வெற்றிப்பயணம் தொடங்குவோமா?

motivation articles
motivation articlesImage credit - pixabay

வெற்றி என்ற உச்சத்தை அடைய உங்களுக்கு படிக்கட்டுகள் தேவை. ஆனால் அந்த படிக்கட்டுகள் அனைத்துமே தோல்வியை சுமந்து கொண்டிருப்பது வெற்றியை அடைந்த பிறகு உங்களுக்கு தெரிய வரும். வெற்றியை நோக்கி பயணிப்பதுதான் வாழ்க்கை. அதாவது சதா உங்கள் கவனம் வெற்றியின் மீது மட்டுமே இருக்க வேண்டும். வெற்றி கிடைக்காத போது துவண்டு சுருங்கி மடங்கி படுத்துவிடக்கூடாது. தைரியமாக மீண்டும் மீண்டும் உங்கள் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

அப்போது அதில் நிறைய தோல்விகளை சந்திக்க வேண்டி இருக்கும். நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். நிறைய கஷ்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும் .நிறைய இடர்பாடுகள் ஏற்படும். நிறைய சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். நிறைய அவமானங்களை சந்திக்க வேண்டிய இருக்கும். நிறைய சவால்கள் ஏற்படும்  இதனைக் கண்டு அச்சப்படாமல் மேலும் மேலும் முன்னேற்றி செல்வதைப் பற்றி மட்டுமே சிந்தித்து உங்கள் பயணம்.

பாதையில் சோர்வே இல்லாமல் உழைத்துக் கொண்டே இருந்தால் மட்டுமே வெற்றி என்னும் உயரிய இலக்கை அடைய முடியும் .

இந்த பாலபாடத்தை குழந்தைகளாக இருக்கும்போதே அவர்கள் மனதில் பசுமரத்தாணி போல பதியவைக்க வேண்டியது பெரியோரின் கடமை. அப்போதுதான் அந்த குழந்தைகள் நீ ஜெயிக்க பிறந்தவன் என்னும் லட்சியத்தை மந்திரச் சொல்லாக மனதில் அழுத்தமாக பதிய வைத்துக் கொண்டு முன்னேற்ற பாதையை நோக்கி தங்கள் பயணத்தை எவ்வித தொய்வு இல்லாமல் தொடர்ந்து செய்யும்.

 ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை தனது காலணிக்கு 'பாலிஷ் 'போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்து அவரது நண்பர் ஒருவர் இவரை பார்த்து ஆச்சரியம் மற்றும் கிண்டலுடன், உங்கள் காலணிக்கு நீங்களே பாலிஷ் போட்டுக் கொள்வீர்களா? என்று கேட்டார். அதற்கு லிங்கன்,ஆமாம் "நீங்கள் யார் காலணிக்கு பாலிஷ் போடுவது வழக்கம் "என திருப்பிக் கேட்டார். அதாவது தனது காலணிக்கு பாலிஷ் போட்டுக் கொள்வதில் எந்த கேவலமும் இல்லை என்பதுதான் அவர் கொண்டிருந்த நிலைப்பாடு. அதில் எந்தத் தவறும் கிடையாது என்பதில் லிங்கன் உறுதியாக இருந்தார் .

அதே நேரத்தில் இதனை கேவலமாக பிறர் கூறுவதை அவர் பொருட்படுத்தவில்லை .அதற்கு சரியான பதிலையும் அவர் அளித்து தன் நிலைப்பாடு சரியானது தான் என்ற கருத்தில் உறுதியாக இருந்தார். இதனை ஒவ்வொரு மனிதனும் பின்பற்ற வேண்டும். ஏனென்றால் நாம் பிறருக்காக வாழவில்லை. நமக்காக வாழ்கிறோம். நம்மின் லட்சியம் நிறைவேற்ற வேண்டும்  என்ற பிடிப்புடன் நம் வாழ்க்கை பயணத்தை தொடங்கி இருக்கிறோம். இதனைக் கேவலமாக யாராவது நினைத்தால் அதற்காக நாம் கவலைப்பட தேவையில்லை. அவர்களுக்காக வேண்டுமானால் பரிதாப படலாம்.

இதையும் படியுங்கள்:
இலக்கை நோக்கி பயணிக்கும் முன் இந்த 5ஐ படியுங்கள்!
motivation articles

எந்த ஒரு வெற்றியும் சில பாதிப்புகள் காரணமாக வீறிட்டு எழும் உணர்ச்சி பிரவாகத்தினால் தான் சாதிக்க முடிகின்றது. அவமானம், இடைஞ்சல், பாதிப்பு போன்றவை உங்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் வருமாயின் அது உங்களுக்குள் ஒரு ஆழ்ந்த வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. அப்போது ஏதாவது சாதித்து அவமானத்தை துடைத்தெறிய மனம் உத்வேகம் கொள்கிறது. அப்போதுதான் உங்களால் முடியாது என்று நினைத்தவைகளை முடியும் என்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட உத்வேகம் எழும் போது சாதனை சிகரத்தை உங்களால் அடைய முடியும். அதற்கான சக்தி தானாகவே உங்களுக்குள் ஏற்பட்டு விடுகிறது.

உங்கள் வெற்றி பயணத்தின்போது ஏற்படும் தடைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு படிக்கட்டுகள் என்பதே உண்மை அதன் மீது ஏறினால் வெற்றிக்கனியை பறிப்பது சுலபம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com