாக இருங்கள்:

எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது சற்று கடினம்தான். ஆனால், அது முடியாத காரியம் ஒன்றும் இல்லை. உங்கள் சுற்றுப்புறத்தை அமைதியாகவும் சாந்தமாகவும் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருப்பது பல பிரச்சனைகளை சரிசெய்யும்.

சண்டையை தவிர்த்திடுங்கள்:

சண்டை போடும்போது மன அழுத்தம் அதிகமாகிறது. அதனால் சண்டை வருவதற்கான ஒவ்வொரு காரணத்தையும் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். ஒருவேளை சண்டை வந்துவிட்டால், அந்த நேரத்திலும் நிதானமாக சிந்தித்து செயல்பட முயற்சி செய்யுங்கள்.

யோகா செய்யுங்கள்:

பலரும் காலையில் எழுந்த உடனே முதலில் யோகா செய்ய விரும்புகிறார்கள். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் மன அழுத்தத்தை விரட்டுவதுதான். 

பிடித்ததை செய்யுங்கள்:

சில நேரங்களில் நாம் சில வேலைகளை செய்த பிறகு நன்றாக உணர்வோம். அத்தகைய சூழ்நிலையில், மனதை நன்கு உணர வைக்கும் வேலைகளை நீங்கள் அடிக்கடி செய்யுங்கள். விருப்பமுள்ள பாடல்களை கேளுங்கள் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் செயல்களில் ஈடுபடுங்கள்.

இதையும் படியுங்கள்:
சங்குகளின் வரலாறு மற்றும் பயன்களை தெரிஞ்சிக்கலாம் வாங்க!
motivation Image

அடுத்து என்ன நடக்கும்?  என்பதைப் பற்றி சிந்திப்பதை நிறுத்திவிட்டு நிகழ்காலத்தில் நடப்பதை ரசித்து அனுபவித்து வாழ தொடங்குங்கள். இதுவே மன அழுத்தத்தை குறைக்கும் மிகச் சிறந்த வழி.பிடித்த பாடலை கேட்கவும். நடனம் ஆடுங்கள்.

நல்ல புத்தகம் படியுங்கள்.

பிடித்த கோயிலுக்கு சென்று வாருங்கள். கொஞ்ச நேரம் அமைதியாக அமர்ந்திருங்கள். அடிக்கடி மனதுக்கு பிடித்தவரோடு பேசுங்கள். மனதுக்கு பிடித்ததை செய்யவும். நேர்மறை எண்ணத்தை வளர்த்து கொள்ளவும் வாழ்க்கை ஒருமுறை. வாழப்போவதும் ஒருமுறைதான் அதனால், உங்களுக்கு பிடித்தது போல் வாழவும். அது எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com