தன்னம்பிக்கையை வளர்க்கும் 10 சூத்திரங்கள்!

self confidence
self confidence
Published on

ன்னம்பிக்கை மட்டுமே வாழ்க்கையில் நாம் உயர ஆணிவேராய் இருக்கிறது. அந்த தன்னம்பிக்கை வளர்ந்தால்தான் நாம் வெற்றி என்ற படிக்கட்டில் ஏற முடியும். எப்படி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது அதற்காக என்ன செய்யவேண்டும் பெரும் பயிற்சி எடுக்க வேண்டுமா? என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றும் அதெல்லாம் ஒன்றும் கிடையாது. ரொம்ப ரொம்ப சிம்பிள் இந்த பத்து விஷயங்களை பாலோ பண்ணுங்க போதும். (self confidence)

1. உங்கள் ஆடையில் கவனம் வேண்டும். மலிவு விலையில் ஆடைகள் பல வாங்குவதற்கு பதில் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணியக்கூடிய நல்ல தரமான ஆடைகளை உடுத்தலாம். பார்க்கவும் எடுப்பாக இருக்கும். ஆடையை மாற்றி எளிய ஸ்டைலுக்கு மாறினால் நீங்கள் நினைப்பது நடக்கும். தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகளுக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. உங்கள் காலணியிலும் கவனம் செலுத்தவும்.

2. அட வேக நடையில் என்ன ஆகப்போகிறது என்று தானே நினைக்கிறீர்கள். ஒருவரது நடையை வைத்தே அவர் தெம்பாக வருகிறாரா, சோம்பலாக வருகிறாரா என்று கண்டு பிடித்து விட முடியும். சற்று வேகமான நடையை பார்த்ததுமே எதிரே இருப்பவருக்கு நம்மால் எதையும் சுறுசுறுப்பாக முடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆகவே இன்றிலிருந்து 25 சதவிகித வேகத்தை உங்கள் வழக்கமான நடையில் கூட்டுங்கள்.

3. எப்போதுமே நிமிர்ந்த நிலையில் நிற்கவோ, அமரவோ வேண்டும். தோள்களை தொங்கிய படியே வந்தால் அவரால் தன்னம்பிக்கையோடு எதையும் செய்யமுடியாது என பார்ப்பவர் எண்ணிவிடுவர். நிமிர்ந்து நிற்பது, தலையை தொங்கப்போடாமல் இருப்பது, எதிர் உள்ளவர் களின் கண்களை நேரே பார்த்து பேசுவது போன்றவை தன்னம்பிக்கை உள்ளது என்பது சொல்லாமல் சொல்லும் குணமாகும். ஆகவே சரியான நிலையில் நடப்பது, உட்கார்வது, நிற்பது நல்லது.

4. கேளுங்க! கேளுங்க! நல்ல பாசிடிவ் ஆன விஷயங்களையும், தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பேச்சாளர்களின் பேச்சை அடிக்கடி கேட்கவும். 30 – 60 நொடிக்குள் உங்களது லட்சியம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி சிறு குறிப்பு எடுத்து கண்ணாடி முன் நின்று தினமும் சப்தமாக பேசி பழகுங்கள். அல்லது எவ்வப்போது தன்னம்பிக்கையை தூண்டவேண்டுமோ அப்போது இவ்வாறு பலமுறை சொல்லிப் பார்க்கவும்.

5. உங்களது வாழ்க்கையில் எத்தனையோ வெற்றிகள் கிடைத்திருக்கும். அவற்றை பட்டியல் இடுங்கள். அது உங்களது படிப்பாகட்டும், உங்களது திறமையாகட்டும், நல்ல உறவாகட்டும், அவ்வாறு பட்டியல் இடும்போதுதான் எத்தனை விதமான நல்ல வாய்ப்புகள் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய விஷயங்கள் நம் வாழ்வில் நடந்துள்ளது என்பது தெரியும். இவை நமது மனச்சோர்வை அகற்றி தன்னம்பிக்கையோடு வாழ உதவியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் அகமும் புறமும் தூய்மையாக இருக்க வேண்டும்!
self confidence

6. நம்மை நாமே “நெகட்டிவ்”வாக நினைக்கும்போது, மற்றவர்களை பார்ப்பதும், பேசுவதும் கூட நெகட்டிவ்வாக இருக்கும்! இதிலிருந்து விடுபட முதலில் மற்றவர்களை மனதார பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். சின்ன விஷயமாக இருந்தாலும், பெரிதாக பாராட்டுங் கள், மற்றவர்கள் பற்றி குறைகூறுவதை விடுங்கள். இப்படி நடந்து கொண்டால் உங்களை மற்றவர்களுக்கு பிடித்துப் போகும். இதனால் நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களின் நல்ல குணாதிசயங்களை காணும் போது, நமக்குள்ளே மறைந்திருக்கும் நல்ல குணாதிசயங்களும் தானே தெரியவரும்.

7. பள்ளி, கல்லூரி, விழா மற்றும் கூட்டங்களில் அமரும் போது, எப்போதும் பின் இருக்கையில் அமரவே விரும்புவர். இது தன்னம்பிக்கை குறைபாடாகும். ஆகவே இனிமேல் எங்கு சென்றாலும், முன் இருக்கையில் தைரியமாக உட்காருங்கள். இதனால் உங்கள் மனதில் உள்ள பயம் போய்விடும். தன்னம்பிக்கை கூடும்.

8. சிலர் பலர் கூடி இருக்கும்போது பேசவே தயங்குவர். மற்றவர்கள் நம்மை முட்டாள் என நினைத்து விடுவார்களோ என்ற பயம்தான். இனி பயம் இன்றி உங்கள் மனதில் பட்டதை தைரியமாக சபைகளில் எடுத்துப் பேசவும். இதனால் நமது எண்ணத்தில் ஒரு நம்பிக்கை பிறக்கும். மற்றவர்களும் உங்களை தலைவராக ஏற்றுக் கொள்வர். எல்லோரிடத்திலும் தைரியமாக பேச ஆரம்பித்தாலே, தன்னம்பிக்கை உங்களை தேடி, ஓடி வரும்.

9. நமது உடையும், உடல் வனப்பும், தன்னம்பிக்கைக்கு கை கொடுக்கும். அளவுக்கு மீறி குண்டாகவோ, மிக ஒல்லியாகவோ இருந்தால் நம்மீதே நமக்கு நம்பிக்கை இழக்க நேரிடும். சக்தி குறையும். ஆகவே உடற்பயிற்சி செய்து, நமது உடலை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால், தன்னம்பிக்கை உங்களுக்கு கிரீடமாக அமரும்!

10. நம்மை சுற்றி உள்ளவர்கள் பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும் சிந்தித்து, நம்மை ஈடுபடுத்திக் கொண்டால், தன்னம்பிக்கை வளரும். இதனால் ஏற்படும் தன்னம்பிக்கை நமது எல்லாத் திறனையும் வெளிக்காட்ட உதவியாக இருக்கும் என சொல்லவும் வேண்டுமோ?

-பொ. பாலாஜி கணேஷ்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com