புத்திசாலித்தனமான வாழ்க்கைதான் வெற்றியைத் தரும்!

Motivation articles
Motivation articlesImage credit-pxfuel.com
Published on

லகில் தோன்றிய கோடானு கோடி ஜீவராசிகளில் ஆறறிவு சிந்திக்கும் மனநிலையில் உள்ள ஒரே இனமான மானிட இனம் உண்மையிலேயே தனக்கு கிடைத்த வாழ்வியலை மகிழ்வுடன் வாழ செய்கிறதா என்றால் சந்தேகமே.

வாழ்வில் எத்தனை பேர் இந்த வாழ்க்கை அற்புதமானது, விந்தையானது, கிடைத்தற்கரியது என்று எண்ணி வாழ்கின்றனர். கணக்கிட்டால் நூற்றில் பத்து பேர் கூட மீதம் ஆகாது. அந்த அளவிற்கு தான் பிறந்ததன் நோக்கத்தை விட்டு விட்டு, நாளைக்கு என்றே பேசி இந்த வாழ்வை வீணடித்து வருகின்றனர்.

இந்த வாழ்வில் நாம் அனைவருமே ஒவ்வொரு பொழுதும் யோசித்து வாழ்க்கையை நகர்த்த வேண்டும். அந்தந்த காலத்தில் அந்தந்த பருவத்திற்கேற்ற வேலையை சரிவர செய்து வந்தாலே. நமது வாழ்க்கை பயணம் சுமார் 60 வயதை கடக்கும்போது மிருந்த அனுபவமும் கிடைக்கும்.

சரியான நேரத்தில் சரியாக தொடங்கும் வேலைகளால் எந்தவித தவறுக்கும் இடம் கிடைக்காது. நாம் செய்யும் செயலில் ஆர்வமும். முழுமனதோடு ஈடுபாடும் கொண்டு இயங்கும்போது அனைத் திலுமே நன்மைதான். இயங்கும்போது மானிட வாழ்க்கை எல்லா செயல்களிலும் அதிகமான பங்களிப்புடன் நடக்க வேண்டும். பிறப்பும், இறப்பும் மாற்றம் கொள்ளாதது என்றே உலக நீதியை உணர்ந்த யாவரும் அன்றாட வாழ்க்கை சந்தர்ப்பத்தை தவறவிட மாட்டார்கள்.

இதை உணராதவர்கள்தான் வாழ்க்கை இன்பத்தை சரியாக நுகராமல் மற்ற அற்ப விசயங்களுக்காகவே தத்தமது நேரத்தை எல்லாம் செலவழித்து விட்டு பின்பு கடைசி காலத்தில் புலம்பு கின்றனர். நாம் அப்படி வாழ்ந்து இருக்கலாமோ? இப்படி வாழ்ந்து இருக்கலாமோ? அதை செய்து இருக்கலாமோ? இதை செய்து இருக்கலாமோ? என்று பலவாறு புலம்புவதில் என்ன இருக்கிறது.

வாழ்வில் பலர் இப்படித்தான் இளமை காலத்தில் செய்ய வேண்டிய சரியான செயல்களை சரியான விதத்தில் செய்யாமல் நாளடைவில் காலம் சென்ற பிறகு வருத்தப்பட்டு புலம்பி வருகின்றனர். இந்த வாழ்வில் இன்று மனிதர்கள் மத்தியில் எல்லா நேரமும் பேசப்படுவது பணம்... பணம்... பணம்தான். பணம் இல்லாவிட்டால் வாழ்வு இல்லைதான்.

இதையும் படியுங்கள்:
முக தாட்சண்யம் பார்ப்பவரா நீங்கள்?
Motivation articles

ஆனால், அதே நேரத்தில் பணமே வாழ்வு அல்ல என்பதையும் நாம் உணர வேண்டும். பணம் ஒருவரின் வாழ்வில் மிகவும் முக்கிய மான ஒன்று. அன்றாட வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கு பணம் மூலாதாரம்தான். ஆனால், அந்த பணத்தை மட்டுமே வைத்து வாழ்க்கையில் எல்லாவிதமான மகிழ்வையும் பெற முடியாது.

மனிதர்களுக்கு எப்போதுமே ஒரு ஆசை நாம் மற்றவர் களைப் போல வீடு கட்ட வேண்டும். கார் வாங்கவேண்டும், வங்கியில் போதுமான அளவிற்கு பணம் இருக்க வேண்டும் என்பதுதான். யாருமே நம் வாழ்வை ரசித்து வாழவேண்டும். இருப்பதில் இன்பம் கொண்டு இனிமையுடன் வாழவேண்டும் என்று யாரும் நினைப்பது இல்லை. இதனால்தான் மனிதர்களுக்கு சிரமங்களும், கஷ்டங்களும் வருகின்றன. புத்திசாலித்தனமாக வாழ்ந்து நாமும் மகிழ்ச்சியாக வாழ்ந்து பிறரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவோம். அதுவே வாழ்க்கையின் அர்த்தம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com