.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
நம் அனைவருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் மனப்பதட்டம் இருந்து கொண்டுதான் இருக்கும். அது வீட்டிலாக இருந்தாலும் சரி அலுவலகத்தில் இருந்தாலும் சரி அல்லது நண்பர்கள் வட்டாரத்தில் இருந்தாலும் சரி ஏதோ ஒரு விதத்தில் நாம் மனப்பதட்டத்தில் பாதிக்கப்பட்டிருப்போம். ஆனால் அதிலிருந்து எப்படி வெளியே வருவது. மனப்பதட்டும் எதனால் ஏற்படுகிறது அதன் அறிகுறிகள் என்ன அனைத்தையும் இப்பதிவில் பார்ப்போம்.
மனப்பதட்டம் என்பது ஒரு சில நிமிடங்கள் மட்டும் ஒரு சூழலை கையாள முடியாமல் இருக்கும். இது ஒரு உடல் ரீதியான பாதிப்பின் வெளிப்பாடு. மனப்பதட்டம் மூளையில் ஏற்படும் சிறிய அளவிலான மாற்றங்களால் உண்டாகிறது. ஏதேனும் ஒரு சூழலை உங்களால் கையாள முடியாமல் இருந்தால், அச்சத்தால், எதிர்பாராத இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உடல் மற்றும் மனதின் வெளிப்பாடுதான் பதட்டம்.
மனப்பதட்டம் இருப்பதற்கான அறிகுறிகள் இவைகள்தான். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக காணப்படும். குறிப்பிட்ட உணவு பழக்க வழக்கம் மூளை மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதித்து, அதீதமான பதட்டத்தை உண்டாக்கும். கைகள் நடுங்குவது, அதிகப்படியான வியர்வை, தடுமாறுவது, யாருடைய கண்களுக்கும் படாமல் தனித்திருக்க வேண்டும், உள்ளிட்ட அறிகுறிகள் பரவலாக காணப்படும். பதட்டம் அடிக்கடி ஏற்படும்பொழுது சரியான சிகிச்சை தேவைப்படும். அதேபோல உங்கள் வாழ்க்கை முறையையும் உணவு பழக்கத்தையும்.
நமக்கு பிடித்தமானவரை கட்டிப்பிடித்தால் மனஅழுத்தம் குறையுமாம். ஆய்வு மூளை ஆரோக்கியத்தை பாதுக்காக்க, மூளை செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு சில குறிப்பிட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான உணவு மேற்கொண்டால் மன அழுத்தத்தை குறைக்கலாம்.
வயிறு ஆரோக்கியமாக செரிமான பிரச்சனை ஏதும் இல்லாமல் இருந்தால் உடல் ஆரோக்கியமாகவும் மூளை புத்துணர்வுடனும் இருக்கும். வயிறு பிரச்னை இருந்தால், மூளை மந்தமாக இருக்கும். எனவே இயற்கையான பாக்டீரியா நிறைந்த தயிரை தினமும் சாப்பிட்டு வந்தால், உங்கள் மன அழுத்தம் மற்றும் மன பதட்டத்தை குறையும்.
வைட்டமின் டி சருமம், எலும்புகள் மற்றும் மூளைக்கு தேவையான மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்து. எந்த செலவும் இல்லாமல் இயற்கையாகவே நமக்கு கிடைக்கும் சத்து வைட்டமின் டி. தினமும் கொஞ்ச நேரம் சூரிய ஒளி உடலில் படும் வகையில் நேரத்தை ஒதுக்கினால், உங்களுக்கு உடல் உங்களுக்கு தேவையான வைட்டமின் டி சத்தை உடலே உருவாக்கிக் கொள்ளும்.
மூளை செயல்பாட்டிற்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மிகவும் முக்கியம். நீங்கள் சாப்பிடும் உணவுகளில் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் anti-inflammatory பண்புகள் கொண்ட உணவுகள் கட்டாயமாக இருக்க வேண்டும்.இவை உள் உறுப்புகளில் அழற்சி எனப்படும் பாதிப்பை தடுத்து, நரம்புகள் தசைகளில் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து உங்கள் மனநிலையை சமநிலையில் வைக்க உதவுகிறது.
மேற்கண்டவைகளைப் படித்திருப்பீர்கள் அவைகளை முறையாக பின்பற்றினால் போதுமே வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி வெளிவட்டாரத்திலும் சரி நீங்கள் மணப்பதட்டும் இன்றி ஜம் என்று நடை போடலாம் சந்தோசமாய் வாழலாம்.