நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்!

Facing challenges
Self trust
Published on

லகில் வாழும் ஒவ்வொருக்கும் கடினமான சூழலில்தான் தங்கள் வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள். கடந்த காலங்களை விட தற்போது அனைவரும் எதிர்நோக்கும் பிரச்னைகளின் எண்ணக்கையும் அதிகம். அவற்றை எதிர்கொண்டு, அதை முழுமையாக புரிந்துகொண்டு சமாளித்து வெற்றிகரமாக கடந்து வாழ்க்கையை எதிர்கொள்ள பல வழிகளில் மேற்கொள்ள வேண்டும்.

சவால்களை எதிர்கொள்ளல்

எந்த ஒரு பிரச்னையை சந்திக்கும் போதும் நம்மால் அது முடியாது என நினைத்தால் அது எதிர்வினை ஆற்றி, அந்த செயலை சிந்திக்க முடியாமல், செய்ய இயலாது. நம்மால் முடியும் என்று நினைத்து அதனை அணுகினால் அதன் மூலம் வரும் கஷ்டங்கள், சிரமங்கள் கூட நமக்கு பாடங்களைக் கற்றுக் கொடுத்து, அது நம் சவாலுக்கு படிக்கல்லாகக்கூட அமையும்.

திட்டமிடுதல்

நாம் எதையும் திட்டமிடாமல் செய்தால் அது பெரிதாகத்தான் தெரியும். அதையே திட்டமிட்டு செயல்படுத்தினால்  மிக எளிதாக எந்தப் பிரச்னையையும் அணுகலாம். ஒரு பிரச்னை கண்டு ஒருவர் தெரிந்து ஓடுகிறார் என்றால் அவருக்கு சரியான திட்டமிடுதல் இல்லை என்பதுதான் காரணம்.

சரியான நண்பர்களை தேர்வு செய்ய வேண்டும்

சிலருக்கு ஏராளமான நண்பர்கள் இருப்பார்கள். நல்ல நண்பர்களை தேர்வு செய்ய வேண்டியது மிக அவசியமானது. நண்பர்களில் சிலர் நம்மை விட  அவள் உயரத்துக்கு சென்று விடக்கூடாது என்ற உள்ளவர்களாக இருப்பார்கள் அவர்கள் பிரச்னைக்கு நிச்சயமாக தீர்வு சொல்ல மாட்டார்கள். இன்னும் சில எதிர்மறை சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள். எடுத்த எடுப்பிலேயே உன்னால் சமாளிக்க முடியாது என்று சொல்லிவிடுவார்கள்.

இதனால் நமக்கு பிரச்னைகளை எதிர்கொள்ளவே தயக்கம் ஏற்படும். அதனால் நல்ல நண்பர்களை தேர்வு செய்து கூறலாம்.

இதையும் படியுங்கள்:
எப்போதும் தயார் நிலையில் இருங்க. ஏன் தெரியுமா?
Facing challenges

நம்மை நாமே தயார் செய்தல்

உலகின் உயரிய இடத்திற்கு செல்லவேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் தம் பிரச்னைகளுக்கு வரும் இடர்களை தெரிந்து கொண்டு அதை எதிர்கொள்ள நம்மை நாமே தயார்படுத்தினால் மட்டுமே உயரிய இலக்குகளை அடைய முடியும்.

நம்மிடமே இருக்கு உறுதி

மது அடுத்துதல், புகை பிடித்தல் போன்ற திய பழக்கங்கள் இருக்கும் ஒருவர் உண்மையாக சுயமாகவே யோசித்து, விடவேண்டும் என்று நினைத்தால் மட்டுமே விட முடியும். மாற்றம் வேண்டும் என்று நினைத்தாலும், அது நம்மிடமே இருந்துதான் உருவாக வேண்டும். 

கால அவகாசம்

குறிப்பிட்ட பிரச்னையைத் கேட்பதற்கு என்னிடம் போதுமான நேரம் இல்லை அதிக வேலைகள் குவிந்து கிடக்கின்றன என்று கூறக்கூடாது. பிரச்னையை தீர்ப்பதற்காக ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தை எடுத்துக்கொண்டு மற்றவர்கள் எவ்வாறு எதிர் கொண்டார்கள் என்பதை தெரிந்து கொண்டு செயல்பட்டால் பிரச்னை நமக்கு பிரச்னையாக இருக்காது. நமது வெற்றியும், தோல்வியும் நாம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com