வெற்றி அடைய வேண்டும் என்றாலுமே பொறுமை தேவை!

Success requires patience!
Motivational articles
Published on

ம் வாழ்க்கையில் நாம் செய்யும் முயற்சிகளுக்கு கடின உழைப்பை போட்டிருந்தாலும், வெற்றியடைய பொறுமை என்பது மிகவும் அவசியமாகும். எந்த ஒரு காரியமும் செய்த உடனேயே அதற்கான பலன் நமக்கு கிடைத்து விட போவதில்லை. எனவே, பலனைப்பெற பொறுமையாக காத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இதை தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.

ஒரு காட்டில் இருக்கும் குரங்கிற்கு ஒருநாள் மாம்பழம் ஒன்று கிடைத்தது. அதை சப்பிட்டுவிட்டு மாங்கொட்டையை தூக்கிப் போடலாம் என்று நினைத்த குரங்குக்கு ஒரு யோசனை வருகிறது.

‘அதாவது அந்த மாங்கொட்டையை மண்ணுக்குள் புதைத்து வைத்து மாமரத்தை வளர்த்தால் என்ன?’ என்று குரங்கு எண்ணுகிறது. ‘நாம் நினைத்த நேரத்திற்கு நம் இஷ்டத்திற்கு மாம்பழத்தை பறித்து சாப்பிடலாமே!’ என்று குரங்கு நினைக்கிறது. எனவே, ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கே மாங்கொட்டையை நன்றாக புதைத்து வைத்து அதற்கு தண்ணீரும் விட்டது.

மறுநாள் குரங்கு மாங்கொட்டையை புதைத்த இடத்திலிருந்து தோண்டி எடுத்து, ‘அது முளைத்திருக்கிறதா?’ என்று பார்த்தது. ‘மாங்கொட்டை இன்னும் முளைக்கவில்லையே?’ என்று எண்ணிக் கொண்டு மறுபடியும் புதைத்து அதற்கு தண்ணீர் ஊற்றியது. இப்படி தினமும் மாங்கொட்டையை எடுத்து பார்ப்பதும், புதைப்பதுமாகவே இருந்தது. இப்படியே அந்த குரங்கு தினமும் செய்துக் கொண்டிருந்ததால், அந்த மாங்கொட்டை கடைசி வரை முளைக்கவேயில்லை.

அந்த குரங்குடைய மனசு மாம்பழத்தை பறித்து சாப்பிட வேண்டும் என்று இருந்ததே தவிர, மரத்தை வளர்ப்பதில் இல்லை. குரங்குடைய ஆசை நியாயமானதாக இருந்தாலும், குரங்குடைய அவசரம் நியாயமற்றது.

இதையும் படியுங்கள்:
நாம் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. ஏன் தெரியுமா?
Success requires patience!

இந்தக் கதையில் சொன்னதுப் போலதான். எப்படி ஒரு விதை முளைத்து மரமாக கால அவகாசம் தேவைப்படுகிறதோ? அதைப்போல பெரிய பெரிய வெற்றிகளுக்கு முயற்சிகளுடன் கூடிய பொறுமை மிகவும் அவசியமாகும். நல்லது எப்போதுமே மெதுவாக தான் நடக்கும். எனவே, சோர்ந்து போய் முயற்சிகளை கைவிட்டு விடாதீர்கள். பொறுமையாக காத்திருந்து வெற்றி என்னும் கனியை சுவையுங்கள். இதை தெளிவாக புரிந்துக்கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com