எளிமை, தன்னம்பிக்கை, முயற்சிகள், சாதனைகள்!

Simplicity, Confidence, Endeavors, Achievements!
Motivational articles!
Published on

ளிமை, தன்னம்பிக்கை, முயற்சிகள், சாதனைகள் ஆகியவற்றிற்கு உரியவரான பெஞ்சமின் பிராங்களின் பற்றி சில தகவல்கள்.

இவரது தந்தைக்கு குழந்தைகள் அதிகம். சிறிய வயதில் இவரால் பள்ளி சென்று அதிகம் படிக்க முடியவில்லை. இருந்தும் இவர் இளமைக்காலம்  அச்சு தொழில் கூடத்தில்  கழிந்தது. இளம்  வயதில் அந்த துறையில் கற்றுக்கொள்ள உதவியது. எழுதுவதில் ஆர்வம் கொண்டார். தனது தனிப்பட்ட ஆர்வம் காரணமாக முயன்று பாடு பட்டு  அச்சகம்  நிறுவினார்.

ஆர்வம் காரணமாக கண்டு பிடிப்புக்களில் ஈடுபட்டார். சிறந்த உழைப்பாளி.  தன்னம்பிக்கை  வளர்த்துக் கொண்டார். செய்தித்தாளுக்கு நிறுவனராக உயர்ந்தார்.

பென்சில்வேனியா கிரானிக்கல் (Pennsylvania Chronicle) என்ற பத்திரிக்கையில் தன்னை இணைத்துக்கொண்டார், இளம் வயதில். பென்சில்வேனியா பல்கலைக்கழகம் உருவாக காரணமாக இருந்தவர்.

அரசியல் துறையில் தனி முத்திரை பதித்தவர். அரசியல் கார்ட்டூன் அறிமுகப்படுத்தியவர்.

இதையும் படியுங்கள்:
ஆஹா… ஒரு மனிதருக்குள்தான் எத்தனை முகமூடிகள்!
Simplicity, Confidence, Endeavors, Achievements!

சுதந்திர பிரகடனம் (Declaration of Independence) ஷரத்தை தயாரிப்பதில் பெரிதும் உதவியதும்  அல்லாமல், அந்த சுதந்திர பிரகடனத்தை கையழுத்து இட்டவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.

பெஞ்சமின் பிராங்களின் அமெரிக்கவின் சார்ப்பாக பிரான்சுக்கு சென்றவர் அமெரிக்கப் புரட்சி (American Revolution) காலத்தில்.

இவர்தான் அமெரிக்கவின் முதல் போஸ்டமாஸ்டர் ஜெனரல் ஆக திகழ்ந்தவர்.

விஞ்ஞானத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். மின்சாரத்தின் பாசிடிவ், (நேர் மறை) நெகட்டிவ் (எதிர் மறை) பற்றி அவர் வாழ்ந்த காலகட்டத்திலேயே ஆராய்ந்து கூறியவர்.

இடி தாங்கி (lightning rod)   இவரது கண்டுபிடிப்பு. படிக்கும், பார்க்கும் வசதி உடைய மூக்கு கண்ணாடி ( bifocals ) உருவாக்கியவர். தச்சு தொழில் மீது ஆர்வம்கொண்டு கற்றுக் கொண்டார் இளம் வயதில்.

இவர்  உருவாக்கிய ஆடும்  நாற்காலி போன்ற ஒன்றைதான் பிற்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடி பெரிதும் உபயோகித்தார்.

பெஞ்சமின் பிராங்களின் ஜனதொகை, கடல் சம்பந்தப்பட்ட விவரங்கள் அறிந்துக்கொள்வதிலும் கவனம்  செலுத்தினார். வயலின் வாசிக்கவும் கற்று பழகிக்கொண்டார்.

இதையும் படியுங்கள்:
ஸ்ரீ ரமண மகரிஷியின் பொன்மொழிகள்!
Simplicity, Confidence, Endeavors, Achievements!

செஸ் விளையாடுவதில் நிபுணர். இவர் செஸ் பற்றி விரிவாக எழுதிய கட்டுரையும் புகழ்பெற்றது.

1706, ஜனவரி 17 ல் பாஸ்டனில் பிறந்த பெஞ்சமின் பிராங்களின் 1790, ஏப்ரல் 17 அன்று அவரது 84 வது வயதில் பிலேடேல்பியாவில் மறைந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com