
செயல் என்பது நம்பிக்கையைப் பொருத்தமான விதத்தில் பயன்படுத்துவதாகும்.
நம்பிக்கை -அது உங்கள் மீது வைத்ததாயிருக்கலாம். மனிதர்கள் மீது வைத்ததாயிருக்கலாம். அல்லது கிடைக்கின்ற வாய்ப்புகள் மீது, கடவுள் மீது வைத்ததாயுமிருக்கலாம்.
உங்கள் குறிக்கோள் தகுதியானதாயிருந்தால், வெற்றிக்கான விதிகளைப் பயன்படுத்தி அதை அடைவது எளிதாயிருக்கும். உங்களுடைய குறிக்கோள் தகுதியாயும், விரும்பத்தக்கதாக இருந்தால் அதில் ஆர்வமும், அர்ப்பணிப்பும் அதிகமாக இருக்கும்.
நியாயம், நேர்மை என்கிற நடத்தைக்கோட்பாடுகளை நீங்கள் வழிகாட்டியாய் கொள்வதன் மூலம், அடுத்தவர்களுடைய வாழ்விலும் நன்மையளிக்கும் ஒரு சக்தியை இயங்கச் செய்கிறீர்கள். அடுத்தவருக்குச் சேவை செய்யும்போது அல்லது இரக்கங்காட்டுகிறபோது, உளவியல் ரீதியாய் ஒரு நுட்பமான விளைவை அது உங்கள் மீது ஏற்படுத்தும்.
உங்கள் ஆளுமையின் ஏதோவொரு மூலையில் அது வெளிச்சத்தைக் கொண்டுவரும். நல்ல செயல்களைச் செய்துவர ஒரு ஆக்கபூர்வமான, ஆற்றல் வாய்ந்த சிறப்பியல்பை நீங்கள் வளர்த்துக் கொள்வீர்கள். அதே மனப்பாங்கு உடையவர்கள் உங்களிடம் ஈர்க்கப் படுவார்கள். நீங்கள் வழங்கும் அன்பும். கருணையும் பல மடங்காய் உங்களிடம் திரும்பிவரும். ஆனால், அது எங்கிருந்து வருகிறது என்பதை யாரும் அறிய முடியாது.
நம்பிக்கை -மற்றெந்தப்பண்புகளையும் விட மனித ஆற்றலின் வெற்றியை வெகுவாய் உருப்படுத்துவதாகும். அது இல்லாமல் நாம் எதையும் செய்வதற்கில்லை.
''தம் குறிக்கோளை அடைதற்கான தமது திறமையில் நாம் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்"
மின்சார சக்தியை நாம் கண்ணால் பார்ப்பதில்லை, ஆனால் இருக்கிறதென்பதற்கு அநேக நிரூபணங்கள் வைத்திருக்கிறோம். அனைத்திலும் மேம்பட்ட சக்தியொன்று இருக்கிறது, ஆனால் அதை நம்பிக்கை மட்டுமே நிரூபிக்கமுடியும்.
பொருத்தமான நம்பிக்கை மூலமே நமக்குள் இருக்கும் ஆற்றல்களைச் செலுத்தி நமது குறிக்கோளை அடைய முடியும்.தொழிலில் ஒருவருக்கொருவர் நம்பிக்கையில்லாமல் வியாபாரம் பண்ண முடியாது. நம்பகமானவர்களுடன் வியாபாரம் வைத்துக் கொண்டால் பிற்பாடு நீங்கள் கவலைப்பட வேண்டியிருக்காது.
சட்ட ரீதியாய் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களை விட உடன்படிக்கைகளைவிட, சகமனிதர்களிடம் நாம் வைக்கிற நம்பிக்கையே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
நம்பிக்கையின் வலிமை சில நேரங்களில் நம்ப முடியாத வழிகளில், விசித்திரமான முறைகளில் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியும்”
அறிவியல், கணிதம் இவற்றில் கூட நம்பிக்கை முக்கியம். அறிவியலில் ஒவ்வொன்றும் ஊகம் அல்லது ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாகவே தொடங்கின. அவை நிரூபிக்கப்படாமலே இருந்தன. நம்பிக்கையோடு ஏற்க வேண்டியிருந்தது. உண்மை என்று உள்ளுணர்வால் கண்டுணரும்படியிருந்தது என்பார் கிரேக்க தத்துவ மேதை அரிஸ்டாட்டில்.