வாழ்வை மேன்மையாக்கும் ஆறு முக்கியமான தத்துவங்கள்!

எழுத்தாளர் ஜான் சி மேக்ஸ்வெல்.
எழுத்தாளர் ஜான் சி மேக்ஸ்வெல்.

மது வாழ்வில் பல விஷயங்களில் மேம்பட உதவியாக இருப்பது தத்துவங்கள்தான். அந்தவகையில் ஐந்து முக்கியமான தத்துவங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

உங்கள் வாழ்வில் அன்றாடம் செய்யக்கூடிய வேலைகளில் மாற்றம் காணாமல், உங்களுக்கான மாற்றத்தை காண முடியாது. சாதனைக்கான சாவி அன்றாடம் செய்யும் வேலைகளில்தான் உள்ளது.’ இதைக் கூறியது அமெரிக்கா எழுத்தாளர் ஜான் சி மேக்ஸ்வெல்.

மாற்றத்தின் முக்கியத்துவத்திற்கான இன்னொரு தத்துவத்தை வால்டர் கூறியுள்ளார். ‘எப்போதும் ஒரே மாதிரி இருப்பவன் ஒரு முட்டாள்’.

மாற்றம் என்பது மிகவும் முக்கியமானதுதான். ஏனெனில் சிறு மாற்றம் ஒருவனை உச்சத்திற்கும் அழைத்து செல்லும் படுகுழியிலும் தள்ளிவிடும். ஆகையால் நமது மாற்றத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

‘உண்மையில் சபிக்கப்பட்டவன் யார் தெரியுமா? அதிகமான திட்டங்களை மனதில் வைத்துக்கொண்டு அதனை வெளியில் சொல்லத் தெரியாதவன்தான்.’ அதிகமாக நல்ல யோசனைகளை செய்வது வரம் என்றாலும் அதற்கான பலனைப் பெறாமல் எப்படி வரமாக முடியும். ஆகையால் முதலில் யோசனைகளை வெளியில் சொல்லவும் நடைமுறைப் படுத்தவும் கற்றுக் கொள்ளுங்கள்.

ஒரு இக்கட்டான சூழ்நிலைகளில் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். அமைதி என்றால் உங்களிடம் சொல்ல ஒன்றும் இல்லை என்பதல்ல, எப்போதும் வார்த்தைகளுக்கு மதிப்பிருக்காது என்பதைப் புரிந்துக்கொள்ள.’

உண்மையான உணர்வினை வெளிப்படுத்தும் வார்த்தைகளுக்கு நாடகம் என்று பெயர் சூட்ட வரிசையில் காத்திருப்பார்கள். இங்கு உங்கள் வார்த்தைகளைப் புரிந்துக் கொள்ள யாரும் இல்லை. மௌனம் பேசும் வார்த்தையே ஏதோ ஓர் கட்டத்தில் உங்களுக்குப் பலன் தரும்.

உங்களுக்கானதை நீங்கள்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.’ இதனைக் கூறியது லெவிஸ் ஹோவ்ஸ். இங்கு வெற்றிபெற ஆலோசனைக் கூறுபவர்களும் தோல்வி அடைந்தால் ஆறுதல் கூறவும் ஏராளமானவர்கள் உண்டு. ஆனால் உனக்கு வேண்டியதை  கொடுக்க நீ மட்டும் தான் இங்கு இருக்கிறாய்.

இதையும் படியுங்கள்:
ஹார்மோன் பிரச்னைகளை சரிசெய்ய உதவும் உணவுகள்!
எழுத்தாளர் ஜான் சி மேக்ஸ்வெல்.

வாழ்க்கை என்பது 10 சதவீதம் உனக்கு என்ன நடக்கிறது என்பது. மீதமுள்ள 90 சதவீதம் அதனை நீ எப்படி எதிர்கொள்கிறாய் என்பது’. இதனைக் கூறியவர் சார்லஸ் ஆர். ஸ்விண்டால். ஆம்! நமக்கு நடக்கும் நிகழ்வுகளில் அதிக நேரம் சந்தோஷப்பட்டுக்கொண்டும் வருத்தப்பட்டுக்கொண்டும் யோசனை செய்துக் கொண்டும்தான் இருப்போம். முதலில் அதனை நிறுத்துங்கள். அப்போதுதான் 100 சதவீத வாழ்க்கையை நீங்கள் அனுபவித்து வாழ முடியும்.

இந்த ஐந்து மகத்தான தத்துவங்களை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். இக்கட்டான சூழ்நிலைகளில் உதவி செய்யும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com