போலியான உறவுகளுக்கு குட்பை சொல்லுங்கள்!

Relationships in human minds
fake relationships...
Published on

னித மனங்களில் உறவு மற்றும் நட்பு வட்டங்களில் வரவர விசாலமான போக்கு காணாமல் போய் வருகிறது.  உறவுகள் என்பது நமக்கு இறைவன் கொடுத்த நண்கொடை.

அவசர காலத்தில் எல்லாமும் தலைகீழாக மாறிவருவது வியப்போடு  கூடிய வேதனை. அப்போதெல்லாம் தர்ம நெறிமுறைகளை, சாஸ்திர சம்பிரதாயங்களை, வாழ்வியல் நடைமுறைகளை, நமது பொியவர்கள் சொல்லிக் கொடுத்தாா்கள்.  அதைக்கேட்டு நடக்கும் நல்ல பண்புகள் கொண்டவர்களும் இருந்தாா்கள்.

அதேபோல நாகரீகம் வெகுவாக  முத்திப்போய்விட்டது.

ஆண், பெண் இருபாலர்களிடமும் நடை  உடை, பாவணைகள்  மாறிவிட்டன. உடைகளில் துணிகள் குறைப்பு பேஷனாகிவிட்டது. இப்படிப்பட்ட சூழலில் நாம் வாழ்ந்தாலும் உறவு நட்புகளிடம் ஆரோக்கியமான நல்ல உறவு விலகிப்போவதும் ஆங்காங்கே தலை தூக்குவதும் வாடிக்கையே!

வேண்டாம் என பிாிந்துபோன உறவுகள், நம்மைபயன்படுத்திக் கொண்டு இனி இவரிடம் சுரண்டுவதற்கு எதுவுமே இல்லை என பிாிந்து போய்விடுகின்றன. நாம் பாசமிகுதியால் அவர்களை தேடவேண்டாம். நாம் பாசத்திற்கு அடிமையாகி விடுகிறோம், அனால் அவர்களோ அப்படியல்ல, வெளிவேஷம் போட்ட கபடநாடகதாாிகள் என்பது பின்னாளில் தெரியும்போது, நமது இளகிய மனது வலிக்கிறதே! 

நம்முடைய சகோதரன் பிாிந்து வாழ்கிறோமே என்ற கவலையில் மனைவியுடன் அவர்களைத்தேட வேண்டாம், உங்கள் பாசத்திற்கு முன்னால் அவர்களது வெத்துப்பேச்சு பலிக்காமல்  போய்விடுமே!

அவர்களை தேடவே வேண்டாம். சுட்ட செங்கல் ஒட்டாது. அப்படியே பிாிந்த உறவு திரும்ப கிடைத்தாலும் அவர்களின் வஞ்சக எண்ணம் மாறாது. அவர்கள் நல்லவர்களே அல்ல!

இதையும் படியுங்கள்:
பெற்றோரின் கனவு vs. குழந்தைகளின் விருப்பம்: வாழ்வின் வெற்றிப்பாதை எது?
Relationships in human minds

கோடி ரூபாய் கிடைத்தாலும் நமக்கு அவர்கள் தேவையில்லை என வைராக்கியம் காட்டுங்கள். அதுவே சிறப்பான ஒன்று.

அதேபோல அடுத்துக்கெடுத்தவர்கள், நயவஞ்சக நரிகள், சந்தர்ப்பம் பாா்த்து விலகும் வாய்ச்சொல்வீரர்கள், நாம் நொடித்துப்போனால் நம்மை ஏளனம் செய்யும் நபர்கள், உறவு நட்பு  எனும் விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு நமது பாசம் நேசம் பற்றுதல் இவைகளைப் பயன்படுத்திக்கொண்டு, நமது பலவீனத்தை பலமாக்கிக்கொண்டு, நல்லவர்கள்போல உலாவரும், உன்மத்தம் பிடித்தவர்கள் யாராக இருந்தாலும் உங்களுடைய சுயம் இழக்காமல் அவர்களிடம் இருந்து விலகியே இருப்பதே சாலச்சிறந்த ஒன்று.

மதியாதாா் வாசல் மிதிக்கவேண்டாம் என ஒளவையாா் சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகளுக்கிணங்க, நம் குடும்பம், மனைவி, மக்கள், இவர்களுக்காக வாழுங்கள், ஒருவரை ஏமாற்றி ஒருவர் வாழவே முடியாது.

இறைவன் மீது பாரத்தைப்போட்டு நல்ல சிந்தனைகளோடு நடிப்பவர்களை நம்பி மோசம் போகாமல் வாழ்ந்து காட்டுங்கள்.

நம்மால் முடியும், முயற்சி செய்யுங்கள் வெற்றிகாணுங்கள்! 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com