வலிக்கு பின்னால்தான் வெற்றி வரும்!

motivation article...
motivation article...
Published on

காலையில் நாம் எழுந்த உடனே நாம் அன்றாட பணிகளை தொடங்கும் பாசிட்டிவான சிந்தனைகள் பல நம் மனதில் வரவேண்டும், இன்றைக்கு நாம் செய்யும் செயல் சரி வருமா இது நடக்குமா? நடக்காதா என நம் மனதுக்குள்ளேயே ஒரு நெகட்டிவ் போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

நம்மில் பலரும் காலையில் எழுந்ததும் இன்று நமக்கு என்ன இருக்கு என்று ஜோதிடம் பார்க்க பலரும் தவறுவதில்லை. ஆனால் உண்மையில் நல்ல மனசுடன் ஆரம்பிக்கும் எல்லா நாளுமே நல்ல நாள்தாங்க. அதற்காக ஜோதிடம் தவறு என்று சொல்ல வரவில்லை. மனசை எப்போதும் பாசிட்டிவா வச்சுக்கிட்டா, அன்றைய நாள் முழுவதுமே பாசிட்டிவாகத்தான் இருக்கும்.

அப்படி செய்யாமல் காலை எழுந்ததுமே இன்றைக்கு ஒரு காரியமும் நடக்காது என்ற நெகட்டிவ் எனர்ஜி உடனே நாம் நாளை துவங்கினால் அது எதிர்மறையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். 

காலையில் எழுந்தவுடன் இறைவனை வணங்குங்கள். மனதில் நல்லதையே நினையுங்கள். இந்த நாள் எனக்கு சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று மனதார வேண்டுங்கள். உங்கள் வேலைகளைத் திட்டமிட்டுச் செய்யுங்கள். முழு ஈடுபாட்டோடு உங்கள் செயலைச் செய்தால் வெற்றி நிச்சயம்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு எப்பொழுதுமே இன்னைக்கு நாள் நல்லா இல்லை இன்னைக்கு எனக்கு நேரம் சரியில்லை இன்னைக்கு என்னால் முடியாது இப்படி பல சாக்குப் போக்கு சொல்லியே ஒவ்வொரு செயல்பாட்டையும் தள்ளி போடுவார்கள் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் தெரியுமா?

தோல்வியடைந்து வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும்தான் தெரியும் அந்த வெற்றிக்கு பின்னால் எவ்வளவு வலி இருக்கிறது என்று. அதனால் வலி அடைந்தால்தான் நம் வழிக்கு வெற்றி வரும். தோல்வி அடைந்தால் துவண்டு விடாமல் என்னுடைய வெற்றி கொஞ்சம் தள்ளிப் போயிருக்கிறது என்று நினைத்து உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். இந்த நாள் எனக்கு எப்படி இருக்குமோ என்று நினைக்காமல் இந்த நாள் எனக்கு வெற்றிகரமாக இருக்கும் என்று நினைத்து முழுமனதோடு உங்கள் வேலைகளில் ஈடுபடுங்கள்.

இதையும் படியுங்கள்:
உலகின் மிகச் சிறிய முட்டை இடும் பறவை எது தெரியுமா?
motivation article...

எது நடந்தாலும் அது நன்றாகவே நடக்கும் என்று நினைத்து உங்கள் வேலையைத் தொடங்குங்கள். மனதை பாசிட்டிவ் ஆக வைத்துக் கொண்டாலே.வாழ்வில் எல்லாமே பாசிட்டிவ்தான்.

நீங்கள் எந்த காரியம் செய்தாலும் சரி முதலில் அதன் மீது நம்பிக்கை வையுங்கள் அதைவிட மிக முக்கியம் உங்கள் எதிரில் இருப்பவர்களும் உங்களை சுற்றி இருப்பவர்களின் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். யாரையும், எதையுமே வாழ்க்கையில் அலட்சியமாக நினைக்காதீர்கள். அப்படி நினைத்தால் நம்மை தோல்விதான் தொடரும்.

மனதில் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்க வேண்டும் என்றால் நம் எண்ணமும் செயல்பாடும் அதற்கு தகுந்தார்போல் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். நம்மால் முடியும் நம்மால்தான் முடியும் என்ற ஒரு எண்ணம் ஒரு செயலை தொடங்கும் முன் நமக்கு வந்து விட்டாலே போதும் வெற்றிகள் நம்மை அனைவருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com