உறவுகளின் சுயநலம்: ஒரு கசப்பான உண்மை!

Motivational articles
Selfishness in relationships
Published on

றைவன் நம்மை நல்லவிதமாகத்தான் படைக்கிறான். ஒருசில பிறப்புகள் கொஞ்சம் வேறுபாடுகளோடும் பிறப்பது உண்டு.

வாழ்க்கை பலருக்கு நன்றாக அமைந்துவிடுகிறது. சிலருக்கு சரியாக அமைவதில்லை. அதற்கு நாம் இறைவனை குறைசொல்ல முடியாது. நமது ஊழ்வினைப்பயன், முன் ஜென்மத்தில் செய்த பாவம் என்றுகூட எடுத்துக்கொள்ளலாம்.

அது நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் ஆறுதலான பக்குவம்.

நாம் என்னதான் வெகுளித்தனமாகவும், சரி நமது சொந்தம்தானே என விட்டுக்கொடுத்துப்போய் பலவிதமான உதவிகளை, நட்பு மற்றும் உறவு வட்டங்களுக்கு செய்தாலும் பிரதிபலனோ அங்கீகாரமோ கிடைக்கும் என எதிா்பாா்ப்பது ஏமாற்றமே தரும்.

நமது பலவீனம் தான் நமக்கு முதல் எதிாி:

அந்த பலவீனமானது நம்மை பயன்படுத்திக்கொண்ட, சுயநல உறவு மற்றும் நட்பு வட்டங்களுக்கு பலம். ஒருவரின் வெகுளித்தனத்தையும் பலவீனத்தையும் வெள்ளந்தியான மனநிலையை நமக்கு சாதகமாக பயன்படுத்தும் நபர்களை நாம்தொிந்து கொண்டு அவர்களிமிருந்து விலகுவதே நல்லது.

பொதுவாக சில குடும்பத்திலுள்ள ஒரே பையனுக்கு திருமணம் தாமதம் ஆகக்கூடாது, காலத்தில் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் பெண் கிடைத்தால் போதும் என்ற நிலைபாட்டில், ஒரு சிலர் வரதட்சணை எதுவும் வேண்டாம் கட்டிய புடவையோடு பெண்ணை அழைத்துவந்தால் போதும் என்பாா்கள்.

இரண்டு வீடுகளிலும் சம்மந்தியாகப்போகும் குடும்பங்ளைப்பற்றி விசாரணை எதுவும் செய்வதில்லை. அந்த அளவிற்கு அவசரம்.

அதுதான் ஆபத்தின் அச்சாரம்.

பெண் கிடைத்தால்போதும், அதேபோல மாப்பிள்ளை கிடைத்தால் நல்லது என திருமணத்தை நடத்துவிடுவதும் புகுதந்த வீடு வந்த பெண் அனைவரிடமும் பழகி வேலைகளை இழுத்துப்போட்டு செய்து விடுவதும் வழக்கமான ஒன்றே!

இப்படி திருமண வாழ்க்கை ஓடும்போது வேலைக்கு போகவேண்டும், மேலே படிக்கவேண்டும் என்ற கோாிக்கையில் நிறைய செலவு செய்து மருமகளை நன்கு படிக்க வைக்கும் குடும்பமும் ஊாில் உண்டே! வசதியான இடத்தில் பெண்ணைக் கொடுத்துவிட்டோம் என்ற தாழ்வுமனப்பான்மையில் பெற்ற பெண்ணைப்பாா்க்காத தகப்பனாா் தாயாரும் உண்டு.

இப்படிப்பட்ட சூழலில் நிா்பந்த வாழ்க்கை வாழ்ந்து வரும் பெண்களும் உலகத்தில் இருக்கிறாா்கள்.

அதுபோன்ற ஒரு வாழ்க்கையில் நமக்கு மருமகள் மீது பாசமும் அக்கறையும் வந்து குடும்ப பொறுப்பையே ஒப்படைத்து, மருமகளை மகள்போல நடத்தும் குடும்பமும் நிறையவே உள்ளது.

இதையும் படியுங்கள்:
தைரியத்துடன் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றி பெறுவது எப்படி?
Motivational articles

திடீரென புகுந்த வீடு பொருளாதார ரீதியாய் பின்னடைவை சந்திக்கும் நிலையில், தன்சுயநலம் கருதி தாய், தகப்பனாரின் ஏழ்மை நிலை உணர்ந்து கணவனை தனிஜாகை போகலாம் எனகேட்டு அது நிறைவேறாத சூழலில் புகுந்த வீட்டை உதறித்தள்ளிவிட்டு போகும் நிலையிலும் சில பெண்கள் இருக்கத்தான் செய்கிறாா்கள்.

அப்போது நாம் விசாாிக்காமல் பெண் எடுத்துவிட்டோமோ என வருந்துவதால் ஒரு பிரயோஜனமும் இல்லையே! ஆக வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் என்ற பாடல் சொல்வது போல உறவுகளுக்கு உதவிகள் செய்வதும் அதனால் பிரதிபலன் எதிா்பாராது மனம் வருந்துவதால் ஒரு நன்மையும் இல்லை.

எந்த காாியத்தைச்செய்தாலும் அவசரப்படாமல் நன்கு விசாாித்து செயல்படுவதும் நல்லதே! நமக்கு வயதான காலத்தில் நாம் எப்படி வாழவேண்டும் என்பதை கணவனும் மனைவியும் கலந்து பேசி நல்ல முடிவாய் இளமை இருக்கும்போதே திட்டமிடுதல் சிறப்பான ஒன்று. திட்டமிடாத வாழ்க்கை தொல்லையில்தான் முடியும் என்பதை உணர்ந்து செயல்படுவதே மேல்.

வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டால் உறவுகள் விலகாமல் ஒட்டிக்கொள்ளும். நொடித்துப்போய்விட்டால் நாம் வளா்த்த நாய்கூட நம்மிடம் வாலை ஆட்டாது. வாழ்வின் எதாா்த்தம் புாிந்து வாழ்வதே நல்லதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com