மாற்றி யோசி - திறமைகளை ஆர்வமாக மாற்றுவதற்கான உத்திகள்!

motivation article
motivation articleImage credit - pixabay

பொதுவாக எல்லோரும் ஆர்வத்தைதானே திறமையாக மாற்றிக்கொள்ள முடியும் என்று கூறுவார்கள். நமக்கு நிறைய விஷயங்களில் ஆர்வம் இருக்கும். ஆனால் அவற்றை திறமையாக வளர்த்துக் கொள்வதற்கு நிறைய ஆர்வமும் முயற்சியும் தேவைப்படும். நமக்கு நிறைய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். இவை தற்காலிகமான ஆர்வங்கள். அவற்றை திறமையாக மாற்ற நாம் முயற்சித்தால் அதுவே வெற்றி கிடைக்க வழிவகுக்கும்.

என் அக்கா அழகாக வீணை வாசிப்பார். அவர் வாசிக்கும் போது நாமும் எப்படியாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றும். அவரிடமே கற்றுக் கொள்ளலாமா என்று கூட யோசனை தோன்றும். ஆனால் இவையெல்லாம் அவர் எப்போதெல்லாம் வாசிக்கிறாரோ அப்போது மட்டுமே அந்த ஆர்வம் எனக்குள் ஏற்படும்.  ஆனால் அந்த ஆர்வத்தை திறமையாக மாற்றிக்கொள்ள முயற்சி எடுப்பதே வெற்றிக்கு வழிவகுக்கும். இப்போது புரிகிறதா வெறும் ஆர்வத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்று. அதனை திறமையாக மாற்றிக் கொள்ள கடினமாக உழைக்க வேண்டும் என்று.

ஒரு ஆர்வம் திறமையாக மாற நம்மால் ஆன முயற்சியை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். நமக்கு இருக்கும் பல வேலைகளுக்கு இடையில் அதற்காகவும் நேரத்தை செலவிட (ஒதுக்க) வேண்டும். 

இதற்கு யாருடைய உதவியும் தேவைப்பட்டால்  கேட்க தயங்க கூடாது. ஆனால் அந்த உதவி ஒரு சதவீதம் என்றால் நம் பங்கு 99 சதவீதம் இருக்க வேண்டும். அத்துடன் அந்த உதவி பாதியில் நின்று விட்டாலும் நாம் அதை விட்டு விடாமல் ஆர்வமுடன் முயற்சித்து முன்னேற வேண்டும். 

ஆர்வமும் முயற்சியும் இருந்தாலே நிச்சயமாக அது நம் திறமையாக மாறிவிடும். கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

திறமைகளை ஆர்வமாக மாற்ற:

திறமை என்பது நம்மிடம் இருக்கும் ஒன்று. அதனை வளர்த்துக் கொள்ள ஆர்வம் மிகவும் தேவைப்படுகிறது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை பதுங்கி இருக்கும். அதை கண்டுபிடித்து ஆர்வமுடன் செயலாக மாற்ற வேண்டிய பொறுப்பு நம்முடையது.

இதையும் படியுங்கள்:
ஆளுமை தருமே நமக்கு அடையாளம்!
motivation article

ஓவியம் வரைவது, சிற்பங்கள் செதுக்குவது, நாட்டியம் ஆடுவது, சமைப்பது, வீட்டை நிர்வாகம் செய்வது இப்படி வகை வகையான திறமைகள் இருந்தும் ஆர்வம் இல்லை என்றால் நம்மால் வெற்றி பெற முடியாது. எனவே திறமைகளை ஆர்வமாக மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். சிலரிடம் அந்த திறமைகள் சிறுவயதிலேயே இயற்கையாக வெளிப்பட்டு விடும். ஆனால் பலருக்கு ஏதோ ஒரு தூண்டுதல் தேவைப்படுகிறது.  அந்த தூண்டுதலை பெற்றதும் சிலர் கற்பூரம் போல் பிடித்துக் கொண்டு உயரத் தொடங்குவார்கள். திறமைகளை ஆர்வமாக மாற்றுவதற்கான உத்திகள் இவை.

திறமை என்பது வளர்த்துக் கொள்வது. பிறப்பில் வருவது அல்ல. திறமைகளை ஆர்வமாக வளர்த்தெடுப்பது சிறந்தது.

நம் திறமைகளை அப்படியே விட்டு வைக்காமல் ஒரு சிற்பி சிற்பத்தை செதுக்குவதுபோல் ஒவ்வொரு நாளும் அதை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல திறமைகளை ஆர்வமாக மாற்றுவதற்கான சிறந்த உத்தியாகும். செய்வோமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com