எதிர்மறை எண்ணம் உள்ளவர்களுக்கு குட் பை சொல்லிடுங்க…!

Motivation Image
Motivation Image

நீங்கள் என்ன பேசினாலும் சரி, உடனே அதற்கு எதிர்மறையாக பேசும் நபர்கள் நம்மில் பலர் உண்டு. அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருப்பார்கள் நாம்தான் புத்திசாலி எதிரில் இருப்பவன் அனைவரும் முட்டாள்கள் என நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், உண்மையில் அவர்கள்தான் முட்டாள்கள். ஒரு நல்ல கருத்தை கூறும்பொழுது அதற்கு நேர்மறையான ஒரு கருத்தை கூறி தான் புத்திசாலி என்று தனக்குத்தானே நினைத்துக் கொள்வார்கள் இது போன்ற நபர்கள் ஏராளமாக உள்ளனர்.

வாழ்க்கையில நாம் சந்திச்ச மனுஷங்க அத்தனை பேருமே எதிர்மறை ஆற்றலோடு இருப்பவர்கள்தான். அவர்களை சமாளிக்க நான் ஒருபோதும் நாம் முயற்சித்ததில்லை. காரணம், அவர்களிடம் என்னதான் நம்பிக்கையான வார்த்தைகளை பேசினாலும், எவ்வளவு தான் தைரியம் கொடுத்தாலும் அவர்கள் ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள், ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்.

ஒரு கட்டத்தில் யோசித்து, இவர்கள் இப்படித்தான். இவர்களை மாற்றுவதற்கு பதிலாக, இது போன்றவர் களையே மாற்றி விடலாமென்று, எதையும் எதிர் மறையாகவே எடுத்துக் கொள்ளும் மனிதர்களை விட்டு விலகி விடுங்கள்.

எதிர்மறை ஆற்றலை பற்றி கொஞ்சம் ஆழமாக சிந்தனை செய்தால், நமக்கு ஒரு விஷயம் புலப்படும். அது என்னென்னா, நாம, நேர்மறை ஆற்றலைக் கொண்ட நபர்கள் சிலரை சந்திக்கும் போது, அந்த ஒரு சில நிமிடங்கள்தான், நாம் நம் கவலை களையெல்லாம் மறந்து சந்தோஷமாக இருந்திருப்போம்.

அதுவே, எதிர்மறை ஆற்றலைக் கொண்ட ஒரே ஒரு நபரை சந்தித்தால் போதும், நம்மை நம் கடந்த காலத்திற்கே கொண்டு சென்று விடுவர். எதிர்காலத்தை பற்றிய பயத்தையே கொண்டு வந்து நம்மையும் அவரைப்போல கவலையில் ஆழ்த்திடுவார். பாருங்க, நேர்மறை எண்ணத்துக்கும், எதிர்மறை எண்ணத்திற்கும் உள்ள வேறுபாடு இதுதான்.

இதையும் படியுங்கள்:
ஃபேஷன் உலகை கலக்கிக் கொண்டிருக்கும் 'ஜம்ப்சூட்' ஆடைகள் (jumpsuit dress) !
Motivation Image

நம்மைச் சுற்றி நேர்மறை ஆற்றலை விட, எதிர்மறை ஆற்றல்தான் அதிகமாக காணப்படுகிறது. நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், நேர்மறையாக பேசுபவர்கள் இங்கு ஒரு சிலரே. அவர்களை காண்பது கடவுளை காண்பதற்கு சமம். ஆனால், எதிர்மறையாக பேசுபவர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களை சமாளிப்பதை விட, அவர்களை விட்டு விலகி விடுவதே சிறந்த செயல்.

எதிர்மற என்னவாதிகள் உடன் பேசுவதை விட அவர்களை விட்டு விலகி செல்வது நம் மன அமைதிக்கும் உடல் நலத்திற்கும் நன்மையே. இனி யார் எதிர்மறையாக பேசினாலும் சரி அதை வலது காதில் வாங்கி, இடது காது வழியாக விடுங்கள். அப்பொழுதுதான் இந்த சமுதாயத்தில் நாம் தப்பிக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com