குட்டிக்கதை – மனம் கட்டுப்பட போடுங்கள் முடிச்சு!

motivation image
motivation imageImage credit - pixabay.com

ற்றங்கரையோரம்.

கரையில் பெரிய ஆலமரம்.

போவோர், வருவோரெல்லாம் தங்கி களைப்பாறுவர்.

இதமாய்த் தென்றல் வீசும்.

ஒருநாள் ஒரு முனிவர்  மரத்தடியில்  அமர்ந்து தியானம் செய்தார்.

மரக்கிளையில் அமர்ந்த பறவைகள் கூச்சலிட்டன.

முனிவர், அவற்றை அமைதி காக்கச் சொன்னார்.

கேட்காத பறவைகள் பெருங்கூச்சலிட்டன.

முனிவர் அமைதியாய் மந்திரம் சொன்னார்.

பறவைகளின் சிறகுகள் முடிச்சிட்டன. அவற்றால் பறக்க முடியவில்லை.

முனிவர் அங்கிருந்து அகன்றிடும்போது பறவைகள் கெஞ்சின.

அவர் காதில் வாங்காமல் வேறு மரம் நாடிச் சென்றார்.

சற்று நேரத்தில் வேறு முனிவர் வந்தார்.

தியானம் செய்ய அமர்ந்தார்.

பறவைகள் முனிவரிடமும் மந்திர முடிச்சை அவிழ்க்கச் சொல்லின.

முயன்றார், முனிவர்.

முடிச்சை அவிழ்க்க முடியவில்லை.

மீண்டும் போட்டார், இறுக்கமாக ஒரு முடிச்சை.

வலியால் துடித்தன பறவைகள்.

சற்று நேரத்தில் முதல் முடிச்சு இலகுவாயிற்று.

பின் தானிட்ட முடிச்சை அவிழ்ந்தார்.

பறவைகள் நன்றி கூறிப் பறந்தன.

பறவைகள்தான், நம் மனம்.

இதையும் படியுங்கள்:
வெற்றிக்கு வித்திடுவது எது தெரியுமா?
motivation image

மனம் கட்டுப்படக் கட்டுப்பாடற்ற முடிச்சு தேவை. அடங்க மறுத்த மனம் முன்னிலும் வேகமாக கூச்சலிட, அதைச் சுயக்கட்டுப்பாடு என்ற முடிச்சால் கட்டுப்படுத்தினால் முதலில் போட்ட முடிச்சு இலகுவாகி அடங்கும்.

 அடங்கிய மனம் சாதிக்கத் தூண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com