முரளிதரனும் மோட்டிவேஷனும்!

முரளிதரனும் மோட்டிவேஷனும்!
Published on

ஒரு சிலரால் தான் அசாத்திய சாதனை செய்ய முடியும். அவ்வாறு சாதித்தவர்களில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளீதரனும் ஒருவர் என்றால் மிகையாகாது.

அவரைப் பற்றி சில விவரங்கள், குறிப்பாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதை அறிவித்து விட்டு விளையாடிய கடைசி டெஸ்ட் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

  • இவர் ஆடியது டெஸ்ட்டுக்கள் 133.

  • டெஸ்ட் கிரிக்கெட்டில் வீசிய பந்துக்கள் எண்ணிக்கை 44039

  • ஓய்வு பெற்ற பொழுது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தி உலக ரிக்கார்ட் படைத்தார்.

  • பல தடைகளை எதிர் கொண்டு சாதனை புரிந்தவர்.

  • இவரது பவுலிங்கில் பந்து வீசும் முறை சரியில்லை என்ற சர்ச்சை எழுந்த பொழுது, இவரது அணி கேப்டன் ரணத்துங்கா பாறைப் போல் நின்று இவருக்கு சப்போர்ட் செய்தது இவர் கிரிக்கெட் வாழ்வில் ஒரு முக்கிய திருப்பு முனை தருணம்.

  • தூசாரா பந்து வீச கற்றுக் கொண்டு 18 மாதங்கள் தொடர்ந்து வலை பயிற்சி ( net practice ) செய்து அவருக்கு பரிபூர்ண திருப்தி ஏற்பட்ட பிறகு தான் மேட்ச்சுகளில் அந்த தூசரா வகை பந்துக்கள் வீச முற்பட்டார். இது இவரது அர்ப்பணிப்பிற்கு ஒரு உதாரணம்.

  • இடை விடா உழைப்பு இவருக்கு ஊற்சாகம் அளிக்க அதுவே அவருக்கு சுய உந்து சக்தியாக விளங்கியது

  • இவர் பல முறை ஸ்ரீலங்கா அணி வெற்றி பெற உதவியுள்ளார், அவரது ஆஃப் ஸ்பின் பவுலிங்கால்.

  • ஆகஸ்ட் ,1992 ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுக டெஸ்ட் ஆடிய இவர், ஜூலை 2010 ல் கடைசி டெஸ்ட் ஆடினார், இந்திய அணிக்கு எதிராக.

  • ஆட்ட நாயகர் விருதுகள் 11 முறை பெற்றவர்.

  • கடைசி டெஸ்ட் கலே மைதானத்தில் விளையாட கால் வைத்த பொழுது இவர் எடுத்து இருந்த விக்கெட்டுக்கள் எண்ணிக்கை 792.

  • இவரது இலக்கு மேஜிக் எண் 800.
    (Magic Number). தேவை 8 விக்கெட்டுக்கள்.

  • எதற்கும் கவலை கொள்ளாமல் தன்னம்பிக்கை துணையுடன் தனது பந்துக்கள் வீசும் பணியில் ஈடுப்பாட்டுடன் முழு கவனம் செலுத்தினார்.

  • முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 520 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுக்கள் இழந்த நிலையில் டிக்ளர் செய்தனர்.

  • இந்திய அணி முதல் இன்னிங்சில் 276 மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 338 ரன்கள் குவித்தனர்.

இதையும் படியுங்கள்:
நம் கவலையை அடுத்தவருடன் பகிர்ந்துக் கொள்வது சரியா? தெரிஞ்சிக்கலாம் வாங்க!
முரளிதரனும் மோட்டிவேஷனும்!
  • இலங்கை அணி விக்கெட்டுக்கள் இழப்பின்றி 96 ரன்கள் எடுத்து வென்றனர்.

  • முரளீதரன் முதல் இன்னிங்சில் எடுத்தது 5 விக்கெடுக்கள்.

  • இரண்டாவது இன்னிங்சில் அதிக ஓவர்கள் வீசி கைப்பற்றினார் 3 விக்கெட்டுக்களை, கடைசி விக்கெட் உட்பட.

  • முரளிதரன் எடுத்த கடைசி விக்கெட் மேஜிக் எண் 800 ஐ அடைந்து இந்த சிறந்த ஸ்பின் பவுலரின் திறமைக்கு மகுடம் சூட்டியது.

  • உலக ரிகார்டு ஏற்படுத்தப் பட்டது.

  • பலரும் கருதுகின்றனர், இன்றைய பல் வேறு தர கிரிக்கெட் (டெஸ்ட், ஒரு நாள் ஆட்டம், டி 20 ) ஆட்டங்களின் காரணமாக முரளீதரன் சாதித்த 800 டெஸ்ட் விக்கெடுக்கள் சாதனை முறியடிக்க வாய்ப்பு இல்லை என்று. ஒரு வேளை எதிர் காலம் பதில் கூறலாம்.

  • முரளீதரனின் இந்த மாபெரும் சாதனைக்கு பின்னால் அவரது
    அயராத உழைப்பு, எதிர்த்து போராடும் குணம் , தளராத தன்னம்பிக்கை, கடைசி டெஸ்டில் கூட இலக்கை அடைய முடியும் என்ற சிந்தனையுடன் கூடிய செயல் பாடு, அர்ப்பணிப்பு ஆகியவை அவருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்களில் பயணித்து அவர் விரும்பிய பரிசை அளித்தது.

இதையும் படியுங்கள்:
காலத்தைக் கடைப்பிடித்து ஞாலத்தில் சிறந்தவர் யார் தெரியுமா?
முரளிதரனும் மோட்டிவேஷனும்!
  • உடன் சாதிக்க வேண்டும் என்ற வெறி (tenacity), இவரது கேப்டன்கள்,
    சக வீரர்களின் உற்சாகம், ஆதரவு, தொய்வு ஏற்படும் பொழுது உடன் நின்று இவருக்காக போராடிய சந்தர்பங்கள் ஆகியவை
    முரளீதரனின் நம்பிக்கையை வலுப்படுத்தியது.

  • முயன்றால் முடியும் என்பதற்கு முரளீதரனின் டெஸ்ட் கிரிக்கெட் ஒரு உதாரணம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com