பணக்கஷ்டம் தீர உங்க ஆழ்மனம் என்ன செய்யணும் தெரியுமா?

பணத்தை ஈர்க்கும் ரகசியம் உங்கள் ஆழ்மனதில் உள்ளது. அதை மாற்றுவது எப்படி?
செல்வம்
செல்வம்Gemini image
கலைமதி சிவகுரு

கலைமதி சிவகுரு, 1983-ல் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவரது படைப்புகள் மங்கையர் மலர், தேவதை, தினத்தந்தி குடும்ப மலர் இதழ்களில் வெளியாகிப் பரிசுகள் பெற்றுள்ளன. தற்போது கல்கி குழுமத்தில் எழுதுகிறார். சமையல், ஆன்மிக வாசிப்பு, தையல் கலையில் ஆர்வம் கொண்டவர்.

Updated on: 

செல்வம் என்பது ஒரு தனி மனிதன் தன்னுடைய ஆழ் மனத்தை நம்பவைப்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. “நான் ஒரு இலட்சாதிபதி என்று வெறுமனே கூறிக்கொண்டு திரிவதால் ஒருவர் இலட்சாதிபதி ஆகிவிட முடியாது. செல்வத்தையும், செழிப்பையும் பற்றிய எண்ணங்களை உங்கள் மனப் போக்கில் உருவாக்குவதன் மூலம் நீங்கள் செல்வம் பற்றிய விழிப்புணர்வு கொண்டவராக வளர்வீர்கள்.

ஒருவருக்கு துணைபுரியும் கண்ணுக்கு புலப்படாத கருவிகள்: ஒருவர் வியாபாரம் நொடிந்துவிடும் போதோ, பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும் போதோ அல்லது தங்கள் முதலீட்டில் நஷ்டம் ஏற்படும் போதோ அவர்கள் நிராதவராக உணர்கிறார். ஆழ்மனதை எப்படி பயன்படுத்துவது என்பதை அவர்கள் அறியாதிருப்பது தான் இதற்கு காரணம். அவரிடம் இருக்கும் வற்றாத களஞ்சியத்தைப் பற்றிய அறிவு அவரிடம் இல்லை என்பதுதான்.

ஏழ்மை சூழ்ந்திருக்கும் மனத்தை உடையவர் தன்னை ஏழ்மையான சூழ் நிலையிலேயே வைத்திருப்பார். செல்வ வளம் குறித்த எண்ணங்களைக் கொண்ட ஒருவர் தனக்கு தேவையான எல்லாவற்றாலும் சூழப்பட்டிருப்பார். நாம் வறுமை மிக்க வாழ்க்கை வாழ்வதற்காகப் படைக்கப்படவில்லை.

நாம் செல்வத்தையும் நமக்குத் தேவையான அனைத்தையும் பெறலாம். நமக்கு போக மற்றவர்களுக்குக் கொடுக்கவும் நம்மிடம் ஏராளமாக இருக்கும். நம் மனதில் உள்ள தவறான எண்ணங்களைக் களைந்து விட்டு அவ்விடத்தில் சரியான எண்ணங்களை இட்டு நிரப்பும் சக்தி நம் வார்த்தைகளுக்கு உள்ளது.

செல்வத்தைப் பற்றிய விழிப்புணர்வு பெறுவதற்கான வழி: நாம் மனதார விரும்புவதைச் செய்வோம். அதிலிருந்து கிடைக்கும் அளவில்லா மகிழ்ச்சிக்காகவும், கிளர்ச்சிக்காகவும் மட்டுமே செய்வோம். செல்வமும், வெற்றியும் தேவை என்றால் செய்ய வேண்டியது “செல்வம் வெற்றி” என்று ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை தொடர்ந்து மனதுக்குள் ஐந்து நிமிடங்கள் கூறலாம்.

இவ்வார்த்தைக்கு அபரிமிதமான சக்தி உள்ளது. இவை ஆழ்மனச் சக்தியின் பிரதிநிதிகள். நமக்குள் குடிகொண்டிருக்கும் கணிசமான இச்சக்தியின் மீது மனதை நிலைப்படுத்தலாம். பின்னர் அவற்றின் இயல்புக்கும், தன்மைக்கும் ஏற்ற சூழ்நிலைகளும், சந்தர்ப்பங்களும் நம் வாழ்வில் உருவாக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
எடிசன், ராக்பெல்லர் உயரத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் ரகசியம் என்ன?
செல்வம்

நாம் செல்வம் என்று கூறும்போது நம் மனதில் எவ்வித முரண்பாடும் இல்லை. மேலும் அதே எண்ணத்தில் திளைத்திருக்கும்போது அது குறித்த உணர்வு நமக்குள் பொங்கியெழும். நம் ஆழ்மனம் ஒரு வங்கியைப் போன்றது. அதில் பதியப்படும் எதையும் அது பன்மடங்காக்கும்.

ஆழ்மனம் கூட்டு வட்டியை வழங்குகிறது: நாம் ஆழ்மனதில் சேமித்து வைக்கும் அனைத்தையும் அது பன்மடங்காகப் பெருக்கும். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன், செழிப்பு, வெற்றி, செல்வம் மற்றும் அமைதி குறித்த எண்ணங்களை அதில் இடும் கொள்கையின் மூலம் ஈடுபாடு கொள்ளலாம்.

முடிந்த போதெல்லாம் இவற்றைக் கொண்டு அடிக்கடி மனத்தை சுறுசுறுப்பாக்கலாம். ஆக்கப்பூர்வமான இவ்வெண்ணங்கள் ஆழ்மனதில் சென்றடைவதற்கான வழியைக் கடைபிடித்து அதில் போய் அமர்ந்துகொண்டு செழிப்பையும், விருத்தியையும் கொண்டு வருவோம்

செல்வம்
செல்வம்Gemini image

பற்றாக்குறைக்கான உண்மையான காரணம்: வாழ்கையை ஓட்டுவதற்குக் கூட எப்போதும் பெருமுயற்சி வேண்டியிருப்பதாக பலர் புலம்புகின்றனர். பல சமயங்களில் அவர்களது உரையாடல்கள் எப்படி இருக்கும் என்றால் “வாழ்க்கையில் வெற்றி பெற்று உயர்ந்த நிலையில் இருப்பவர்களை நினைத்து வசை பாடிக் கொண்டிருப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
சிங்கமா அல்லது குரங்கா? நீங்கள் எதை தேர்வு செய்யப் போகிறீர்கள்?
செல்வம்

அவர்கள் பிறரை “ஓ அந்த ஆள் மோசமானவன்; அவனுக்கு ஈவு இரக்கமே கிடையாது; அவன் ஒரு ஏமாற்றுப் பேர்வழி”, என்று கூட கூறிக்கொண்டிருக்கலாம். இதனால்தான் பற்றாக்குறையை அனுபவிக்கிறார்கள். அவர்களது செழிப்பைப் பார்த்துப் பொறாமையும், பேராசையும் கொண்டு அவர்களை பழித்து பேசுவதால் செல்வமான இலட்சுமி அவர்களை விட்டு வெகுதூரம் சென்று விடுவதற்கான காரணம் ஆகும். அதனால் செல்வத்தை உருவாக்குவதில் உள்ள தடையை அல்லது முட்டுக் கட்டையை மனதில் இருந்து தகர்த்தெறிந்து விட்டு மனதளவில் மற்றவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்துவதன் மூலம் செல்வத்தை அடையலாம்.

உறங்க செல்லும் முன், “செல்வம்” என்னும் வார்த்தையை மெதுவாகவும், அமைதியாகவும் சுமார் ஐந்து நிமிடங்கள் சொல்வதனால் ஆழ்மனமானது செல்வத்தை நம்மிடம் கொண்டு வந்து குவிக்கும்.

பற்றாக்குறை எண்ணங்களை நீக்கி, தங்கள் ஆழ்மனதை மறுசீரமைப்பதன் மூலம் செல்வ வளத்தையும் வெற்றியையும் இயல்பாக ஈர்ப்பது எப்படி என்பதை வாசகர்கள் தெரிந்து கொள்கிறார்கள்.