ஒவ்வொரு நாளையும் புன்னகையோடு தொடங்குங்கள்!

Start every day with a smile!
Image credit - pixabay
Published on

மக்கு நிகழ்கின்ற அனைத்தும் நம்முடைய மாபெரும் நன்மைக்காகவே நிகழ்கின்றன என்ற விழிப்புணர்வை தன் தக்க வைத்துக் கொள்வது, நம்முடைய வாழ்வில் புதிய விளைவுகளை உருவாக்குவதில் உள்ள மிகக் கடினமான பகுதியாகும். அந்த விழிப்புணர்வை மறந்துவிட்டு நாம் சூழ்நிலைக் கைதிகளாகிறோம். இந்த விழிப்புணர்வை தக்க வைப்பதற்கு நாம் கடினமாக முயற்சிக்க வேண்டியுள்ளது. ஆனால் அது நமக்குத் தக்க வெகுமதிகள் கொண்டு வரும்.

இந்த விழிப்புணர்வை தக்க வைக்க சிறந்த வழிகளில் ஒன்று "நமக்கு நிகழ்கின்ற அனைத்தும் நம்முடைய மாபெரும் நன்மைக்காகவே நிகழ்கின்றன என்ற வாசகத்தை பல துண்டுக் காகிதங்களில் எழுதி உங்கள் பார்வையில் படும்படி  ஆங்காங்கே ஓட்டி வைப்பதாகும். உங்கள் குளியலறைக் கண்ணாடி, காரின் முன்பகுதி, உங்கள் ஒப்பனை அறைக்கண்ணாடி, உங்கள் அலமாரியில் உட்பகுதி போன்ற இடங்களில் ஒட்டி வைப்பது மிகச் சிறந்த வழியாகும்.

நீங்கள் ஒரு கடினமான சூழ்நிலையை எதிர் கொள்ளும்போது, நாம் சற்றுமுன் குறிப்பிட்ட அப்பேருண்மையை உங்களுக்கு நீங்களே  நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.  உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை  உங்களுக்கு நன்மை பயப்பதற்காகவே  ஏற்பட்டுள்ளது போலக் கருதி அதன்படி நடந்து கொள்ளுங்கள். 

உங்களுடைய கடுமையான  சூழ்நிலை ஓர் அற்புதமான விளைவை உங்களுக்குப் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பதாக கற்பனை செய்யுங்கள். ஓர் அற்புதமான பரிசோ அல்லது மகிழ்ச்சியூட்டும் தகவலோ  உங்களுக்குக் கிடைத்திருப்பதுபோல்  நடந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்பட்டுள்ள  மிக மோசமான விஷயம் என்ற பழைய நம்பிக்கையில் இருந்து முளைக்கின்றன. எதிர்மறை ஆற்றலை ஒரு நேர்மறையான பாதைக்குள் திருப்பி விடுங்கள். 

இதையும் படியுங்கள்:
தியானத்தின் மூலம் மன அமைதி தரும் மனதின் மாண்பு!
Start every day with a smile!

உங்களுடைய தற்போதைய சுழ்நிலை உங்களுக்கு ஒரு மாபெறும் அனுகூலத்தைக் கொண்டுவர இருப்பதாக. உங்களுக்கு நீங்களே கூறிக்கொள்ளுங்கள். இந்த இயற்கை விதிப்படி, இப்புதிய எண்ணங்களும் நடவடிக்கைகளும் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரக் கூடிய விளைவுக்கு இட்டுச் செல்லும்.

உங்களுடைய ஒவ்வொரு நாளையும் மென்மையாகவும் புரிதலோடும் அணுகுவதற்கு  புன்னகையோடு ஒவ்வொரு நாளையும் தொடங்குங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com