
பொதுவாக சிலருக்கு தான் பாா்க்கும் அரசு வேலை, தனியாா் வேலை அல்லது தொழில், இவைகளில் நாட்டம் குறைந்து விடும். வேலைப்பளு அதிகமாக உள்ளது. அரசு வேலை என சொன்னாலும் ஓய்வூதியம் கிடையாது. சிலர் செய்யும் தவறான காாியங்கள் பிடிக்கவில்லை. மேலதிகாாிகளின் தொல்லை, டாா்ச்சர் தாங்க முடியவில்லை என பலவாறு புலம்புவாா்கள். மொத்தத்தில் குறை அவரிடம் தான் உள்ளது.
ஒன்று அவருக்கு வேலைதொியவில்லை அல்லது யாாிடம் எப்படி நடந்து கொள்வதென்ற நெளிவு சுளிவு புாியவில்லை என்றே எடுத்துக்கொள்ளலாம். அதேபோல தனியாா் தொழில் முதலாளிகள் அதிகமாக வேலை வாங்குகிறாா்கள். வாங்கும் ஊதியத்திற்கேற்ப கூடுதல் வேலை பாா்க்க வேண்டியுள்ளது.வேறு நல்ல வேலை கிடைத்தால் இதை விட்டுவிடலாம். இப்படி பலர் புலம்புவாா்கள்.
ஒரு பத்துதொழிலாளிகள் வேலை பாா்க்கும் நிலையில் இவர் மட்டும் ஏன் இப்படி புலம்புகிறாா்? அவரும் இக்கரைக்கு அக்கரை பச்சை பாா்க்கும் ரகம்தானோ?
அடுத்தது சொந்த தொழில் தொடர்பானது. அவரோ வியாபாரம் சரியில்லை ,கடன் கொடுக்க வேண்டியுள்ளது. எதிர் புறம் கடை வைத்திருப்பவருக்கு நல்ல ஓட்டம். நமக்கு ஏன் இப்படி நேரம் சரியில்லையோ என்ற புலம்பல். ஆக அவரது கணிப்பின்படி அவருக்கு வியாபார யுக்தி தொியவில்லை என்றே கருதலாம்.
எதை வாங்கி, எப்படி விற்பது என்ற நோக்கம், வியாபார தந்திரம் தொியவில்லை என்றே சொல்லலாம். முதலில் ஒவ்வொருவரும் அவரவர் செய்து வரும் தொழிலை நேசிக்கவேண்டும்.
பொதுவாக கிராமத்தில் சொல்லுவாா்கள் வயலில் நட்ட பயிா்களை தினசரி முதலாளி வந்து பாா்த்தாலே அவைகள் சந்தோஷம் அடையுமாம். நன்கு வளருமாம். அதேபோல செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் என்ற பழமொழிக்கேற்ப நாம் முழு ஈடுபாடுகளுடன் செய்து வரும் தொழிலை நேசித்தாலே போதும். அநேகமாக அனுபவம் இல்லாத, தொியாத ,தொழிலை செய்யவேகூடாது. அதேபோல அரசு வேலை பாா்ப்பவர் அனுபவம் வாய்ந்த சக ஊழியர்களிடம் சந்தேகங்களை கேட்டுத்தொிந்து செயல்படவேண்டும். அதோடு தனியாா் முதலாளியிடம் பணிபுாியும் நபர் விசுவாசமாக உண்மையாக தனது உழைப்பை ஈடுபாட்டோடு மேற்கொள்வதே நல்லது.
அந்த காலத்தில் ஒரு பழமொமி சொல்லுவாா்கள். என்னவென்று தொியுமா ? "தொியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்". "தொிந்த தொழிலை விட்டவனும் கெட்டான்." என்ற வாக்கியத்தின் தன்மையை உணர்ந்து செயல்படுவதோடு, உண்மை, உழைப்பு, நோ்மை ,விடாமுயற்சி ,சரியான திட்டமிடுதல், சோம்பல் தவிா்த்தல், தெய்வநம்பிக்கையை தொடருதல் ,நோ்மறை சிந்தனையை கடைபிடித்தல், எதிா்மறை சிந்தனையை தவிா்த்தல் இவைகளை தொடந்து கடைப்பிடித்தாலே போதும் நமது வெற்றி நமக்காகவே காத்திருக்கும். அதை சரிவர பயன்படுத்தினாலே போதும் எல்லாம் நன்மையாகவே முடியும் முயற்சியே வெற்றியை தேடித்தரும்"!