தலைவனைப் போல் பேசி எல்லோரும் உங்களை மதிக்கும்படி செய்யுங்கள்!

Leader
Leader
Published on

நம்ம எல்லோருக்குமே மத்தவங்க நம்மள மதிக்கணும்னு ஆசை இருக்கும். குறிப்பா ஒரு லீடரா இருக்கும்போது, அந்த மரியாதை ரொம்ப முக்கியம். ஆனா எப்படி பேசுனா நம்மள எல்லாரும் மதிப்பாங்க? சும்மா கத்தி பேசுறதா, இல்ல அதிகாரமா பேசுறதா?. அதெல்லாம் இல்ல. மத்தவங்க நம்மள மதிக்க ஒரு தலைவனைப் போல் பேசுறது தான் பெஸ்ட். 

முதல் விஷயம் என்னன்னா, தெளிவா பேசுங்க. என்ன பேசறோம்னு தெரியாம உளறிக் கொட்டக்கூடாது. "ம்ம்ம்", "ஆஆஆ"ன்னு இழுக்காம, கரெக்ட்டா பாயிண்ட்டுக்கு வாங்க. பேசும்போது ஒரு தெம்பு இருக்கணும், ஒரு கான்பிடன்ஸ் தெரியணும். சும்மா பயந்த மாதிரி, தயங்குற மாதிரி பேசுனா யாரு மதிப்பாங்க? நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு நீங்களே நம்புனாதான், மத்தவங்களும் நம்புவாங்க.

அடுத்தவங்க பேசுறதை நல்லா கேளுங்க. சும்மா நீங்களே பேசிட்டே இருந்தா போர் அடிக்கும். லீடர்னா மத்தவங்க சொல்றதையும் பொறுமையா கேட்கணும். அவங்க ஐடியாஸ்க்கு மதிப்புக் கொடுக்கணும். யாராவது பேசும்போது தலையாட்டுங்க, கண்ணால பாருங்க. அப்பதான் அவங்க சொல்றதுக்கு நீங்க முக்கியத்துவம் தர்றீங்கன்னு அர்த்தம். சும்மா போனை நோண்டிட்டே இருந்தா எப்படி?

அடுத்தது பாடி லாங்குவேஜ். நீங்க என்ன பேசுறீங்களோ, அது உங்க உடம்பு மொழியிலயும் தெரியணும். நிமிர்ந்து நில்லுங்க, நேரா கண்ணை பார்த்து பேசுங்க. கையை கட்டிட்டு இறுக்கமா நிக்காம, கொஞ்சம் ஃப்ரீயா ரிலாக்ஸா இருங்க. முகம் ரொம்ப முக்கியம். சிரிச்ச முகத்தோட பேசுனா பாதி பிரச்சனை தீர்ந்துடும். சும்மா உம்முன்னு இருந்தா யாருக்குத்தான் பிடிக்கும்?

இன்னும் முக்கியமான விஷயம், மத்தவங்களை மதிக்கிறது. பேசும்போது மரியாதையா பேசுங்க. "நீங்க", "தயவு செய்து", "நன்றி" இதெல்லாம் யூஸ் பண்ணுங்க. எல்லாரையும் ஒரே மாதிரி நடத்துங்க. யாரையும் சின்னப் படுத்தி பேசாதீங்க. மத்தவங்களோட கருத்துக்கு மதிப்புக் கொடுங்க. அப்பதான் அவங்க உங்களை மதிப்பாங்க. மரியாதை கொடுத்தா தான் மரியாதை கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
ஒரு நல்ல படம் எப்படி இருக்கணும் தெரியுமா?
Leader

ஒரு லீடரைப் போல் பேசறதுக்கு, தெளிவு, கான்பிடன்ஸ், அடுத்தவங்க பேச்சைக் கேட்கிறது, நல்ல பாடி லாங்குவேஜ், எல்லாரையும் மதிக்கிறது இதுதான் ரொம்ப முக்கியம். இதுக்கெல்லாம் கொஞ்சம் பிராக்டிஸ் வேணும். உடனே வராது. ஆனா ட்ரை பண்ணிட்டே இருந்தா கண்டிப்பா லீடரைப் போல் பேசலாம். எல்லோரும் உங்களையும் மதிப்பார்கள். ஈஸியா சொல்லிட்டேன்னு நினைக்கிறேன், புரியும்னு நம்புறேன். ட்ரை பண்ணி பாருங்க, வொர்க் அவுட் ஆகும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com