
1. நீங்கள் அடிக்கடி ஏன் என்ற கேள்விகளைக் கேட்பீர்கள். தினமும் இப்படி அனைத்து விஷயங்களுக்கும் கேள்வி கேட்டு நிறைய விஷயங்களைப் பற்றி சிந்திப்பீர்கள்.
2. உங்களுக்குப் பதில் தெரியாத விஷயங்களாக இருந்தாலும், அதைப் பெரிதாக நினைக்க மாட்டீர்கள். தனக்கு எல்லாம் தெரியாது என்பதை ஒப்புக் கொள்வது புத்திசாலித் தனத்தின் அடையாளம். தெரியாததை தெரிந்து கொள்ளலாம் என எண்ணுவீர்கள்.
3. இரண்டு வித்யாசமான விஷயங்களாக இருந்தால் கூட அதில் ஒரு ஒற்றுமை இருக்கிறதென்று நினைப்பீர்கள். அது உங்கள் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயமானாலும் மேலும் அலுவலக விஷயமானாலும் ஒற்றுமையை தேடிக் கண்டுபிடிப்பது என்பது புத்திசாலிகளுக்கே உரிய விஷயமாகும்.
4. வேலைக்காகவோ வேறு ஏதோ ஆதாயத்திற்காகவோ இல்லாமல் விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உடையவராகவே இருப்பீர்கள். இதனால் அதிக படைப்புத் திறன் உள்ளவராக இருப்பீர்கள்.
5. எந்த வித புதிய சூழலிலும் நீங்கள் இணைத்துக் கொள்வீர்கள். புதிய வேலைச் சூழலாக இருந்தாலும், பணப் பிரச்னைகளாக இருந்தாலும் அல்லது குடும்பத்தில் ஏற்படும் திடீர் மாற்றமானாலும் சரி எந்த சூழலிலும் நீங்கள் சட்டென்று பொருந்தி விடுவீர்கள். இது உங்கள் மன திடத்தை வெளிப்படுத்துகிறது.
6. நவீன உலகத்தில் பல பிரச்னைகள் உள்ளன. நீங்கள் மிகவும் விரும்புகின்ற ஒருவரால் கூட உங்களுக்கு நல்லது ஏற்படாது . அல்லது அலுவலக பிரச்னைகள் மிகவும் மோசமாக இருக்கலாம். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அமைதியை இழக்காமல் அதை கடப்பீர்கள். எந்த சூழலையும் சமாளிக்கத் கூடிய மனோதிடத்துடன் இருப்பீர்கள்.
7. எண்ணியபடி சில விஷயங்கள் நடக்காத போது கலங்காமல் அடுத்தமுறை இன்னும் எப்படி நன்றாக முயற்சிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அடுத்தவர்கள் மீது பழியை போடாமல் இன்னும் நல்ல முயற்சி செய்ய வேண்டும் என்று எண்ணுவீர்கள்.